Sunday, December 22, 2024

how many animals do you know in the stock market

Do you know How many Animals in Stock Market

1. Bulls – Optimistic investors who believe the market will rise.

2. Bears – Pessimistic investors expecting a market decline.

3. Rabbits – Traders who hold positions for a very short time.

4. Turtles – Long-term investors who trade slowly and focus on long-term gains.

5. Pigs – Greedy and impatient traders who take high risks and often lose.

6. Ostriches – Investors who ignore negative market news, hoping their investments survive.

7. Chickens – Fearful investors who avoid risk and stick to safe investments.

8. Sheep – Investors who follow the majority without independent strategy.

9. Dogs – Stocks beaten down by the market but expected to recover.

10. Stags – Opportunistic traders who look for quick gains, especially from IPOs.

11. Wolves – Traders who use unethical methods to manipulate the market for profit.

Bonus:
 
Whales – Big investors who can move markets.

Sharks – Traders focused solely on making quick profits.

Dead Cat - Bounce – A temporary recovery during a downtrend.

Sunday, November 17, 2024

எது கெடும்

*எது கெடும் ?* 

அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், *தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......* 

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு..

all letters sentence


Let us have insight into this .. .... Just to beat bored box....

"The quick brown fox jumps over the lazy dog" (which has 35 letters) and use standard written English without abbreviations or proper nouns:

"Waltz, bad nymph, for quick jigs vex." (28 letters)

"Glib jocks quiz nymph to vex dwarf." (28 letters)

"Sphinx of black quartz, judge my vow." (29 letters)

"How quickly daft jumping zebras vex!" (30 letters)

"The five boxing wizards jump quickly." (31 letters)

"Jackdaws love my big sphinx of quartz." (31 letters)

The search successfully comes to an end when the phrase "Pack my box with five dozen liquor jugs" (32 letters) was discovered.

Not only the above these are some below content for search

1. Panalphabetic window

2. Pangrammatic window

3. Pangrammatic lipogram

4. Heterogram - word, phrase, or sentence in which no letter of the alphabet occurs more than once

5. Lipogram, in which the aim is to omit one or more letters from a sentence

உறவு

“நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன். விடுமுறைக்காக வந்திருந்த போது ஒரு மணி நேரம் என் அப்பாவுடன் வங்கியில் கழித்தேன், ஏனெனில் அவர் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடியாமல் ஒரு அறிவுரையை கூற முற்பட்டேன் ...

 '' அப்பா, நீங்கள் ஏன் உங்கள் இணைய வங்கியை செயல்படுத்தக்கூடாது? '' என கேட்டேன்.

 '' நான் ஏன் அதைச் செய்வேண்டும்? '' என்று கேட்டார் ...

 '' சரி, நீங்கள் பணமாற்றம் போன்ற விஷயங்களுக்கு இங்கே ஒரு மணிநேரம் செலவிட வேண்டியதில்லை

 உங்கள் ஷாப்பிங்கை ஆன்லைனில் கூட செய்யலாம். எல்லாம் மிகவும் எளிதாக இருக்கும்! '' என்றேன்.

நெட் பேங்கிங் உலகில் அவரைத் கொண்டு போக சொன்னதால் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.

அவர் கேட்டார் நான் அவ்வாறு செய்தால், நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை

 ''ஆம் ஆம்''! நான் சொன்னேன். மளிகை சாமான்கள் கூட இப்போது வாசலில் எப்படி வழங்க முடியும் என்பதையும், அமேசான் போன்ற நிறுவனங்கள் நமக்கு தேவையான எல்லாவற்றையும் எவ்வாறு வழங்குகிறது என்பதை நான் அவரிடம் சொன்னேன்!

*அவரது பதில் என்னை பேசவிடாமல் என் நாக்கை கட்டியது*.

அவர் கூறினார்: '' நான் இன்று இந்த வங்கியில் நுழைந்ததிலிருந்து, எனது நான்கு நண்பர்களைச் சந்தித்தேன், இப்போது என்னை நன்கு அறிந்த ஊழியர்களுடன் சிறிது நேரம் உரையாடினேன்.

நான் தனியாக இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் ... இதுதான் எனக்குத் தேவையான நிறுவனம். நான் தயாராகி வங்கிக்கு வர விரும்புகிறேன். எனக்கு போதுமான நேரம் இருக்கிறது, அது நான் விரும்பும் மனத் தொடர்பு மட்டுமல்ல நெருங்கியவர்களுடன் நேரடித் தொடர்பு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் நோய்வாய்ப்பட்டேன், நான் பழங்களை வாங்கும் கடை உரிமையாளர் என்னைப் பார்க்க வந்து என் படுக்கையில் உட்கார்ந்து என் நிலைக் கண்டு அழுதார்.

உங்கள் அம்மா தனது காலை நடைப்பயணத்தில் சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்த போது. உள்ளூர் மளிகை கடைக்காரர் ஒருவர்தான் அவளைப் பார்த்தார், நான் வசிக்கும் இடத்தை அவர் அறிந்ததால் உடனடியாக அவரது காரில் நம் வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றார்.

எல்லாம் ஆன்லைனில் மாறினால் எனக்கு அந்த 'மனித' தொடர்பு இருக்குமா?

எல்லாவற்றையும் எனக்கு வழங்குவதற்கும், நேரம் செலவழிக்கவும் எனது கணினியுடன் தொடர்பு கொள்ளும்படி என்னை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?

நான் 'விற்பனையாளரை' மட்டுமல்லாமல், நான் கையாளும் நபரை அறிய விரும்புகிறேன். இது உறவுகளின் பிணைப்புகளை உருவாக்குகிறது.

அமேசான் இதையெல்லாம் வழங்குகிறதா? '' 

தொழில்நுட்பம் வாழ்க்கை அல்ல ..
மக்களுடன் நேரத்தை செலவிடுங்கள் . சாதனங்களுடன் அல்ல

உட்கருத்து
அன்பு வியாபாரமல்ல. அது வாழ்க்கையின் அங்கம்.

கருணை என்றால் என்ன?

கருணை என்றால் என்ன?
ஜென்.

ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்து  சலித்து விட்டதால்  ஜென்குருவிடம் வந்து, ஐயா எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன்என கேட்டான்.

குரு, "எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவது ஈடுபட்டதுண்டாஎன கேட்டார்".

இளைஞன் சிந்தித்து விட்டு ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். எனக் கூறினான். 

குரு,,,நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார்.

சதுரங்க அட்டை கொண்டு வரப்பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார். 

குரு, அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் 
நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப்பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன் என்றவர்.

அவனிடம் திரும்பி, இதோ பார், இது வாழ்வா சாவா என்பதற்க்கான போட்டி நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன் என்பதை நினைவில் கொள் என்றார்.

போட்டி தொடங்கியது.

இளைஞனுக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?

துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். 

ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது. 

அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பனிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே என்பதை நினைத்ததுமே அவர் பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது.  

இந்த கருணையை உணர்ந்த அந்த கணமே அவனுக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. 

ஆனால் இந்த துறவி கொலை செய்யப்பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். 

அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்.

குரு,,,மகனே நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார். 

இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக
பிரதிபலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது நீ கருணை உடையவனாகிறாய்.

அன்பு எப்போதும் கருணை மயமானது. 

அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்.

மைக்ரோ கதைகள்

25 மைக்ரோ கதைகள்:

1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை.
-ஜெயா சிங்காரம்

2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.
- பிரபு பாலசுப்பிரமணியன்

3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் நடராஜ்.
-தனுஜா ஜெயராமன்

4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்.
-சி.பி.செந்தில்குமார்

5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை!
-கல்யாணி சேகர்

6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை!
-கவிதா ஹரிஹரன்

7. ஒரு மெளனத்தின் அலறல்!
சைலண்ட் மோடில் செல்போன்!
-மன்னன் உசைன்

8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான்.
-ஆர்.திலகவதி ரவி

9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.
-அ.வேளாங்கண்ணி

10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை!
-ஸ்ரீவித்யா KM

11. அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே!
-தயா.ஜி.வெள்ளைரோஜா

12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு. "கட்'' என்றார் இயக்குனர்.
-விஜி.முருகநாதன்

13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..!
-பழனீஸ்வரி தினகரன்

14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை!
மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்!
-முரளி, மதுரை

15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில். கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்!
-ரெஜி தரகன்

16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள். குழந்தை சிரித்தது. மார்பில் வலி குறைந்தது.
-செல்லம் ஜெரினா

17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா.
'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன்.
-இயக்குனர் ஹரி கணேஷ்

18. "விட்டுடு தம்பி!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன்.
-குமரன் கருப்பையா

19. "Good morning. We are calling from tamil sangam!''
- அப்துல் ரஷீது

20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன்.
-ஜே.குமார் ராம்

21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய!
-லக்‌ஷ்மன் மோகனசந்திரன்

22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக!
-எஸ்.எஸ்.பூங்கதிர்

23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக!
-ஸ்ரீதேவி மோகன்

24. இன்றுடன் உலகம் அழிகிறது!
முழு விபரம் நாளைய நாளேட்டில்!
-ராம் சின்னப்பயல்

25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு!
-கருணாகரன்

யார் நல்லவர்? யார் தீயவர்?

*தங்கமான மனுசன் அவர். தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். யார் விசயத்துலயும் தலையிடமாட்டார். எந்த தப்பு தண்டாலயும் தலைய குடுக்க மாட்டார்* - என்பது நல்லவருக்கான இலக்கணமாய் புரிந்து வைத்திருக்கிறோம்.

மாறாக நீடித்திருக்கும் ஏதேனும் வழக்கத்தை கேள்வி கேட்பவர்களைக் கண்டால் நமக்குப் பிடிப்பதில்லை. தன் வேலையைத் தாண்டி பொது விசயங்களில் தலையிடுபவரை *அடாவடி* என்றும் *அராத்து* என்றும் வெறுக்கத் தொடங்குகிறோம். அடுத்தவர் சிக்கலுக்கோ, பொதுச்சிக்கலுக்கோ நம்மிடம் கேள்வி கேட்பவர்களைப் பார்த்தால் முதலில் என்ன சிக்கல் என்பதைத் தாண்டி *இதில் உன்னோட பிரச்சனை என்ன? நீ யார் கேட்பதற்கு?* - என்பதே முக்கிய கேள்விகளாக நம் நாவில் முன்னுக்கு வந்து நிற்கின்றன.

*உண்மையில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்களே தீயவர்கள்.* ஆகப்பெரிய சுய நலவாதிகள். சமூகத்தில் பிறந்து, சமூகத்தால் ஆளாகியிருக்கும் இவர்கள் சமூகத்துக்கு எந்த பிரதிபலனும் கொடுக்க முன்வராத நன்றி கெட்டவர்கள். ஆதிக்கப் பிரிவினரிடம் நல்ல பெயர் எடுத்துக்கொண்டு தனக்கான சுயநலக் காரியத்தை மட்டும் சத்தமின்றி சாதித்துக் கொள்பவர்கள். ஒருபோதும் தன் உழைப்பை, நேரத்தை, பணத்தை, அறிவை எளியவர்களின் துயர் துடைக்க பயன்படுத்தாத அவமானச் சின்னங்கள்.

சமத்துவம் இல்லாத வாழ்வியல் சூழலில் எந்தத்தருணத்திலும் இவர்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு குரல் கொடுக்க முன்வருவதில்லை. அடக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராட முன் வருவதில்லை. எது அறம் என்பதை விட *நாலு பேர் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்* என்ற போலி அந்தஸ்த்துதான் இவர்களுக்கு முக்கியமாகி விடுகிறது. இதிலிருந்தே இவர்களுடையே கொடூர கல் மனதைக் கண்டுபிடித்துவிட முடியும். 

இதற்கு எதிர் மாறானவர்கள் நம் பார்வையிலான அடாவடிகளும், அராத்துகளும். நாம் நினைப்பது போல் தீயவர்கள் அல்ல அவர்கள். *உண்மையில் அவர்கள் பேரன்பின் வடிவானவர்கள்.* அவர்களால் கண் முன் ஒரு சாரருக்கு நடக்கும் அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எனவேதான் தனது உழைப்பை, நேரத்தை, பணத்தை, அறிவை செலவழித்து பாதிக்கப் படுபவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். எளியவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடுகிறார்கள். மொத்தத்தில் தனக்கென வாழாமல் குரல் அற்றவர்களின் குரல்களாகவே மாறிப் போகிறார்கள்.

*நாலு பேர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்* என்பதையும் தாண்டி *தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை.. அறத்தோடு நிற்பதே முக்கியம்* என்பது இவர்கள் நிலைப்பாடாய் இருக்கிறது. 

எனவே நல்லவர் குறித்தும், தீயவர் குறித்தும் நமக்கான புரிதல்களை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

இனியொருமுறை *தானுண்டு தன் வேலையுண்டு* என்று இருப்பவர்களை நல்லவர்கள் என்று சொல்லாதீர்கள். முடிந்தால் அப்படி இருப்பது எத்தனை பெரிய *அயோக்கியத்தனம்* என்பதை அவர்களுக்கு தன்மையாக விளக்குங்கள்.

இனி எங்கேனும் யாரேனும் அடுத்தவர்களுக்காக குரல் உயர்த்திப் பேசுவதை பார்த்தால் அவரை அடாவடி அராத்து என்று நினைக்காதீர்கள். அந்தச் செயல் உங்களையும், என்னையும் போல் அல்லாமல், *ஒரு கனிந்த இதயத்தின் வெளிப்பாடு* என்பதை அடையாளம் காணுங்கள். 💖

நீங்கள் பயணம் செல்லும் வழியில் யாரேனும் பொதுக்காரியம் எதற்கேனும் தெருவோரம் நின்று போராடிக் கொண்டிருந்தால், அவர்களை ரௌடிகளாக, வன்முறையாளர்களாக நினைக்காதீர்கள். *அவர்களே இவ்வுலகின் ஆகச்சிறந்த பேரன்புக்காரர்கள்* என்று அடையாளம் காணுங்கள். 💖

கடன்

இந்த அருமையான முகநூல்‌ பதிவை பகிர்ந்து கொண்ட அன்பருக்கு நன்றி..

கோவை போகும் வழியில், 
மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய
போது தான், அவரை கவனித்தேன், 

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...

கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய், 

ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,              
நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, 

தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...

டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. 

அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், 
அவர் அமரவே இல்லை. 

இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், 
இயன்றதை தருவது, என் வழக்கம்.

அருகே சென்று, 
தோளைத் தொட்டு திருப்பி, 
நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர், 

மெல்ல புன்னகைத்தே, 
வேணாம் சார் என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.            

ஏனெனில்எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.

ஏன் எனக் கேட்டேன்.

அவங்க கொடுத்திட்டாங்க.. 

" யாரு " 
 
திரும்பி,
பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார். 

நிச்சயமாய்
நான் கொடுத்ததை போல,
அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.

பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும், 

உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், 
எனக்கு மிகவும் பிடித்திருந்தது... 

மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன். 

" பேரென்னங்க ஐயா "

"முருகேசனுங்க " 

" ஊருல என்ன வேல "

" விவசாயமுங்க "

" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "

" நாலு வருசமா செய்றேங்க "

" ஏன் விவசாயத்த விட்டீங்க "

மெல்ல மௌனமானார். 
தொண்டை அடைத்த துக்கத்தை,‌ மெல்ல மெல்ல முழுங்கினார். 

கம்மிய குரலோட பேச துவங்கினார். 

ஆனால், என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும், 

அவரின் முழு கவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே
இருந்தது.

" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க, ஒரு பொண்ணு, 
ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு. 

ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். 

நானும் முடிஞ்சவரை கடன,
உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், 

ஒண்ணுமே விளங்கலே, 

கடைசிவரை கடவுளும் கண்ணே தொறக்கலை.

இதுக்கு மேல தாளாதுன்னு, 
இருக்கிற நிலத்த வித்து, 
கடனெல்லாம் அடைச்சுட்டு, 

மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா
பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.

பையன் இருக்கானே,‌ அவனைப் படிக்க வைக்கணுமே, 

அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு சேர்ந்தேன். 

மூணு வேளை சாப்பாடு. 
தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம். 

இந்த வேலைய பாத்துகிட்டே,
பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன். 

படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.

அப்படியா, உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர். 

சரி,அதான் பையன் வேலைக்கு போறான்ல, நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,

நிச்சயமா போவேன் சார், பையனே "நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான், 

ஆனா, இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "

" எப்போ "

" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் சார் "

" சரி, கடவுள் இருக்கார் பெரியவரே, இனி எல்லாமே நல்லதாவே நடக்கும் ".

பெரியவர் சிரித்தார். 

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, 

ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான், 

பெரியவர் முகம் மலர்ந்தார். 

" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்காங்க" என்றார்.

"என்ன சொன்னீங்க சார். 
கடவுளா !!!
கடவுள் என்ன சார் கடவுளு, 
அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார். 

"இல்லன்னா, ஊருக்கே சோறு போட்ட என்னைய, கடனாளியாக்கி இப்பிடி நடு ரோட்டுல நின்னு,  சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா", "மனுஷங்க தான் ஸார் கடவுள்"
 
முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, 
நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம, 

இதோ இந்த வயசானவனுக்கு கால் வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, என் முதலாளி ஒரு கடவுள்

"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்
படனும், பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, 
கூழோ, கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு" சொன்ன,  எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, 
என் மாப்பிள்ளை ஒரு கடவுள்.

கஷ்டப் பட்டு அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, 
"நீ வேலைக்கு போவாதப்பா,
எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன,
 என் புள்ள ஒரு கடவுள்'.

நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத,
எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள்

இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி அப்பப்ப ஆதரவா பேசுற, 
உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே தான் சார் கடவுள்.

" மனுசங்க தான் சார் கடவுள் "

எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே
தோன்றியது, 

இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.

வேண்டாமென மறுத்த போதும், 

பாக்கெட்டில் பல வந்தமாய் 
பணம் திணித்தேன். 

பஸ் கிளம்பும் போது, 
மெல்ல புன்னகைத்த, 

முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,

தலை வணங்கியே, கும்பிட்டேன்.

ஒவ்வொரு வீட்டுக்குமே,
இது போன்ற தகப்பன் சாமிகள்,
நிறைய பேர் இருக்கத்தான்
செய்கிறார்கள். 

நமக்குத்
தான் எப்போதுமே
கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை. 🤔

இல்லாத .....

நீ இருக்கும் போது
எனக்குள் ஆணவம் இருந்தது
உன் அன்பு புரியவில்லை

நீ இருக்கும் போது
எனக்குப் பலம் இருந்தது
உன் பாசம் புரியவில்லை

நீ இருக்கும் போது
உன் மேல் அலட்சியம் இருந்தது
உன் அருமை தெரியவில்லை

நீ இருக்கும் போது
உன் மேல் வெறுப்பு இருந்தது
இந்த வெறுமை தெரியவில்லை

நீ இருக்கும் போது
எனக்கு பெருமை இருந்தது
உன் அருமை தெரியவில்லை

நீ இருக்கும் போது
உன் பாசம் தெரியவில்லை
இன்று எனக்கு பசியே தெரியவில்லை

இருக்கும் போது அலட்சியமும்
இல்லாத போது அழுவதுவும்
மனிதரின் அறியாமையா.....? சாபமா.....?

நீ இருக்கும் போது
எனக்கு என் வாழ்க்கை புரியவில்லை
இன்று எனக்கு வாழவே பிடிக்கவில்லை

அம்மா 
அப்பா 
மனைவி 
.......

காபி பொடி டப்பா மூடியில் இவ்வளவு பெரிய சைக்காலஜியா

🤝👏😀👏🤝👏😀
காபி பொடி டப்பா மூடியில் இவ்வளவு பெரிய சைக்காலஜியா

Thought it worthwhile to translate into English so that all my friends can enjoy the great lesson involved! 

So pls scroll down for English version if you cannot read the Tamil!

🥙🧚🏿‍♀️🧚‍♂️🥙🧚🏿‍♀️🧚‍♂️🥙🧚🏿‍♀️

கற்பனைக் கதை அல்ல.
அனைவருக்கும் *பாடம்* புகட்டும்
அருமையான *நிகழ்வு.*

கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.

வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள்.

பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும். 

இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.

அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும்.

எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி.

காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.

அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்.

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் அவங்க வீட்டுக்கு போகும் போது. காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க.

தாத்தாவும் மீசையை ஸ்டைல முறுக்கி விட்டுகிட்டு ஒரு வெற்றி சிரிப்புடன் திறந்து கொடுப்பார்.  

பாட்டி ஒரு நமட்டு சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க. 

இத ரெண்டு மூனு வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு device வாங்கி கொடுத்தோம்.

இந்த வாரமும் வழக்கம் போல் எங்கள் ஞாயிறு மாலை visit. வழக்கம் போல் காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி. தாத்தாவும் இறுமாப்புடன் திறந்து கொடுக்க, 
பாட்டி உள்ளே சென்றார்.

பாட்டி உள்ளே செல்ல, என் மனைவியும் பின் சென்று.. "பாட்டி, ஏன் அந்த device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல்ல. மறந்துடீங்களானு"
கேட்க …

பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைட்!

"குழந்தே, இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை. நானே திறந்திருவேன். அவர நான் தெறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம். சந்தோசம்.

இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு கெத்து. இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு உபயோகமா இருக்கோம் என்ற ஒரு மகிழ்ச்சி. நான் இன்னும் அவரை சார்ந்து இருக்கேன்னு அவருக்கு ஒரு ஆளுமை.

திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே. இன்னும் வாழப்போறது கொஞ்சநாள் தான். யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழனும். அதுக்குத் தான் இந்த நாடகம்"னு சொன்னாங்க.

கொஞ்ச நேரம் என்னால ஒன்னும் பேச முடியல. இந்த மூடியில இவ்வளவு விஷயமா?

வயசானவங்களை underestimate பண்ணக்கூடாது. அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க.

இந்த பாடம் எல்லாம் எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க.

இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்து தான் கத்துக்கணும். அதுக்கு அவங்க நம்மளோட இருக்கணும். 🤝🏻

Lid of a Coffee Powder Box and the Philosophy behind!

This is a true happening and not a story out of fertile imagination!
 
We were newly married then and our neighbors next door were a very old couple in their eighties.

The weekdays were always busy. However, we spend our Sunday mornings for at least one hour with them over a cup of tasty coffee in which Grnadma has a masterly touch.

The moment we enter, Grandma will bring the Coffee Powder Box and request the Grand Man to help her open it. He will remove lid with great efforts and simultaneously feeling absolutely proud about it.

One day we bought a special tong with which grandma cud easily remove the lid and save the old man the trouble on a permanent basis.

However, during our next visit, we were in for a surprise when Grandma requested the old man to open the box. And he too proudly obliged her. 

Later, before leaving, we discreetly enquired Grandma as to why she did not use the tong. Her reply shook us to the core:

Yes, I made him open the box.

1. Firstly, by giving such a small task, I am not troubling him too much;

2. Secondly, my husband is happy he is of some help to me;

3. Thirdly, feels proud he can do a tough job even at such an old age which I cannot do;

4. Fourthly, such an act from him reveals his love for me;

5. Fifthly, he gets a feeling that he is useful and important to our family in maintaining day to day activities and commitments.

Grandma ended up asking us:
Tell me, which is important? Opening the lid myself which I can do easily even without the tong or approaching my husband?

We felt too small to open our mouth before such towering personality who taught us a great lesson which even an University cannot teach us and that too, at a time when we were at the doorstep of an Institution called Marriage and made us understand what marriage is all about!

We can never forget those Respectful old couple; neither their warmth and nice company on every Sunday morning over a cup of tasty coffee nor the great lesson learnt at their feet on that particular Sunday morning!

Yes, Grandma and Grandpa are a must for every family!
👌👍
 
 

Saturday, November 16, 2024

Never anger your wife

A woman arrived at the Gates of Heaven. While she was waiting for Saint Peter to greet her, she peeked through the gates. 

She saw a beautiful banquet table.

Sitting all around were her parents, some of her best fiends and all the other people she had loved and who had died before her.

They saw her and began calling greetings to her.
"Hello - How are you! We've been waiting for you!! Good to see you."

When Saint Peter came by, the woman said to him,
"This is such a wonderful place! How do I get in?"

"You have to spell a word n 5 seconds," Saint Peter told her.

"Which word?" the woman asked.

The woman correctly spelled Love', and Saint Peter welcomed her into Heaven.

About a year later, Saint Peter came to the woman and asked her to watch the Gates of Heaven for him that day,

While the woman was guarding the Gates of Heaven,

her husband arrived.
I'm surprised to see you," the woman said. "How have you been?"

Oh, I've been doing pretty well since you died," her husband told her. I married that sexy young nurse who took care of you while you were ill. I gave her all your gold jewelry and diamonds. I sold that diamond studded watch you had gifted me on my birthday. And then using that money my new wife and I
traveled all around Europe. We were on vacation in Switzerland and I went skiing
today. I fell and hit my head, and here I am.
Now how do I get in,
"You have to spell a word in 5 seconds," the woman told him.

"Cool! Which word?" her husband asked.

"Schizosaccharomycentezea"

Moral of the story: Never anger your wife ... dead or alive. There will be Hell even if u r in Heaven!

எங்கள் தோழி...50 வயதைக் கடந்தவள்..

படித்ததில் பிடித்தது..

எங்கள் தோழி...

50 வயதைக் கடந்தவள்..

அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... 

பேரதிர்ச்சி எங்களுக்கு..

அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்...

எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை, எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்...
ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று..

அதில் தொனித்த வேதனையை எங்களால் இனம் காண முடிந்தது..

அவள் இறந்து 1 மாதமாயிற்று...

பாவம் அவள் கணவர்...

இப்போது எப்படி சமாளிக்கிறாரோ?? பயணம் செய்யும் பணியில் இருந்து கொண்டு பிள்ளைகளை, தன் வயதான தாய் தந்தையரை எப்படி கவனிக்கிறாரோ என வருத்தம் தோன்ற, எதாவது உதவி செய்ய முடிந்தால் செய்யலாம் என அவரை அலைபேசியில் அழைத்தேன்.. 

பதிலில்லை. அரை மணி கழித்து அவரே அழைத்து, தான் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் , அதனால்தான் உடன் அழைப்பை ஏற்க வில்லை என மன்னிப்பு கோரினார்.. 

எப்படி இருக்கிறீர்கள் என்றேன்..

பயணம் செய்யும் பொறுப்பிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்..

வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

சமையல் செய்வதற்காக ஒருவரை நியமித்து அவரே கடையிலிருந்து பொருட்களை வாங்கி வருமாறும் பணித்திருக்கிறாராம்..தன் தாய் தந்தையரை பார்த்துக் கொள்ள செவிலியர்களை நியமித்திருக்கிறாராம்..

பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்..

"பிள்ளைகள் நலம்..நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் சுமூக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்.." என்றார்..

சிறிது நேரம் பேசிவிட்டு, முடித்தேன் ...

என் கண்கள் குளமாகியது. என் தோழி நினைவிற்கு வந்தாள். பள்ளி தோழிகள் சந்திப்பிற்கு அவள் வரவில்லை, காரணம் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை. அவளின் அண்ணன் மகள் திருமணத்திற்கு அவளால் போக முடியவில்லை , காரணம் அவள் வீட்டில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது, எங்கள் தோழியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை, காரணம் அவள் பிள்ளைகளுக்கு தேர்வு..நாங்கள் அனைவரும் இணைந்து சென்ற திரைப்படத்திற்கு அவள் வரவில்லை, காரணம் இரவு உணவு சமைக்க வேண்டும்..

இப்படி எத்தனை இனிமையான தருணங்களை அவள் இழந்திருக்கிறாள்..
அவளுக்காக அவள் வாழவே இல்லை..
மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறாள்..இறுதி வரை அவள் எதிர்நோக்கிய பாராட்டும் அங்கீகாரமும் இத்தனை செய்தும் கூட அவளுக்கு கிடைக்கவே இல்லை..

இப்போது அவளிடம் சொல்ல துடிக்கிறேன், 
இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்.. தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும், அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும், நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை..
ஆனால் இதையெல்லாம் சொல்வதற்கு அவள் இப்போது உயிருடன் இல்லை...

தோழிகளே...

எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை பணிகள் இருந்தாலும்
உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. 

அது உங்கள் நேரம்..

உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்...ஆடுங்கள், பாடுங்கள், என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள் 

பள்ளி கல்லூரி தோழிகளிடம் பேசுங்கள்,பகிருங்கள், சிரியுங்கள்..வாழ்க்கையை அனுபவியுங்கள்..

இது உங்கள் வாழ்க்கை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.. 

உங்களுக்கான இன்பத்தை மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்..

நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை..

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்...

அனுபவித்து வாழுங்கள்.

வாழ்க்கை அழகானது..

🙏🏻

மனதோடுயாகம் - பகுதி 14

பகுதி 14

அவர் என்னை பூந்தோட்டத்திற்கு போகச் சொல்லியும் நான் போகவில்லை. தயங்கியபடி நின்றுகொண்டே இருந்தேன்.

'என்ன தோட்டத்துக்கு போகலையா?'

'இல்ல மாமா. எனக்கு ஒரு பேப்பரும் பேனாவும் தரேளா?'

'ஏன்? என்ன விஷயம்? யாருக்காவது கடுதாசி எழுத போறியா?'

'கொடுங்கோளேன். நான் என்னமோ எழுதப் போறேன். அது சீக்ரெட்.'

'சரி. அந்த ஷெல்ஃப் மேல இருக்கு பார். நீயே எடுத்துக்கோ. எட்டலைனா அந்த கணக்குப்பிள்ள டெஸ்க போட்டுண்டு கீழ விழுந்துடாம ஜாக்கிரதையா எடுத்துக்கோ.'

பேப்பரும் பேனாவும் கிடைத்துவிட்டது. அந்த கணக்குப்பிள்ளை டெஸ்கையே கையால் ஒரு துடை துடைத்துவிட்டு எழுதுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.

எழுத ஆரம்பித்த சில நொடிகளில் அவர் என்னருகில் வருகிறார். அவருக்கு ஒரு ஆர்வம். நான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ள.

'மாமாஆஆஆஆஆ. நீங்க பூஜ பண்ண போங்கோ. நான் காமிக்க மாட்டேன்.'

இப்படி சொல்லிவிட்டு டெஸ்கில் குனிந்து கொண்டு எழுதும் பேப்பரை மறைக்கிறேன். என்னுடைய இந்த செயலால் சற்று சிரித்துவிட்டு பூஜை ஏற்பாடுகளில் கவனம் செலுத்த சென்று விடுகிறார்.

நான் எழுத நினைத்து எழுதிக் கொண்டிருந்தது இந்த ப்ராஸனம் சம்பந்தமாக எனக்கு எழுந்த சில சந்தேகங்களின் குறிப்புகள் தான்.

படபட என்று குறிப்புகளை எழுதிவிட்டு பேனாவை எடுத்த இடத்தில் வைத்து விட்டு உடுத்தியிருந்த டிராயரில் எழுதிய பேப்பரை மடித்து வைத்துக்கொண்டு பூந்தோட்டத்தை நோக்கி செல்கிறேன்.

பூந்தோட்டத்தில் செடிகளோடு பேசிக்கொண்டிருந்தபோது பூஜையில் அவர் அசைத்த வெண்கல மணியின் ஓசை எனக்கு பூஜையின் இறுதிக்கட்டத்தை உணர்த்தியது. மடத்திற்குள் வந்துவிடுகிறேன்.

பாண்டுரங்கனுக்கு அவர் காட்டிய தூப தீப ஆராதனைகளை பார்க்கும் பாக்கியம் எனக்கும் கிடைக்கிறது.

நிவேதனம் செய்த இரண்டு வாழைப் பழங்களில் ஒன்று அவருக்கு மற்றொன்று எனக்கு.

'என்ன பாஸு. ஆரம்பிக்கலாமா?'

'காத்துண்டு இருக்கேன்'

'யாருக்கோ லெட்டர் எழுதினியே. அதை என்கிட்ட காமிச்சா தான் மேற்கொண்டு பாடம்.'

'மாமாஆஆஆஆஆ. அது சஸ்பென்ஸ். இப்ப சொல்ல மாட்டேன். நீங்க கிளாஸ் முடிச்சோண்ண தான்.'

'நீ என்ன எழுதினேன்னு சொல்ல வேண்டாம் என்கிட்ட. யாருக்கு கடுதாசி எழுதின அப்படின்னு சொல்லணும் இப்பவே. அப்பத்தான் க்ளாஸ்.'

'அது ஒண்ணும் இல்ல மாமா. நான் மறக்காமல் இருக்கறதுக்கு என் சந்தேகங்கள குறிச்சி வைச்சிண்டேன்.'

'அப்படியா. என்ன சந்தேகம் சொல்லு. உன்னோட குறிப்ப பார்த்துண்டே கூட சொல்லலாம்.'

'நீங்க கையால காலால மனசால பேச்சால ... அப்படின்னு தினுசு தினுசா நாம பாவம் செய்யதா சொன்னேள் இல்லையா. அது எப்படி? விளக்கமா சொல்ல முடியுமா உங்களால?'

ஓ.. தாராளமா சொல்லலாமே. ஒவ்வொண்ணுக்கும் உதாரணம் சொன்னா போருமோன்னோ?'

'போதும்னு தான் நினைக்கிறேன் இப்ப சப்திக்கு.'

'சரி முதல்ல மனஸ எடுத்துக்கறேன். பொதுவா மனசு எண்ணங்களத்தானே கொடுக்கறது. ஒருத்தனோட எண்ணம் அல்லது சிந்தனை நன்னா இருந்தா அவனுக்கு நல்ல மனசு அப்படின்னு சொல்லுவோமோன்னோ? குறிப்பா நீ ஒருத்தன் மேல கோபமா இருக்கிற சமயத்தில அவன் என்ன அடிச்சிட்டான், அவன் பரிட்சையில் ஃபெயிலாகணும்னு நினைச்சிட்டாலே அது உன்னோட பாப கணக்குல சேர்ந்துடறது. அதனால கூடிய வரைக்கும் நாம யாரையும் மனசால சபிக்க கூடாது.'

'ஏன் மாமா. அவன் என்ன அடிச்சதால தானே நான் சாபமிட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு?'

'அவன் உன்ன அடிச்சான். அடிச்சதுக்குண்டான பாவம் அவனுக்கு சேரும். அதுக்காக நீ அவன சபிச்சா அதுக்குண்டான பாவம் உனக்கும் வரும். எதிர்மறையா நீ அவன் சபிக்காம பகவான் கிட்ட விட்டுட்டு போறது தான் நல்லது.'

'எனக்கு என்னவோ இது பிராக்டிகலா சரியா வருமா அப்படிங்கிறது டவுட்டா இருக்கு மாமா.'

'நீ சொல்றது கூட சரிதான். அதுக்காகத்தான் இந்த பிராஸன மந்திரத்துல மனசால அறியாம செஞ்ச பாவங்களையும் சேர்த்து க்ஷமிக்க சொல்றோம்.'

'ஏத்துப்பாரா மாமா பகவான்?'

'ஏத்துப்பார் அப்படிங்கிற நம்பிக்கை இருக்கிறதால தானே விண்ணப்பங்கள வைக்கிறோம் இல்லையா?'

'இது மாதிரியே கையால ஒருத்தர அடிக்கிறது காலால ஒருத்தர ஒதைக்கறது இதெல்லாமும் பாவக் கணக்குல சேர்ந்துடும். வயிற பொருத்தவரைக்கும் கண்ட கண்ட நேரங்கள்ல சாப்பிடறது நாம சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிடறது .... இதெல்லாம் கூட பாவங்கள் அப்படின்னு சாஸ்திரங்கள் சொல்றது. அதனாலதான் இந்த வயிற்றையும் இந்த லிஸ்ட்ல சேர்த்திருக்கா. ஏன், நம்மளோட அந்தரங்க உறுப்பால கூட பாவங்கள மனுஷா செஞ்சுடறதால அதைவும் இந்த மந்திரத்தில சேர்க்கப்பட்டிருக்கு.'

'புரிஞ்சுது மாமா. பாவங்கள் என்ன செஞ்சாலும் பகவான் இருக்கார் பாவத்தைப் போக்க. இல்லையா?'

'ஏய் படவா. பகவான் காப்பாத்துவார்னு தெரிஞ்சே தப்பு செஞ்சுண்டே போனா மன்னிப்பு கொடுக்க மாட்டார். மண்டைல இரண்டு போடுவார். நம்மள அறியாம யதார்த்தத்தில தப்பு செஞ்சிட்டு பின்னாடி ரியலைஸ் பண்ணும்போது பகவான சேர்த்துண்டு பிரார்த்தனை பண்ணனும். புரிஞ்சுதா?'

சிரித்துக்கொண்டே, 'புரிஞ்சது மாமா. சும்மா உங்ககிட்ட சித்த விளையாடினேன்.'

'நேக்கும் தெரியுமாக்கும் இது. நம்ம பாஸு எப்படிப்பட்டவன்னு நேக்கு தெரியாம இருக்குமா?'

இருவருமே சிரிக்கிறோம் இப்போது.

'சரிடா பாஸு. மேலோட்டமா நான் சொன்ன மந்திர விளக்கம் நோக்கு புரியலன்னா பதம் பிரிச்சு வேணா சொல்லட்டுமா?'

'எனக்கும் பதம் பிரிச்சு தெரிஞ்சுண்டா நல்லதுன்னு தான் தோணறது மாமா.'

'சரி பார்த்துடுவோம். நானே ஒரு தடவை இந்த பிராஸன மந்திரத்த இப்ப சொல்றேன். நீயும் ஃபாலோ பண்ணு.'

'ஸூர்யஸ்ச்ச
மாமன்யுஸ்ச்ச 
மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய:

பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம்

மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிஸ்னா

ராத்ரிஸ் ஸ்தவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா'

'இதுதானே ப்ராஸன மந்திரம்? இப்ப நான் உனக்கு இந்த மந்திரத்தை பதம் பிரிச்சு அர்த்தத்தை சொல்லப்போறேன். கவனமா கேட்டுக்கோ.'

ஸூர்யஸ்ச்ச : அனைத்தையும் இயக்குகிற சூரியனும்

மாமன்யுஸ்ச்ச: அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும்

மந்யு பதயஸ்ச்ச: கோபத்தை கையாளும் தெய்வ சக்திகளும்

மன்யுக்ருதேப்ய: கோபத்தால் செய்யப்பட்ட

பாபேப்யோ ரக்ஷந்தாம் :: பாவங்களிலிருந்து காப்பாற்றட்டும்

ராத்ர்யா : இரவில்

மனஸா: மனத்தாலும்
வாசா: வாக்காலும் ஹஸ்தாப்யாம்: கைகளாலும் பத்ப்யாம்: கால்களாலும் உதரேண: வயிறாலும் 
சிஸ்னா: ஆண் குறியாலும்

யத் :: எந்த
பாபம் :: பாவத்தை
அகார்ஷம் :: செய்தேனோ
கிஞ்ச :: இன்னும்
மயி :: என்னிடத்தில்
யத் :: எந்த
துரிதம் :: பாவம் உண்டோ
தத் :: அதையும்
ராத்ரி: இரவின் அதிதேவதை
அவலும்பது :: நீக்கி அருள வேண்டும்

இதம் மாம் :: இப்படி பாவம் நீக்கிய என்னை

அஹம் :. நான்

அமிர்தயோநௌ : மோட்சத்திற்கு காரணமாகிய

ஸுர்யே ஜ்யோதிஷி :: சூரிய வடிவான பரஞ்சோதியில்

ஜுஹோமி :: ஹோமம் செய்கிறேன்

ஸ்வாஹா :: இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

'இதுதாண்டா பதம் பிரிச்சு பார்த்தாக்க கெடைக்கிற அர்த்தம். செய்யுள்லேந்து பதம் இருக்கும் போது ஒண்ணு ரெண்டு பதங்கள் முன்ன பின்ன வரும். ஆர்டரா வரணுங்கர அவசியமில்ல. தமிழ் செய்யுள்கள பதம் பிரிச்சு அர்த்தம் தெரிஞ்சுக்கும் போது கூட இப்படி முன்ன பின்ன வருமோன்னோ?'

'நான் பூஜைக்கு முன்னாடி நான் நோக்கு சொன்ன பொருள் பதம் பிரிச்சு சொன்னபோதும் வந்ததோண்ணோ?'

என் மனம் முழுவதும் இப்போது மின்சாரம் பாய்ந்த ஒரு உணர்வு. எப்படி எல்லாம் மந்திரத்தை வெச்சிருக்கா? என்னையும் மீறி வந்த ஓரிரு சொட்டு கண்ணீர் துளிகள்.

'இந்தப் ப்ராஸன மந்திரம் எப்படி பாஸு இப்ப நோக்கு?'

'வார்த்தைகளே வரமாட்டேங்கறது மாமா. இப்பவே சமஸ்கிருதம் கத்துக்கணும்னு தோண்றது.'

'கண்டிப்பா தோணும். தோணனும். எப்ப கத்துக்கணும்னு தோண ஆரம்பிச்சுடுத்தோ நேரமெல்லாம் கூடி வரும்போது தானா கத்துக்க ஆரம்பிச்சுடுவ.'

'ரொம்ப தேங்க்ஸ் மாமா. எனக்குள்ளே இருந்து நானே வெளிப்படற மாதிரி இருக்கு. ஒண்ணுமே சொல்ல தெரியல மாமா.'

'மேற்கொண்டு பாடம் வேண்டாம். இன்னிக்கு முழுதும் இதே மாதிரி உணர்வோட சுகப்பட்டுண்டு இரு. ஈஸ்வரன் உன்ன ரக்ஷிப்பார்.'

நமஸ்கரிக்கிறேன் அவர் பாதங்களை தொட்டு. இன்றைக்கு என்னமோ சற்று கூடுதல் நேரம் பிடித்தது அவர் பாதங்களிலிருந்து என் கைகளை விலக்கிக் கொள்ள. ஏதோ என்னிடமிருந்த அத்தனை பாவங்களும் விலகிய ஒரு உணர்வு.

'அபிவாதயே...' ஆரம்பிக்கிறேன். இன்று என்றுமில்லாமல் அக்ஷரப் பிழைகள் சொல்லும்போது. என் ஃபோக்கஸ் முழுவதும் ப்ராசனம் மந்திரத்தில் லயித்திருந்தது தான் காரணமோ ஒருவேளை!

தொடரும்..

மனதோடுயாகம் - பகுதி 13

பகுதி 13

மடத்தின் வாசல் கதவு திறந்து இருந்தது. உள்ளே நுழைகிறேன். ஆனால் மடத்துக்குள் ஆசான் இல்லை. தோட்டத்து கதவு திறந்திருந்தது.

'அங்குதான் போயிருக்க வேண்டும்?'

'வாடா பாஸு. இப்பதான் வரியா?'

'ஆமாம் மாமா'

'கார்த்தால ஏதாவது சாப்பிட்டு வந்தியா?'

'அம்மாவுக்கு இன்னைக்கு ஒத்தை தெருவுல வேலை இருக்காம். அதனால கஞ்சிதான் வெச்சிருந்தா. மத்தியான சாப்பாட்டுக்கு நான் ஒத்த தெருவுக்கு வரணுமாம். நான் போகப் போகறதில்ல. போர் மாமா. அவ்வளவு தூரம் யார் போவா?'

'நீ வரலைன்னா அம்மா கவலைப்பட மாட்டாளா?'

'அம்மா வேலைக்கு போகறதும் நானும் அங்கு சாப்பாட போறதும் எனக்கு சுத்தமா புடிக்கவே இல்லை.'

'புரியிறதுடா ஒன்னோட கஷ்டம். கொஞ்ச நாள் தான. நீ நன்னா படிச்சு நல்ல உத்தியோகத்தில உக்காந்துட்டா எல்லாம் சரியாப் போகும்.'

'எனக்கு இன்னிக்கு மனசே சரியில்ல மாமா. என் பிரெண்டு வீட்டுக்கே சாப்பாட்டுக்கு போறது எனக்கு பிடிக்கவே இல்ல.'

'சரி வருத்தப்படாத. சந்தியாவந்தன க்ளாஸ் முடிஞ்சோண்ண நாம ரெண்டு பேரும் எங்காத்துக்கு போய் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம். சரியா?'

சரி என்று சொல்லவில்லை. ஆசை மட்டும் வந்து போனது.

பூக்களை பறித்துவிட்டு பூக்கூடைகளோடு மடத்திற்குள் வருகிறோம். பறித்த செம்பருத்திகளையும் செவ்வந்திகளையும் அங்குள்ள சுவாமி படங்களுக்கு வைக்கிறோம்.

பவளமல்லி, நந்தியாவட்டை, பன்னீர் மற்றும் சங்குப் பூக்களை அர்ச்சனைக்காக தனியாக வைக்கிறேன்.

'உங்களோட நித்திய பூஜை முடிஞ்சோண்ணதானே நம்ம கிளாஸ்?'

'இன்னைக்கு ப்ராஸனம் மட்டும் தான சொல்லித்தரப்போறேன். அத முடிச்சுட்டே பூஜய ஆரம்பிக்கிறேன். நீ இன்னிக்கு கோபமா வேற இருக்கியே?'

'அதெல்லாம் இல்ல மாமா.'

சொல்லும்போதே என் வருத்தம் என் கோபத்தையும் சேர்த்தே அவருக்கு காண்பித்திருக்க வேண்டும்.

'சரி பாஸு. ஆசனங்கள ரெடி பண்ணு. ஆரம்பிச்சுடலாம்.'

அவர் அமரும் பலகை சத்தத்தோடு தரையில் உட்காருகிறது. அந்த சத்தம் உணர்த்திய என் கோபம் அவருக்கு லேசான சிரிப்பை கொடுத்தது.

ஃபாஸ்டாக அவருக்கு நமஸ்காரம். ஜெட் ஸ்பீடில் அபிவாதயே. பிறகு சட்டென்று என் இருக்கையான கோரைப் பாயில் உட்காருகிறேன்.

'எதுக்கு இவ்வளவு அம்மா மேல இன்னமும் கோபம் ஒரு சின்ன விஷயத்துக்குப் போய்? கோபத்தோடு இருந்தா எப்படி பாடங்கள் புரியும்? வேணும்னா நாளைக்கு கிளாஸ் வெச்சிக்கட்டுமா?'

'வேண்டாம் மாமா. நீங்க ஆரம்பிங்கோ. நான் கவனமா கேட்கறேன்.'

'சரி. ப்ராஸனம் அப்படின்னா என்ன தெரியுமா?'

பதில் என்னிடம் இல்லை என்பது அவருக்குப் புரிந்து அவரே தொடர்கிறார்.

'ப்ராஸனம் அப்படின்னா தமிழ்ல உட்கொள்ளுதல்னு அர்த்தம். ப்ராஸனம் செய்யும் போது என்ன சாப்பிடப்போறோம்?'

'தீர்த்தத்தை தான சாப்பிட போறோம் மாமா? சந்தியாவந்தனம் பண்ணும்போது மந்திரத்தை சொல்லி தீர்த்தத்தை சாப்பிடறதுக்கு பேர்தான் பிராஸனமா மாமா?'

'அதே தான். ப்ராஸனத்துக்கான மந்திரத்த சொல்லிட்டு ஜலத்த உட்கொள்ளுவது அப்படிங்கறது ப்ராஸனம் தலைப்பில வர்ரது.  

'இந்தப் பிராஸனம் அப்படிங்கற வார்த்தை வேற எதுல வருதுன்னு கொஞ்சம் ஞாபகப்படுத்தி சொல்லு பாப்போம்?'

யோசிக்கிறேன். என் யோசனை அவரைச் சற்று மௌனமாக வைத்திருக்கிறது.

'எஸ் மாமா. இப்போ ஞாபகம் வந்துடுத்து மாமா. அன்னப்பிராஸனம்?'

'கெட்டிகாரண்டா நீ. சட்டுன்னு புடிச்சுட்டியே? அன்னத்தை உட்கொள்வதால் அன்னப்பிராஸனம். குழந்தைக்கு முதல் முதல்ல அன்னத்தை ஊட்டுகிற வைபவத்திற்கு பேரு அன்னப்பிராசனம். முதல் முதல்ல அந்த குழந்தை அன்னத்தை உட்கொள்ளும் போது அதுக்கு எதுவும் கெடுதி வந்துடக் கூடாதுன்னு பகவான பிரார்த்திச்சிண்டு மந்திரங்கள சொல்லிண்டே ஊட்டறாளோன்னோ?'

'அதே மாதிரி வாத்தியார்கள் எல்லாம் ஜபம் சொல்லிட்டு கலச தீர்த்தத்தை பூஜையில கலந்துண்டவாளுக்கு உத்தரணியால கொடுக்கும்போது சில மந்திரங்களை சொல்லிண்டே கொடுக்கறத கூட நீ பார்த்திருப்பியே? 'அகால ம்ருத்யு ஹரணம் (1), ஸர்வ வ்யாதீ நிவாரணம் (2), சமஸ்த பாப சமனம்(3) - மந்த்ர பூதோதக ப்ராஸனம் சுபம்'

'பிராஸனம் அப்படிங்கிற வார்த்தை இங்க கூட வர்ரது பார். இதிலேந்து ப்ராஸனம்னா உட்கொள்வது அப்படின்னு புரிஞ்சிக்க முடியறதோல்யோ?'

'இதுலேந்து இன்னொண்ணையும் தெரிஞ்சுக்கிறோம். நாம எத ப்ராஸனம் பண்ணினாலும் பகவானை பிரார்த்திச்சுண்டு மந்திரங்களை உச்சரிச்சிண்டு சாப்பிடும்போது நம்மளோட பாபங்களை போக்கி ப்ராஸனம் பண்ற அந்த வஸ்து நம்ம உடலையும் மனசையும் சுத்தப்படுத்தறது அப்படின்னும் புரிஞ்சுக்கணும்.'

'இப்ப நாம சந்தியாவந்தனத்தில வர ப்ராஸன மந்திரத்துக்கு உள்ளேயும் மந்திரத்தினுடைய அர்த்தங்களுக்கு உள்ளேயும் போகலாமா? எங்கே உன் வாயால சொல்லு ஒரு தடவ ப்ராசன மந்திரத்த? நேர ஜம்முனு உக்காந்து கணீர்னு சொல்லணும் என்ன?'

'கார்த்தால சொல்ற மந்திரமா மத்தியான்னிகம் போது சொல்றதயா இல்ல சாயந்திரம் சொல்வதயா மாமா?'

'அப்படி போடு. எங்க பாஸுன்னா பாஸு தான். நீ இந்த கேள்வி கேட்டதால மூணு சந்தியாவந்தன வேளைகள்லயும் இந்தப் பிராசன மந்திரம் வித்தியாசப்படறது அப்படிங்கிறது நோக்கு நன்னா புரிஞ்சுருக்குன்னு அர்த்தமாகிறது. சபாஷ். சரி, கார்த்தால சந்தி பண்ணும்போது சொல்ற ப்ராசன மந்திரத்தையே சொல்லு பாப்போம். அதுக்கப்புறம் மத்த ரெண்டு வேளைகள்ல சொல்றத எடுத்துக்கலாம்.'

முதுகை நேராக்கி மார்பை விசாலமாக்கி மந்திரத்தை சொல்கிறேன்.

'ஸூர்யஸ்ச்ச
மாமன்யுஸ்ச்ச 
மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய:

பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம்

மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிஸ்னா

ராத்ரிஸ் ஸ்தவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா'

'பிரமாதம் பாஸு. மந்திரத்துக்கான அர்த்தம் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயம் உனக்கு சொல்றேன். கேட்டுக்கோ.'

'மனுஷாளோட கஷ்டங்களுக்கு காரணங்களா ரெண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு கோபம். இன்னொண்ணு நாம செய்யற பாவங்கள். என்னதான் ஜாக்கிரதையா இருக்கணும்னு நெனச்சாலும் கோபத்தை சில சமயம் தவிர்க்க முடியாம போயிடறது. அதே மாதிரி நம்மளையும் அறியாம பாவங்களை சேர்த்துண்டே போயிடறோம். மூட்டை மூட்டையா பாவங்கள சேர்த்துண்டே போனா ஒரு கட்டத்துல நமக்கு அந்த பாரம் ஜாஸ்தியாகி சுமக்க முடியாம கஷ்டங்களை கொடுத்துடறது. அதுலயும் நாம செய்யற சில பாவங்களை நாமளே பாவங்களா ஏத்துக்க வேற மாட்டேங்கறோம் இல்லையா?'

'இதுக்கு என்ன தீர்வு? பகவான் கிட்ட ஆத்மார்த்தமா வேண்டிண்டு அப்பைக்கப்ப நம்ம பாபங்கள போக்கிக்க முயற்சிக்கணும். நாம தெரிஞ்சே செய்யற பாவங்களை உன்னிப்பா கவனிச்சா அவைகள் நம்மளோட மனசாலையோ பேச்சாலயோ கைகளாலேயோ கால்களாலேயோ வயிறாலேயோ இல்ல நம்மளோட அந்தரங்க உறுப்பாலயோ தான் நடக்கறது. யோசிச்சு பார்த்தா உனக்கே இது நன்னா புரிபடும்.'

'நீ இப்ப சித்த முன்னாடி சொன்னியே பிராஸன மந்திரம் .... ஸுர்யஸ்ச மாமன்யஸ்ச... அப்படின்னு ஆரம்பிச்ச மந்திரம்.... நான் கூட சொன்னேனே இது பிராஸன மந்திரம்னு.... அந்தப் பிரார்த்தனை மந்திரத்தோட முழு அர்த்தமும் நான் சொன்ன விஷயங்கள் தான்.'

'என் கோபத்தால செஞ்ச பாவங்களையும், நான் மனசால வாக்கால கையால காலால வயிறால அந்தரங்க உறுப்பால செஞ்ச பாவங்கள் அனைத்தையும் சூரிய தேவரான நீங்கள் அவைகளை பஸ்பமாக்கி என்னை ரக்ஷிக்க வேண்டும்.'

'என்ன அழகான பாவமன்னிப்பு கேட்கிற மந்திரமா இருக்கு பாரு? மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்யும் போது இந்த மந்திரத்தையும் சேர்த்து சொல்வதால சூரிய பகவானோட கருணை நம்ம மேல விழுந்து நம்முடைய பாவங்கள் அவ்வப்போது களையப்படறதா புரிஞ்சிக்கணும்.'

'இந்த மந்திரத்தில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா இது ஒரு ஹோம மந்திரமாகவே வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். ஒரு ஹோமத்துல தீயவைகளை நெருப்பிலிட்டு பஸ்பமாக்கி நல்லவைகள் தோன்றுவதற்காக பிரார்த்தனை பண்றது மாதிரியே மந்திரம் சொல்லி நான நம்ம உடம்புக்குள்ள தீர்த்தத்தை உள்வாங்கி குறித்து மனசைக் தூய்மையா வெச்சிக்கறோம்.'

'இதோட கொஞ்சம் நிறுத்திப்போம். நாம பறிச்ச பூவெல்லாம் வாடி போயிடறதுக்கு முன்னாடி அர்ச்சனை பண்ணிட்டு வந்துடட்டுமா? நீ வேணா தோட்டத்துக்கு போயி செடிகளோட விளையாடிண்டு இருக்கியா?'

தொடரும்...

மனதோடுயாகம் - பகுதி 12

பகுதி 12

மடத்திற்கு அன்று நான் வந்தபோது ரகு சாஸ்திரிகள் கொஞ்சம் பிஸியாக இருந்தார்.

'பிஸியா மாமா?'

'அதெல்லாம் ஒண்ணுமில்லடா.  நாளைக்கு அமாவாசையோன்னோ.  அதான் பவித்ரங்களும் கூர்ச்சங்களும் கொஞ்சம் பண்ணிண்டு இருக்கேன்.'

'மாமா இந்த தர்ப பவித்ரம் கூர்ச்சம் இதெல்லாம் எதுக்கு,  எந்த மாதிரி அர்த்தம்லாம் கொடுக்கறது அப்படிங்கற தெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ஆசை.  ஒவ்வொரு தடவையும் அமாவாஸ்ய தர்ப்பணம் பண்ணும் போது உங்ககிட்ட இதப்பத்தி கேட்கணும்னு தோணும்.'

'ஓ.  தர்ப்பய பத்தி பேச ஆரம்பிச்சா ஒரு பெரிய லெக்சரே கொடுக்கலாம்.  இன்னொரு நாள் சாவகாசமா இதை பத்தி பேசலாம்.  இருந்தாலும் கேட்டேங்கரதுக்காக ஒரு சில விஷயம் சொல்றேன்.'

'தர்ப்பைப் புல்லுக்கு இன்னொரு பேரு குசா.  ஸ்ரீ ராமனுடைய இரண்டு கொழந்தைகள் லவ, குசா இல்லையா?  அதுல ரெண்டாவது கொழந்தை பேர இந்த தர்ப்பைப் புல்லுக்கு வெச்சிருக்கா.'

'இந்த தர்ப்பை புல்லுக்கட்டை கீழ தரையில வைக்கறச்ச வடக்கு தெற்காக தான் வைக்கணும்.  நார்த் ப்போல் ஸவுத் ப்போல்னு சொல்வாளே.  அந்த மாதிரி.  அதுலயும் குறிப்பா தர்ப்பைப்புல் நுனிகள் வடக்க பார்த்துத்தான் இருக்கணும்.'

'பொதுவா  இந்த தர்ப்பைப் புல்கள் தீய சக்தியை அழிக்க கூடிய சக்தி படைச்சது.  நீ கூட பார்த்திருப்பியே.  கிரகண காலங்கள்ல சாப்பிடற பொருட்கள்ல தர்ப்பைகள கிள்ளி கிள்ளி போட்டு வைப்பாளே.   அதெல்லாம் இந்த அர்த்தத்திலதான்.'

'தர்பைகள நம்ம கால்ல படாம வெச்சுக்கணும்.  ஒருவேளை காலுல பட்டுடுத்துன்னா அந்த தர்பைகள யூஸ் பண்ண கூடாது.'

'பூஜைகள் பண்ணும்போதும் அமாவாசை மாதிரியான கர்மா காரியங்கள் பண்ணும் போதும் பவித்ரத்தை போட்டுண்டு தான் பண்ணனும்.  ஏன்னா இந்த தர்பைகளுக்கு தடைகளை எதிர்க்கிற அசாத்திய சக்தி இருக்கு.'

'ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு மாமா.  கண்டிப்பா இன்னொரு நாள் இதப்பத்தி எனக்கு நீங்க சொல்லி கொடுக்கணும்.  சொல்லித் தரலைன்னா இந்த மடத்து பக்கமே வரமாட்டேன்.'

'இப்படி சொன்னா நான் பயந்துடுவேனாக்கும்?  உன்னை எப்படி இங்க வேற வரவழைக்கறதுன்னு எனக்கு தெரியும்.  புதுசா வெச்ச ரெண்டு செடியில பூ பூத்திருக்குன்னு  சொன்னா வச்சுக்கோ, நாலு கால் பாய்ச்சல்ல ஓடி வந்துடப் போற.  எனக்கா தெரியாது?'

ஒரே சிரிப்பு எங்கள் இருவரிடத்திலும்.

'சரி பாஸு.  வேல முடிஞ்சுடுத்து.   நீ ஆசனங்கள ரெடி பண்ணு.  ஆரம்பிச்சுடலாம் கிளாஸ. இன்னிக்கி மார்ஜனம் தான சொல்லித் தரணும்?'

'ஆபோஹிஷ்டா அப்படின்னு ஆரம்பிக்கிற மந்திரம் தானே மார்ஜனம்?'

'அதே தான் டா'

கிழக்கும் மேற்குமாக ஆசனங்கள் வழக்கம்போல.  அவர் பலகையில் நான் ப்பாயில் அமர்கிறேன்.  பிறகு ஆரம்ப நமஸ்காரம் ஆசீர்வாத பரிமாற்றங்கள்.

'ரெண்டு நாள் முன்னாடி மார்ஜனம் பத்தி ஏதோ சொன்னேனே, ஞாபகம் இருக்கா நோக்கு?'

'இருக்கு மாமா.  அஞ்சு தினுசு ஸ்நாங்களை பத்தி சொல்லிட்டு மார்ஜனம் கூட அதுல ஒரு வகை அப்படின்னு சொன்னேள்.'

'அந்த அஞ்சு தினுஸு ஸ்நானங்கள்ல மார்ஜனம் எந்த தினுஸுக்கு கீழ வருதுன்னு சொன்னேனோ?'

'ஓ.  ஞாபகம் இருக்கு மாமா.  சாதாரணமா ஆறு குளங்கள் கிணத்தடி இப்படி எல்லாம் குளிக்கிறது ஒரு வகை அப்படின்னேள்.  அப்புறம் விபூதி ஸ்னானம், பசுமாடுகள் நடக்கும்போது ஏற்படுற புழுதிகள்ல ஸ்நானம், அப்புறம் வெயில் அடிச்சிண்டிருக்கும்போது பெய்யற மழையில குளிக்கிறது... ஏதோ திவ்ய ஸ்நானம்னு சொன்னேள்.  அப்புறம் கடைசியா மந்திரத்தை ஜெபித்து உரு ஏத்தின ஜலத்தை ப்ரோக்ஷணம் செய்யறதும் ஒருவகை ஸ்நானம் அப்படின்னு முடிச்சேள்.  அதைக்கூட நீங்க ஏதோ பிரம்மஸ்நானம்னு சொன்னதா ஞாபகம்.  அந்த பிரம்மஸ்நானம் டைப்ல தான் இந்த மார்ஜனமும் வரும் அப்படின்னு சொன்னேள்.'

'பேஷ் பேஷ்.  நோக்கு ஞாபக சக்தி ரொம்ப ஜாஸ்தி இருக்கும் போல இருக்கே.'

'நீங்க சொல்லிக் கொடுத்த விதத்துல நன்னா மனசுல பதிஞ்சு போயிருக்கு மாமா.'

'ரொம்ப சாமர்த்தியமாக தான் சொல்ற.  சரி, இப்ப அந்த மார்ஜன மந்திரத்த என் காதுபட ஸ்பஷ்டமா கணீர்னு சொல்லு பார்ப்போம்?'

உடம்பை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டு  முதுகை நேராக வைத்துக்கொண்டு கணீர் குரலில் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

'ஆபோஹிஷ்டா 
மயோ புவஹ
தாந ஊர்ஜே ததாதன
மஹேரணாய சக்ஷஸே
யோவஹ சிவதமோ ரஸஹ
தஸ்ய பாஜயதேஹ நஹ
உசதீரிவ மாதரஹ
தஸ்மா அரங் கமாம வஹ
யஸ்ய க்ஷயாய ஜின்வத
ஆபோ ஜனயதா ச ந
ஓம் பூர்ப் புவஸ் ஸுவஹ'

'குட்.  இந்த மார்ஜன மந்திரத்தை ஜபித்துண்டே ஜலத்த ப்ரோக்ஷித்து கொள்ளணும். அப்படித்தானே பண்ணுவ?'

'ஆமா மாமா.  கடைசில சொல்ற மந்திரத்தின் போது இரண்டு பாதங்களையும் ஜலத்தால தொட்டுட்டு கடைசியில மறுபடியும் ஒரு தடவை தலையில ப்ரோக்ஷிக்கணும்னு சொல்லியிருக்கேள்.  கடைசியா ஓம் பூர் புவ ஸ்வஹ அப்படின்னு சொல்லும்போது நம்ம தலையைச் சுத்தி தீர்த்தத்த எடுத்துட்டு போகணும் அப்படின்னும் கத்துக் கொடுத்திருக்கேள்.'

'அதே தான் டா.  மந்திரம் ஜபிக்காமல் ஜலத்தை மாத்திரம் ப்ரோக்ஷித்து கொண்டாலும், மந்திரம் ஜபித்துக்கொண்டு ஜலம் தலையில் படாமலேயே ப்ரோக்ஷித்து கொள்வது போல் கையை அசைத்தாலும் பலன் தராது.  இதையும் நீ ஞாபகத்துல நன்னா வெச்சுக்கணும்.  சரி, இப்ப இந்த மந்திரத்தோடு அர்த்தத்துக்குள்ள போவோமா?'

'சமஸ்கிருதத்தில 'ஆபஹ' அப்படின்னு சொன்னா ஜல தேவதையே குறிக்கும்.  அப்படின்னா நோக்கு என்ன புரிகிறது?  இந்த மந்திரமானது ஜல தேவதைய பிரார்த்திச்சிண்டு சொல்லுகிற மந்திரம்.'

'இந்த மார்ஜனம் மந்திரத்தை உச்சரிக்கறதுக்கு முன்னாடி ஓம் அப்படின்னு சொல்லிண்டு பவித்ர விரலால உத்தரணி ஜலத்த தொட்டு கேசவாய நமஹ அப்படின்னு சொல்லிண்டே நம்மளோட புருவத்தோட மத்தியில தொடணும்.  ஜலத்துக்கு கூட ஓம்காரம் பிரதானம் இல்லையா?'

'பதம் பிரிச்சு சொல்றத விட நோக்கு இந்த மந்திரத்தோட முழுப் பொருளையும் சொல்றேன்.'

'லோககத்துக்கு சுகத்தை தருவதற்காக முதலில் ஜலம் படைக்கபட்டது. ஸ்நான பானாதிகளாலும், பயிரை வ்ருத்தி செஞ்சு அன்னத்தையும் மற்ற ரஸங்களையும் தருவதாலும் இந்த ஜல தேவதை நமக்கு இன்பமூட்டுகிறவள்.'

குழந்தைகள் செய்யும் தப்பை எல்லாம் மன்னிச்சு ஒரு தாய், தான் உண்ணாமல் கூட உயர்ந்த ஸத்துள்ள பொருட்களை அளிப்பாள் இல்லையா?  அப்படிப்பட்ட தாய் போலுள்ள தீர்த்த தேவதையே எனக்கு அத்தகைய தாய் போல் அன்னாதிகளை தந்து இந்த உடலை காப்பாற்றவும்.'

ஸ்தூல உடலுக்குள் உள்ள ஸூக்ஷ்ம உடலுக்கு அறிவே உணவு.  அந்த உயர்ந்ததான ஞானத்தை எனக்கு அளியும். உமது அருளால் நான் பேரின்பம் அடைய வேண்டும். இந்த உலக வாழ்க்கைக்கு ஜலம் அவசியமானது.  ஜலத்தின் ஸூக்ஷ்ம அம்சமே ப்ராணன்.'

மங்களகரமான ரஸத்தால் இவ்வுடலுக்கும் மிக மிக மங்களகரமான ரஸத்தால் ஜீவனுக்கும் நன்மை அளிக்கும்படி இந்த மந்திரத்தால் வேண்டுகிறோம்.'

'இதுதாண்டா அந்த மந்திரத்தோட அர்த்தம்.  என்னடா மந்திரம் சின்னதா இருக்கு இவர் என்னடான்னா ஒரு நீளமா அர்த்தம் சொல்றாரேன்னு பாத்தியா?  அக்ஷரம் அக்ஷரமா சொன்னா இவ்வளவு பெருசா இருக்காது. ஆனா நோக்கு புரிஞ்சிக்கிறதுல சிரமம் இருக்கலாம்.'

'சுருக்கமாக சொன்னா நமக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய நீரை ஜல தேவதையாக பாவித்து மந்திரங்களால் அவளோட மகிமையே போற்றி அவள் அனுக்ரஹம் வேண்டி பிரார்த்தனை செய்யறதுதான் இந்த மார்ஜனம்.'

'இந்த மந்திரத்தை சொல்லும்போது பிரயோகமும் முக்கியம்.  அதாவது ஓம் சொல்றது கேசவாய நமஹ சொல்றது ஜலத்தில பவித்ர விரல தொட்டுட்டு புருவத்தில பொட்டு வெச்சிக்கறது மந்திரத்தை ஜபிச்சிண்டே ப்ரோக்ஷணம் பண்ணிக்கிறது கடைசியா பாதங்களைத் தொட்டு பிறகு மறுபடியும் சிரசில் ப்ரோக்ஷிக்கிறது... இதெல்லாம் பிரயோகத்தில் அடக்கம்.  புரிஞ்சுதா?'

'இந்த மார்ஜன மந்திரத்த ஜலத்தில் நின்னுண்டு செய்யறச்சே உதாரணமா ஆத்தங்கரையில ஜலத்தில் இறங்கி செய்யும்போது உன்னோட இடதுகை ஜலத்தை தொட்டுண்டு இருக்கணும். வலது கை மோதிர விரலால ப்ரோக்ஷணம் நடக்கணும்.'

'சித்த நேரம் அமைதியா உக்காந்து நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் படுத்திக்கோ.  ஏதாவது உனக்கு சந்தேகம் வந்துதுன்னா தயக்கம் இல்லாம என்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.'

அவர் சொன்ன விஷயங்களை கிரஹித்துக் கொண்டு சிறுது நேரம் அமைதி காக்கிறேன்.  

'நன்னா புரிஞ்சுது மாமா.  சந்தேகம் இருக்கிற மாதிரி எதுவும் இப்ப தோணல.'

'நல்லது பாஸு.  கிளம்பலாமா?  நாளைக்கு ப்ராஸனம் பத்தி சொல்லி கொடுக்கிறேன்.'

நமஸ்காரம் மீண்டும்.  எப்போதும் போல அவரிடமிருந்து ஆசீர்வாதம் பெறுகிறேன்.

தொடரும்

மனதோடுயாகம் - பகுதி 11

பகுதி 11

அவர் குறிப்பிட்டு சொன்ன நேரத்தில் மடத்திற்கு வருகிறேன். மடத்தின் வாசல் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.

'மாமா இருக்கார். ஆனா பிசியா ஏதோ வேலை செஞ்சிண்டிருக்கார் மடத்துக்குள்ள' என்பது என் தீர்மானமாக இருந்தது. கதவை தட்டுவதற்கு முன் கரையை தொட்டுக்கொண்டு செல்லும் பாமணி ஆற்றை பார்க்க ஒரு விருப்பம். 

ஆற்றங்கரையில் இரு நாட்களுக்கு முன்புதான் தண்ணீர் வர துவங்கியிருந்தது. ஆற்று நீர் ஏற்படுத்தும் சலசலப்பும் சூரியனின் பிம்பம் ஆற்றில் விழுவதால் ஏற்படும் கண்ணைக் கூசும் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள். கண்களை சுருக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி நீரோட்டத்தை நான் ஏதோ தடுத்து நிறுத்துவது போல கைகளை வைக்கிறேன். சில்லென்று கைகள் பெற்ற குளிர்ச்சி. கைகளால் நீரோட்டத்தை தள்ளுகிறேன்.

'என்ன பண்ணிண்டு இருக்காய்? என்னடா பாஸுவை காணோம்னு பார்த்தா நீ இங்க விளையாடிண்டு இருக்கியாக்கும்.'

'இல்ல மாமா. வந்தேன். கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருந்தது. அதான் இங்க வந்து சித்த நேரம் ஆத்தாங்கரைய பார்த்துட்டு வரலாமுன்னு இருந்தேன்.'

'முந்தானாள் தானே தண்ணி வர ஆரம்பிச்சது. இன்னும் பத்துப் பதினைந்து நாளைக்கு ஜலத்தோட வேகம் கூடிண்டே இருக்குமோன்னோ. சின்ன பையன் இல்லையா நீ? தனியா இங்க வரலாமா?'

'மாமா எனக்குத்தான் நீச்சல் தெரியுமே'

'அதான் உன்ன நீச்சல் சாகசத்த பார்த்துட்டு திருப்பாற்கடல் தெருவே பயப்படறதே. நீச்சல் தெரிஞ்சு வெச்சிக்கறது நல்லதுதான். ஆனாலும் துணைக்கு பக்கத்துல யாரும் இல்லாம உன்னோடு சாகசத்தெல்லாம் காட்டக்கூடாது. சரியா? சரி மடத்துக்கு வா.'

படிக்கட்டில் உட்கார்ந்து இருந்த என்னை கைப்பற்றி அழைத்துச் செல்கிறார்.

'இன்னைக்கு உனக்கு சங்கல்பம் தானே சொல்லித் தரணும்?'

'ஆமா மாமா. பிராணாயாமம் முடிஞ்சு அதுதானே வரும்?'

'சரி. ஆரம்பிச்சுடலாம். அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி ஒன்ன கேட்கணும். உங்க பள்ளிக்கூடத்துல பிரேயர் போது உறுதிமொழி ஏதாவது எடுத்துப்பேளா?'

'ஓ எடுத்துப்போமே. ஆனா இங்கிலீஷ்ல தான் சொல்லுவோம்.'

'எங்க அத கொஞ்சம் உன் வாயால ஒரு தடவ இங்க சொல்லு பார்ப்போம். கேழ்கிறேனே நானும் தான்.'

'India is my country and all Indians are my brothers and sisters I love my country, and I am proud of its rich and varied heritage. I shall always strive to be worthy of it. I shall give respect to my parents, teachers, and all the elders, and treat everyone with courtesy.'

'வெரி குட். ரொம்ப நன்னா சொல்றியே. இதுக்கெல்லாம் உனக்கு அர்த்தம் சொல்லி கொடுத்து இருக்காளா பள்ளிக்கூடத்துல?'

'சொல்லிக் கொடுத்திருக்கா மாமா. நான் வேணா உங்ககிட்ட இப்ப அர்த்தங்களை சொல்லட்டுமா?'

'வேணாம் வேணாம். உனக்கு அர்த்தம் தெரியுங்கறது எனக்கு புரிஞ்சு போச்சு. நான் இப்ப ஒரே ஒரு கேள்வி கேட்கப் போறேன். பயப்படாதே. இதே உறுதிமொழியிலேந்துதான்.'

ஆர்வம் என்னிடம் சற்று தலை தூக்குகிறது. 'என்ன கேள்வி கேட்பார்? அர்த்தம் கூட நான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரே?'

'நீ பாரத தேசத்தில பொறந்தவன் தானே? நீ நம்ம நாட்ட நேசிக்கிறவன் தானே? எல்லார்கிட்டயும் அன்பா பழகுற வன் தானே? இதெல்லாம் இருந்தும் தினமும் ஏன் இந்த உறுதிமொழியை பள்ளிக்கூடத்துல சொல்லணும்? என்னிக்காவது இதைப்பத்தி யோசிச்சி இருக்கியா?'

இதுவரை நான் யோசித்ததில்லை. ப்ரேயர்ல சொல்லணும். அது மட்டும் தான் எனக்கு தெரியும். அவர் கேள்வியில் ஏதோ சூசகம் இருக்கிறது என்று புரிகிறது. கேட்டு விட்டாரே. அசட்டுத்தனமான பதிலாக இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்? தெரியலையே மாமா... இது கொஞ்சம் பெட்டராக இருக்குமோ?'

'எனக்குத் தெரியலையே மாமா. ஏன் மாமா டெய்லி சொல்ல வைக்கிறா ஸ்கூல்ல?'

'எந்த ஒரு செயலுக்கும் முன்னாடி உறுதிமொழி ஏத்துக்கறது அப்படிங்கிறது நம்பிக்கை சார்ந்த விஷயம். ஸ்கூல்ல படிக்க போறோம். பாடங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம பாரத தேசத்துக்காரா, நாம பாரத தேசத்தை ரொம்ப விரும்பறோம் சக மனிதர்களை சகோதர சகோதரிகளா பாவிக்கிறோம். உனக்காக படிக்கிறது அப்படிங்கறது ஒருபுறம் இருந்தாலும் இந்திய தேசத்துக்காக படிக்கிற அப்படிங்கிற உணர்வ கொடுத்துண்டு படிக்கணும். இதேபோலத்தான் மந்திரங்கள்ல வர ஸங்கல்ப போர்ஷணும்.'

'எந்த ஒரு செயல் தொடக்கத்துக்கும் ஸங்கல்பம் முக்கியம். பொதுவா ஸங்கல்பம்கிறது நம்பிக்கை சார்ந்த விஷயம். பலன்களை எதிர்பார்த்து சொல்லக்கூடிய மந்திரங்களுக்கு நம்பிக்கை ஆதாரமாக இருக்கு. இந்த நம்பிக்கைல ரெண்டு வகை உண்டு. தன்னம்பிக்கை தெய்வ நம்பிக்கை. கொஞ்சம் ஆழமாக சிந்திச்சு பார்த்தோமானா தன்னம்பிக்கைதான் தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை தான் தன்னம்பிக்கை. கடவுள நம்புறவா கிட்ட தன்னம்பிக்கையும் யதார்த்தமாகவே வந்துடும்'

'சில ஸங்கல்ப மந்திரங்கள் பூஜா பலன்கள விலாவாரியா சொல்லி இருக்கும். க்ஷேமம் தைரியம் வீரம் விஜயம் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்.... இப்படி எல்லாம் கிடைக்கும் அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வரும். நித்திய கர்மாவான சந்தியாவந்தனத்துல இந்த ஸங்கல்ப மந்திரம் ஒரு சின்ன உறுதிமொழி மாதிரிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

'மமோபாத்த-ஸமஸ்த-துரித க்ஷய-த்வாரா-ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராதஹ ஸந்தியாம் உபாஸிஷ்யே... இது கார்த்தால பண்றதுக்கு.

மத்தியானத்துக்கு 'மாத்யான்னிஹம் கரிஷ்யே

சாயரட்சை பண்ற சந்தியா வந்தனத்துக்கு 'ஸாயம் சந்த்யா உபாஸிஷ்யே' 

நம்மள மாதிரி இருக்கிற ஸ்மார்த்தாளுக்கும் வைஷ்ணவாளுக்கும் ஸங்கல்பம் சொல்லும்போது ஒரு சின்ன டிஃபரன்ஸ். நாம ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அப்படின்னு சொல்றோம். அவா ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம் அப்படின்னு சொல்வா. மத்தபடி மந்திரங்கள் ரெண்டு பேருக்குமே பொது தான்.'

'இப்ப அர்த்தத்துக்குள்ள போலாமா?'

'மம உபாத்த அப்படின்னா என்னால் அடையப்பட்ட

ஸமஸ்த துரித அப்படின்னா எல்லா பாவங்களையும்

க்ஷயத்வாரா அப்படின்னா நசுக்க செய்யறதுனால

பரமேஸ்வர ப்ரீத்யர்தம் அப்படின்னா பரமேஸ்வரன் அருளுக்கு பத்திரமாகும் பொருட்டு

ப்ராதஹ சந்தியாம் உபாஸிஷ்யே அப்படின்னா காலையில் சந்தியா தேவியை உபாஸிக்கிறேன்.'

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மத்தியானத்துக்கும் சாயந்திரம் சந்தியாவந்தனத்துக்கும் கொஞ்சம் மந்திரத்த மாத்தி அமச்சுக்கணும்.

'இந்த ஸங்கல்ப மந்திரத்த நன்னா உத்து கவனிச்சேயான்னா இது ஒரு நம்பிக்கையோடு ஏத்துக்கிற உறுதிமொழின்னு புரியறதோன்னோ?'

'உன் மனசுல நன்னா படியறதுக்காக சங்கல்ப மந்திரம் அர்த்தத்தை இன்னொரு தடவை சொல்றேன். கவனமா கேட்டுக்கோ.'

'நான் சேர்த்துண்ட பாவத்தை நசுக்கி பரமேஸ்வரன் அனுக்கிரகத்தை அடையறதுக்காக இந்த சந்தியாவந்தனத்த செய்யறேன். அதாவது சந்தியா தேவியை உபாஸிக்கிறேன். உபாஸிக்கிறேன் அப்படின்னு உச்சரிச்சாலும் பாவங்கள் நசுங்கும் அப்படிங்கிற நம்பிக்கையோட பின்னிப்பிணைஞ்ச உறுதிமொழியா இந்த ஸங்கல்பத்த புரிஞ்சுக்கோ.'

'சங்கல்பம் என்பது மனஸ விட விசாலமானது. எப்ப ஒருத்தன் ஸங்கல்ப்பிக்கிறானோ அவன் தெளிவா யோசிக்க ஆரம்பிக்கிறான். தீர்மானம் பண்றான். தீர்மானத்தை பேச ஆரம்பிக்கிறான். பேச்சு பெயர் வடிவம் எடுக்கறது. அப்படி எடுக்கறச்சே மந்திரங்கள் அதுக்குள்ள அடங்கறது. அந்த மந்திரங்கள்ல கருமங்கள் ஒடுங்கறது.'

'உறுதிமொழி எடுத்துண்டு செய்யப்படற செயல் ஒருத்தனுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து இறை அருளையும் அனுக்ரஹிக்க வைக்கறது.'

'நாம ஸங்கல்ப்பம் சொல்லிட்டு ஒரு செயலை செய்யறதால அந்த உறுதி மொழியிலேந்து மனம் கோணாமல் இருக்க பகவான் நம்மள ஜாக்கிரதையா பார்த்துக்கறார்.'

'நன்னா புரிஞ்சுண்டியா டா பாஸு?'

'சரி. இப்ப ரூல்ஸுக்கு போவோம். ஸ்கூல்ல உறுதிமொழி எடுத்துக்கறச்சே என்ன செய்யணும் அப்படின்னு வாத்தியார் சொல்லிக் கொடுத்திருப்பார் இல்லையா? வலது கையை நீட்டிண்டு விரல்கள உள்ளங்கைக்குள்ள மடக்கிண்டு உறுதிமொழி வாசகங்கள சொல்லணும் அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காளில்லையோ?'

'ஆமாம் ஆமா அப்படித்தான் உறுதிமொழியை சொல்லுவேன்.'

'அதே மாதிரியே ஸங்கல்பம் மந்திரம் செய்யும் போது இடது கை கீழும் வலது கை மேலுமாக வலது தொடை மீது வெச்சுண்டு ஸங்கல்ப மந்திரத்தை ப்ரயோகம் பண்ணனும்.'

'மார்ஜனம் பத்தி பாடம் அடுத்த கிளாஸ்ல வச்சுப்போமோ இல்லை இப்பவே சொல்லிக் கொடுக்கட்டுமா? இதை ஏன் கேட்கிறேன்னா இன்னிக்கு உன் கவனம் கிளாஸ்ல கொறவுதான். ஆத்தங்கர ஞாபகமாவே இருக்கோ?'

அவர் யூகித்தது சரிதான். 'என் மனசுல ஓடறத இவர் எப்படி சட்டுனு புரிஞ்சுக்கிறார்? நான் அவரையே தானே பார்த்துண்டு இருந்தேன் கிளாஸ்ல. எப்படி கண்டுபிடிச்சார்?'

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நான் அன்று கற்ற பாடமாக இருந்ததோ என்னவோ?

'மாமா நான் உங்களை இன்னிக்கி நமஸ்காரம் பண்ணவே இல்ல. இப்ப பண்ணட்டுமா?'

'போக்கிரி படவா. போதும் கிளாஸு நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறேன் அப்படின்னு சொல்ல வரயாக்கும்?'

சிரித்து விட்டேன் அவர் இப்படி என் மனதில் இருந்ததை போட்டு உடைத்ததில்.

தொடரும்..

மனதோடுயாகம் - பகுதி 10

பகுதி 10

'எழுதி முடிச்சுட்டியா பாஸு? மேற்கொண்டு பாடத்துக்குள்ள போலாமா?'

'நான் எழுதினத பார்க்கலையா நீங்க?'

'சாவகாசமா அப்புறம் பாத்துண்டா போச்சு. நீ சீரியஸா எழுதும்போது உன் பின்னாடி வந்து பார்த்தேன் நோக்கு தெரியாம. கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு. ரெண்டு வரி நோட்டு நிறைய எழுதுவ போல இருக்கு. உங்க அப்பா கையெழுத்தும் பிரமாதமா இருக்கும்.'

இப்படி சொன்னவர் சற்று அமைதியாகி விட்டார். என்னுடைய அப்பா சிந்தனைகள் அவருக்கு வருத்தத்தை கொடுத்திருக்க வேண்டும்.

'மாமா, மேற்கொண்டு சொல்லித்தரேன்னு சொன்னேளே?'

என்னுடைய திசைதிருப்பல் அவருக்கு எதார்த்தத்தை புரிய வைத்திருக்க வேண்டும்.

'ஓம் பூஹு ஓம் புவஹ ... ஓம் சத்யம் வரைக்கும் பார்த்தோமா. இப்ப மேற்கொண்டு சொல்லு பார்ப்போம்?'

சொல்லத் துவங்குகிறேன்.

'ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனா ப்ரசோதயாத்.. ஓமாபஹ.'

'இரு இரு இரு இரு சித்த இரு. பிரசோதயாத்.... அப்படிங்கறதோட நிறுத்திக்கோ.'

'ப்ரசோதயாத் வரைக்கும் கும்பகம். அதாவது மூச்ச இழுத்து பிடிக்கிற மந்திரம். இன்னொரு தடவை சொல்றேன். ஓம் பூ ஓம் புவ அப்படின்னு சொல்லிண்டே ஓம் சத்யம் சொல்ற வரைக்கும் மூச்ச இழுக்கணும். ஏற்கனவே விரல்களையெல்லாம் எப்படி வெச்சுக்கணும்னு சொல்லியிருக்கேன். அதையும் மறக்கக்கூடாது. இதுவரைக்கும் சொன்னது பூரகம். அதுக்கப்புறம் ஓம் தத்ஸவிதுர் அப்படின்னு தொடங்கி ப்ரசோதயாத் அப்படின்னு முடிக்கிற வரைக்கும் கும்பகம். அதாவது இழுத்துண்ட மூச்ச விடாம பிடிச்சு வெச்சிக்கிறதுக்காக சொல்லப்படற மந்திரம்.'

'இப்ப இந்த கும்பக மந்திரத்தோட அர்த்தத்தை பார்ப்போமா? உனக்கு சமஸ்கிருதம் அரிச்சுவடி பாடங்கள் தெரிஞ்சிருந்தா பதம் பிரிச்சுக் கூட சொல்லித் தருவேன். பரவால்ல. அதுக்காக கவலப்படாதே. மந்திரத்தோட பொருள மாத்திரம் மனசுக்குள்ள வாங்கிக்கோ. அதுவே போதும்.'

'ஓங்கார பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகள தூண்டராரோ அனைத்தையும் படைக்கிற அந்த பகவானுடைய மிகச்சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம்.'

'இதுதாண்டா அந்த கும்பகம் மந்திரம் போர்ஷனோட முழு அர்த்தம். மூச்ச நாம நிறுத்தி வைக்கிற அந்த சில நொடிகள் பகவான ஜோதி ஸ்வரூபமா நினைச்சுண்டு த்யானம் செய்யணும். இதுல ஒரு சூட்சமம் இருக்கு. சாதாரணமா நாமே மூச்சை உள்வாங்கி பிடிச்சு நிறுத்தி வைக்கும்போது நம்மளையும் அறியாம ஒரு அமைதி கிடைச்சுடும். இதையே பிராக்டீஸ் பண்ணப் பண்ண அந்த அமைதியே உன்ன ஒரு வெற்றிடத்துக்கு அதாவது சூனியத்திற்கு கொண்டுபோயி தெய்வ சிந்தனைய கொடுத்துடறது. அந்த சமயத்துல நீ இந்த அமைதியில இருக்கும் போது பகவான ஜோதி சொரூபமாக த்யானிக்கறபோது நீ சொல்ற மந்திரங்களோட உதவியால ஒரு வைப்ரேஷன் உடம்புக்கு கிடைக்கிறது. பண்ண பண்ண நீயே இத உணர ஆரம்பிச்சுடுவ.'

'அடுத்தது என்ன பாக்கி இருக்கு? என்ன செய்யப்போகறோம் சொல்லு பாப்போம்?'

'நிறுத்தின மூச்ச விடப் போறோம். இல்லையா மாமா?'

'அதேதான் பாஸு. ஆனா அவசர அவசரமா விடக்கூடாது. மெல்ல மெல்ல இழுத்துப் பிடிச்சு வெச்சிருந்த மூச்ச மொள்ள மொள்ள விடணும். அப்படி விடும்போது அடுத்தகட்ட மந்திரத்தை மனசோட சொல்லிண்டே விடணும்.'

'குறிப்பா சொல்லப்போனா இந்த மூச்ச இழுக்கறது, புடிச்சு வெச்சுக்கிறது அப்புறம் மெள்ள மெள்ள விடறது இது எல்லாத்துக்குமே டைமிங் இருக்கு. ஆரம்பத்துல இந்த டைமிங் ஸென்ஸோட நீ பிராக்டிஸ் பண்ண பிராக்டிஸ் பண்ண அதுவே உனக்கு யதார்த்தமா பழகிடும். அந்த டைமிங் பத்தி அப்புறம் சொல்றேன். முதல்ல அந்த ரேசக மந்திரத்தை சொல்லிப் பார்ப்போம்.'

'ஓம் ஆபஹ
ஜ்யோதி ரஸஹ
அம்ருதம் ப்ரஹ்ம
பூர்ப்-புவஸ் ஸுவ-ரோம்'

'இதுக்கு என்ன அர்த்தம்? ஓங்காரமே ஜலம், ஒளி, ரஸம் பொருந்திய அன்னத்தை கொடுக்கக்கூடிய பூமி, உயிருக்கு ஆதாரமான வாயு மற்றும் பரந்த ஆகாஸம். அது மாத்திரமல்ல நமக்குள்ள இருக்கக்கூடிய வியாக்ருதிகள் அதாவது மனம் புத்தி அஹங்காரம் எல்லா தத்துவத்திற்கும் ஓங்காரமே.'

'நான் சொல்லி கொடுத்த பொருள அதே ஆர்டர்ல மந்திரத்தை நீயே கூட‌ பதம் பிரிச்சு பார்த்து ஓரளவு புரிஞ்சிக்கலாம். ரொம்ப டெப்த்தா போய் மண்டய போட்டு கொழப்பிக்க வேண்டாம். மேலோட்டமா உனக்கு அத்தம் தெரிஞ்சா அதுவே போறும்.'

'சரி. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த பூரகம் கும்பகம் ரேசகம் இதுக்கெல்லாம் கால அளவு இருக்கு. அது ஆளாளுக்கு மூச்ச இழுக்குற பலத்தைப் பொருத்து இருக்கும். அதனால ஒரு ஜெனரல் ரூல அடிப்படையா வெச்சுக்கோ. அதாவது ஒரு பங்கு மூணு பங்கு இரண்டு பங்கு அளவுக்கு அந்த பூரகம் கும்பகம் ரேசகம் இருக்கட்டும். அதாவது பூரகம் செய்ய அதாவது மூச்சை இழுக்க அஞ்சு செகண்ட் ஆச்சுன்னா பதினஞ்சு செகண்ட் கும்பகத்துக்கும் பத்து செகண்ட் ரேஸகத்துக்குமா வெச்சிண்டு பிராக்டிஸ் பண்ணனும். கணக்குப் பாடத்துல விகிதாச்சாரத்தில சொல்றச்சே ஒண்ணு ஈஸ்டு மூணு ஈஸ்டு ரெண்டு அப்படின்னு சொல்லுவாளே (1:3:2). அப்படி புரிஞ்சுக்கோ. இந்த விகிதாச்சாரத்துல கூட பேதங்கள் உண்டு. உன்னோட மூச்சு திறனை பொருத்து பிற்பாடு ஒரு யோகா டீச்சர வெச்சு கூட இந்த விகிதாச்சாரத்தை திருத்தி அமச்சுக்கலாம். இந்த 1:3:2 எங்கரது ஒரு பொதுவான ரூல் அப்படின்னு புரிஞ்சுண்டு இது பிரகாரம் பண்ணிட்டு வா.'

'சரி பாஸு. இன்னிக்கி இத்தோட நிறுத்திக்கலாம். இந்த பிராணாயாமம் பத்தி பேச ஆரம்பிச்சா சொல்லிட்டே போகலாம். மூச்சுக் காத்துன்னு லேசா சொல்லிடறோம். ஆனா அதுக்குள்ள இருக்கிற விஷயங்கள் ரொம்ப ஆழமானது.'

'மாமா, பூரகம் கும்பகம் ரேசகம் இதுக்கெல்லாம் ரேஷியோ சொன்னேள். ஆனா கடைசியா சொன்ன கேவல கும்பகத்துக்கு ரேஷியோ சொல்லவே இல்லையே.'

'நீ கேட்கிறது சரிதான் பாஸு. அதோட ரேஷியோ ஒண்ணு. அதாவது பூரகத்துக்கு எடுத்துக்கிற டைம். பிராணாயாமம் நீ பண்ணும் போது கடைசியாக மூக்குல வெச்சிண்ட கைவிரல்கள‌ bபாவமா காது கிட்ட எடுத்துண்டு போறோம் இல்லையா. அந்த டைம் இந்த கேவல கும்பத்துக்கான டைம்னு வெச்சுக்கலாம்.'

'இந்த மாதிரி காது கிட்ட கொண்டு போறது ஒரு ஐதிகமாகத்தான் சொல்லப்படறது. ரொம்ப வியாக்கியானங்கள் இதுக்கு கிடையாது. ஜஸ்ட் புரிஞ்சுண்டா போதும்.'

'ரொம்ப தேங்க்ஸ் மாமா. நீங்க இன்னிக்கி என்னோட ரொம்ப நேரம் செலவழிச்சுட்டேள். நான் கிளம்பட்டுமா மாமா?'

'சரி ஜாக்கிரதையா போயிட்டு வா. அடுத்த கிளாஸ்ல உனக்கு ஸங்கல்பத்தை பத்தியும் மார்ஜனம் பத்தியும் சொல்லி தரேன். எனக்கு ராதா கல்யாணம் விஷயமா கணக்கு வழக்குகள் எழுத வேண்டியிருக்கு. நீ கெளம்பு.'

நமஸ்காரம் அபிவாதயே முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

தொடரும்...

மனதோடுயாகம் - பகுதி 9

பகுதி 9

ரகு சாஸ்திரிகள் அதுவரை சொல்லிக்கொடுத்த பிராணாயாமம் பற்றிய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக என் சிந்தனையெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்த பூரகம், கும்பகம், ரேசகம் .. அதாவது சுவாசத்தை இழுத்துக் கொள்வது, சில நொடிகள் அந்த சுவாசத்தை தக்க வைத்துக் கொள்வது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை வெளியே விடுவது... இப்படி செய்யும்போது விரல்களை எப்படி எல்லாம் வைத்துக்கொள்வது... என்ற முக்கியங்களில் என் கவனம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

'நமக்குத்தான் பிராணாயாமம் மந்திரம் தெரியுமே. அதச் சொல்லிண்டே இத பண்ணனும் அவ்வளவு தானே' என்று ஒரு அசட்டு கணிப்பிலும் என் எண்ணம் இருந்தது. 

என்னை அறியாமல் வெளிவந்த சிரிப்புகளை அவர் பார்த்துக் கொண்டிருந்திருந்தார் போலும்.

'என்ன பாஸு உனக்கு நீயே சிரிச்சிண்டு இருக்கே. என்ன விஷயம்? சொன்னால் நானும் சேர்ந்து சிரிப்பேனோன்னோ?'

'ஒன்னும் இல்ல மாமா. நீங்க இதுவரைக்கும் சொன்ன பிராணாயாமம் மந்திரத்தையும் சேர்த்துச் சொல்லி கற்பனை பண்ணிண்டிருந்தேன். சரியா செய்யறேனா தப்பா செய்யறேனான்னு எனக்குள்ளேயே குழப்பம். அதான் சிரிச்சிண்டிருந்தேன்.'

'அதான் நான் வந்துட்டேனே. சரியா நான் சொல்லிக் கொடுத்தோண்ன நீ சமத்தா நன்னா செய்யப்போற. ரெடியா?'

'பாஸு, உனக்குத்தான் பிராணாயாமம் மந்திரம் அத்துப்படி ஆச்சே. எங்க சொல்லு பாப்போம்.'

ஆரம்பிக்கிறேன்....
- ௐ பூஹு
- ௐ புவஹ
- ௐ சுவஹ
- ௐ மஹஹ
- ௐ ஜனஹ
- ௐ தபஹ
- ௐ ஸத்யம்

'இத்தோட சித்த நிறுத்து. நான் சொன்னதுக்கு அப்புறம் மேற்கொண்டு போகலாம் சரியா?'

'ஓம் அப்படிங்கறது பிரணவ மந்திரம். அது நோக்கு தெரியுமோன்னோ?'

'தெரியும் மாமா'

'அந்த ஓம் சொல்லிட்டு ஏதோ ஒவ்வொரு வார்த்தையா சொல்றியே. அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?'

'ஒரளவு ஞாபகம் இருக்கு மாமா. ஏதோ ஏழு லோகத்தை குறிக்கறதா நீங்க எனக்கு பூணூல் போட்ட சமயத்துல சொல்லிக் கொடுத்திருக்கேள்னு நெனைக்கிறேன்.'

'நெனைக்கிறது என்ன.... அதேதான்'

'சரி கொஞ்சம் விளக்கமா பார்ப்போமா? இந்த அகண்ட பிரபஞ்சத்தில மொத்தம் பதினாலு லோகங்கள் இருக்கிறதா சொல்றா. நாம இருக்கிற பூமிய சேர்த்து ஏழு லோகம் மேலேயும் பூமிக்கு கீழே ஏழு லோகமும் இருக்கு. முதல்ல பூமியும் பூமிக்கு மேலே உள்ள ஏழு லோகங்கள் என்ன என்ன அப்படின்னு பார்ப்போம்.'

'பூலோகம், புவர்லோகம் சுவர் லோகம் ஜனலோகம், மகர் லோகம் தபலோகம் அப்புறம் கடைசியா சத்தியலோகம்.'

'இந்த ஏழுலேயும் யார் இருக்கா அப்படிங்கறதையும் விவரிச்சு சொல்லி இருக்கா. பூலோகத்துல யார் யார் இருக்காங்கறதுதான் நோக்கே தெரியுமே. அத விட்டுட்டு பார்த்தோம்னா புவர்லோகத்தில பித்ருக்கள் இருக்கிறதாவும் சுவர் லோகத்துல தேவர்கள் இருக்கிறதாவும் துருவன் மாதிரி கடும் தபசு செஞ்சுட்டு நட்சத்திர அந்தஸ்து அடஞ்சவா மகர் லோகத்தில இருக்கிறதாவும் ரிஷிகள் யோகிகள் முனிவர்கள் இவாள்லாம் ஜன லோகத்திலேயும் தபோலோகத்துலேயும் இருக்கிறதாவும் கடைசியா பிரம்ம தேவர் லோகமா சத்தியலோகத்தையும் சொல்லியிருக்கா. இந்த புவர்லோகம் சுவர்லோகம் மஹர் லோகம் ஜனலோகம் தபலோகம் சத்யலோகம் எல்லாமே பூலோகத்துல இருக்கிற நமக்கு மேல இருக்கிற லோகங்கள்.'

'இதே மாதிரி அதல லோகம் விதல லோகம் சுதல லோகம் தலாதல லோகம் மஹாதல லோகம் ரசாதல லோகம்
பாதாள லோகம் ... இந்த ஏழும் பூமிக்கு அடியில இருக்கிற லோகங்கள்.'

'இந்த ரெண்டு ஸெட்டையும் சேர்த்து தான் நாம சுருக்கமா ஈரேழு லோகம் அப்படின்னு புரிஞ்சுக்கறோம்.'

இப்போது எனக்கு அவரிடம் ஏதோவொரு கேள்வியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதை புரிந்து கொண்ட அவர்:

'நீ என்ன கேக்க போறேங்கறது எனக்கு புரிஞ்சுடுத்து. பிராணாயாமம் மந்தரத்துல பூமிக்கு கீழே இருக்கிற லோகங்கள் வரவே இல்லையே? இதானே உன் டவுட்?'

நான் கேட்க நினைத்தது இதைத்தான். எனவே என் ஆர்வம் புன்சிரிப்பையும் இணைத்துக் கொண்டது.

'யாராவது பூமிக்கு கீழ போயி வாழறதுக்கு விருப்பப்படுவாளா இல்லாட்டி தேவர்கள் முனிவர்கள் யோகிகள் நட்சத்திரங்கள் இவாள்ல்லாம் வசிக்கிற லோகங்கள்ல ஏன் அதுக்கு மேல எல்லாத்தோடையும் உயர்ந்ததான பிரம்மா விஷ்ணு சிவன் எல்லாரும் இருக்கிற சத்திய லோகத்தில் வாழறதுக்கு ஆசைபடுவாளா?'

'அதனாலதான் சூட்சுமமா பூமிக்கு கீழ இருக்கிற எந்த லோகத்தையும் பிரணாயாமம் மந்தரத்தில சேர்க்கல. இப்ப புரிஞ்சுதா?'

'ஸத்ய லோகத்துக்கு காரணமாவும் சாட்சியாவும் இருக்கிற பரந்தாமனை நோக்கி பயணிக்கிற புண்ணிய ஆத்மாக்கள் இந்த அத்தனை லோகங்களையும் விட்டுட்டு வைகுண்டம் என்கிற பரமபதத்தை சேர்ந்துடறான்.'

'அப்படிப்பட்ட பரமபதத்தை அடையறதுக்கு ஓம்காரம் என்கிற ஒலியும் அதை ஒட்டிய மூச்சு கட்டுப்படுத்துதலும் நமக்கு ரொம்ப ஹெல்ப் பண்றது.'

'ஓங்காரமே பூலோகம் ஓங்காரமே புவர்லோகம் ஓங்காரமே சுவர் லோகம் ஓங்காரமே மகர் லோகம் ஓங்காரமே ஜனலோகம் ஓங்காரமே தபோலோகம் ஓங்காரமே சத்தியலோகம்.'

இதுதான் பிராணாயாமத்தோட பார்ட் ஒன். அதாவது நான் ஏற்கனவே சொல்லிக் கொடுத்தபடி மூச்சை இழுக்கும்போது மட்டும் சொல்ற மந்திரங்களோட அர்த்தங்கள். குறிப்பா சொல்லப் போனா நான் முன்னாடி சொன்னேனே பூரகம். அந்த பூரக மந்திரங்கள் அப்படின்னு கூட புரிஞ்சுக்கோ.'

'இப்ப நான் உனக்கு ஒரு நாற்பது பக்கம் நோட்டும் பென்சிலும் தரப்போறேன். அதுல இந்த பிராணாயாமத்தை பத்தி நீ இதுவரைக்கும் புரிஞ்சிண்ட சகலத்தையும் எழுதி காமி பார்ப்போம்.'

நாற்பது பக்கம் நோட்டு ஒன்றையும் பென்சிலையும் தருகிறார். புதிய நோட்டாக அது இருந்தது அதைப் பிரித்து முகர்ந்து பார்க்கிறேன்.

'நோக்கு புது நோட்டு வாசனை பிடிக்குமாக்கும்?'

'ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமா. ஸ்கூல்ல நோட்டுப் புத்தகம் எல்லாம் கொடுத்தோண்ண மூந்து மூந்து பார்த்துண்டே இருப்பேன்.'

'கழுதைக்கு தானே தெரியும் புஸ்தக வாசனை?'

'மாமாஆஆஆஆ. நான் ஒண்ணும் கழுதை இல்ல.'

'சும்மா ஜோக்குக்கு சொன்னேன் டா.'

அவர் மடத்து காரியங்களில் ஈடுபடுகிறார். நான் நோட்டுப் புத்தகமும் எழுத்துமாக.....

தொடரும்..

மனதோடுயாகம் - பகுதி 8

பகுதி 8

'வா பாஸு. ரெண்டே ரெண்டு பூஜை பாத்திரம் இருக்கு. அவைகள தேச்சுட்டு வந்துடறேன். அதுவரைக்கும் அமைதியா உக்காந்துக்கோ ஒரு ஓரத்துல.'

'நான் வேணா தேச்சி தரட்டுமா மாமா.'

'இல்லடா. எல்லாம் பித்தள பாத்திரம். அழுத்தம் கொடுத்து தேய்க்கணும். உனக்கு சரிப்பட்டு வராது. நீ குழந்தையோன்னோ. பரவாயில்ல. பத்து நிமிஷத்துல வந்துடுவேன்.'

அவர் சொன்னதைப் போல பாண்டுரங்கன் படத்திற்கு முன்னால் உட்காருகிறேன். ஜன்னல் வழியாக ஆற்றங்கரையிலிருந்து ரம்யமான சத்தத்துடன் வந்த காற்று படத்தை சிறிய அளவில் அசைக்கிறது. நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்கன் ஒரு சின்ன அசைவை கொடுத்த உணர்வு.

பேசிக்கொண்டு இல்லாததாலோ என்னவோ என் கண்கள் என்னையறியாமல் மூடிக் கொள்கின்றன. சிறிது நேரம் அப்படியே இருக்கிறேன்.

'காத்து அடிக்கிறதுல தூக்கம் வரதா பாஸு.'

அவர் இப்படி கேட்டவுடன் கண்களை திறக்கிறேன்.

'இல்ல மாமா. தூக்கமெல்லாம் வரல. சும்மாதான் கண்ண மூடிண்டு இருந்தேன்.'

'பேஷ் பேஷ். தியானம் பண்ணிண்டிருந்தியாக்கும். இது மாதிரி அமைதியா ஒரு எடத்துல கண்ண மூடிண்டு இருக்கிறது தானே தியானம்ன்னு சொல்றா. சரி நாம இன்னிக்கு பிராணாயாமத்தை கத்துப்போமா?'

வழக்கம் போல இருக்கைகளை ஏற்பாடு செய்து விட்டு நமஸ்காரங்களை முடித்துவிட்டு அமர்கிறோம்.

'பாஸு, பிராணாயாமம் அப்படிங்கற ஒரு வார்த்தைய ரெண்டா பிரிச்சு பார்த்தோம்னா 'ப்ராணா' 'ஆயமா' அப்படின்னு ரெண்டு பொருள்கள சொல்லிக் கொடுக்கற வார்த்தையா இருக்கு. இந்த எடத்தில ப்ராணா என்ற சொல் மூச்சுக்காற்றை குறிக்கறது. 'ஆயமா' அப்படின்னா நிறுத்தி வைக்கிறது அல்லது கட்டுப்படுத்தி வைக்கிறது. மூச்சை கட்டுப்படுத்துதல் என்ற பொருளில்தான் நாம இந்த பிராணாயாமம் என்ற சொல்லோட அர்த்தமாக புரிஞ்சிக்கறோம். எங்க நான் சொன்னத அப்படியே சொல்லு பாப்போம்.'

'பிராணாயாமம் அப்படிங்கற வார்த்தையில பிராணா என்கிற சொல்லும் ஆயமா என்கிற சொல்லும் அடங்கியிருக்கு. ப்ராணான்னா மூச்சுக்காத்து. ஆயமா அப்படின்னா கட்டுப்படுத்தறது. சரியா சொன்னேனா மாமா?'

'அவ்வளவுதாண்டா. நம்மளோட மூச்ச கட்டு படுத்தறக்கு பெயர்தான் ப்ராணாயாமம். சுருக்கமா சொல்லப்போனா இது ஒரு மூச்சுப்பயிற்சி அதாவது மூச்சுக்கான எக்ஸர்சைஸ்.'

'எக்ஸர்சைஸ் அப்படிங்கும்போதே சில விதிகள் அதுல அடக்கம் அப்படிங்கறத சேர்த்தே புரிஞ்சிக்கணும். உங்க பள்ளிக்கூடத்துல உடற்பயிற்சி செய்யும் போது கை கால்களை இந்த அளவுக்கு நீட்டணும் உடம்ப நேரா வச்சுக்கணும் கழுத்த ஆட்டப்படாது.... அப்படின்னு ஒவ்வொரு எக்ஸர்சைஸூக்கும் முறைகள் இருக்கோன்னோ. அதே மாதிரியே இந்த பிராணாயாமத்துக்கும் செயல் முறைகள் உண்டு.'

'பிராணயாமம் செய்யும்போது சொல்ற மந்திரத்தை பத்தி பின்னாடி பேசுவோம். அதுக்கு முன்னாடி இந்தப் பயிற்சிய பத்தி சில விஷயங்களை பார்ப்போம். சரியா. கூன் போடாம நேர நிமிர்ந்து சித்த நாழிக்கு உட்காரு என் முன்னாடி.'

'இப்ப உன்னோட ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கி கட்டைவிரல் பவித்ர விரல் ரெண்டுலயும் மூக்கோட வலது இடது பக்கம் அழுத்திக்கோ. மூக்குல ரெண்டு நாசித் துவாரங்கள் இருக்கோன்னோ. வலதுபக்க நாசியை கட்டை விரலாலேயும் இடதுபக்க நாசியை பவித்ர விரலாலேயும் அழுத்தி புடிக்கணும் சரியா. ஏற்கனவே பிராணாயாமம் செஞ்சிண்டு வரவன்தானே நீ?

'இந்த பயிற்ச்சியை நீ கவனமாக கத்துக்கணும். ஏன்னா இது நம்மளோட மூச்ச ஒழுங்கு படுத்துற சமாச்சாரம். அதுக்காக ரொம்ப பயப்பட வேண்டாம்.'

'நம்மளோட மூச்சுக்கு ஆதாரமா இருக்கிறது நம்மளோட மூக்கும் மூக்குகளோட சம்பந்தப்பட்ட ரெண்டு துவாரங்களும், இல்லையா? இந்த துவாரங்கள நாசிகள்னு கூட சொல்லுவா இல்லையா? அதனால இந்த நாசிகள நாம எப்போதும் க்ளீனா வெச்சுக்கணும். அதுலயும் குறிப்பா இந்த பிராணாயாமம் செய்யும் போது நாசிகள சுத்தமா வெச்சிக்கணும். ஏன்னா, அந்த துவாரங்கள் வழியாத்தானே மூச்சு காத்து போயிட்டு வரணும் இல்லையா?'

'சந்தியாவந்தனம் செய்ய உக்காரதுக்கு முன்னாடியே முகம் கைகால்கள் மாத்திரம் இல்லாம மூக்குத் துவாரங்களையும் நன்னா ஜலத்த விட்டு விரலால் துழாவி சளி, தூசு இல்லாமல் சுத்தம் செஞ்சிக்கணும். சுத்தமான துணியால கை கால்கள் மாத்திரம் இல்லாம மூக்குத் துவாரங்களையும் துடைச்சுடணும். இப்படி சுத்தம் செய்யறதால மூக்குத் துவராங்கள் வழியா தங்கு தடையில்லாம காத்து போயிட்டு திரும்ப வெளியே வரதுக்கும் வாய்ப்பு வரது இல்லையா?'

பிராணாயாமத்தை முறையா செஞ்சிண்டு வந்தா ஏராளமான பலன்கள் உண்டு. பொதுவா சொல்லணும்னா உடல் ஆரோக்கியமா இருக்கும். ஊளைச்சதை கரஞ்சுடும். தேவைக்கு அதிகமா கொழுப்புச் சத்து உடம்புல ஏறாது. கண்கள் பிரகாசமா இருக்கும். வயித்து கோளாறு, ஜீரணக் கோளாறு வராது. உடல் சிந்திக்கும் திறமை அதிகரிக்கும். உஷ்ண உடம்பா இருந்தா வெப்பம் கொறையும். முகம் அழகாயிடும். முக தேஜஸ் பிரமாதமா ஜொலிக்கும்.'

'எல்லா முக்கியமான நன்மைகளையும் சொல்லிட்டேன்னு தான் நெனைக்கிறேன். நான் ஏதாவது சொல்ல விட்டுப் போயிருந்தா அவைகள கூட நீ பிராணாயாத்த ப்ராக்டிகலா செய்ய செய்ய உனக்கே தெரிஞ்சுடும்.'

'சரி. இப்ப பிராணாயாம் மூலம் எப்படி மூச்ச கட்டுப்படுத்தறதுன்னு சொல்றேன்.'

'இந்த மூச்சு பயிற்சியில நாலு நிலைகள் இருக்கு.

முதலில் சுவாசத்தை உள்ளே இழுக்கறது. இதுக்கு பூரகம்னு பேர்.'

'இழுத்த சுவாசத்தை உள்ளே சித்த நிறுத்தி வைக்கறது. இது ரெண்டாவது ஸ்டேஜ் இத கும்பகம்னு சொல்லுவா.'

'அடுத்த ஸ்டேஜ் நிறுத்தின சுவாசத்தை வெளிய விடறது. அதுக்கு பேரு ரேசகம்.'

'கடைசியா வெளியே சுவாசத்தை விட்டோண்ண அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்தறது. இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று சொல்லுவா'

'மாமா ஒரே ஒரு சந்தேகம். நாமதான் மூச்ச கம்ப்ளீட்டா விட்டுடறோமே. அதுக்கப்புறம் எதுக்கு பகிரங்க கும்பகம்?'

'சரியான கேள்வி பாஸூ. ஒரு பிராணாயாமம் முடிக்கறச்சே உடனே ஃபாஸ்டா இன்னொண்ணு ஆரம்பிக்காம கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கணும். அந்த ரிலாக்ஸேஷன் தான் கேவல கும்பகம். அதாவது அமைதியா எல்லா மூச்சு காத்தும் வெளிக் காத்தோட சேரர வரைக்கும்னு புரிஞ்சுக்கோ. இந்த பகிரங்க கும்பத்துக்கு மேக்ஸிமம் போனா ஃபைவ் ஸிக்ஸ் ஸெகண்டுகள்தான் ஆகும். பண்ண பண்ண உனக்கே இது தெரிஞ்சுடும். ரொம்ப மண்டைய போட்டு உடச்சிக்க வேண்டாம்.'

'சரி. இதுவரைக்கும் என்ன பார்த்தோம்? பிரணாயாமம்னா என்ன அப்படின்னு தெரிஞ்சிண்டோம். எப்படி செய்யறதுன்னு மேலோட்டமா பார்த்தோம். பிரணாயாமம் பண்றதுக்கு முன்னாடி நாம எப்படி நாசிகள் ரெண்டையும் கிளீனா வச்சுக்கணும்னு பார்த்தோம். கடைசியா பிராணாயாமம் பண்றதுனால நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் அப்படின்னும் தெரிஞ்சிண்டோம், இல்லையா? இப்ப நாம பிராணாயாம பயிற்சியை மந்திரங்களோட கனெக்ட் பண்ணி மூச்ச இழுக்கிறதுக்கும், இழுத்த மூச்சை எப்படி புடிச்சு நிறுத்தணும்கறதையும், நிறுத்தின மூச்ச மெல்ல மெல்ல விடறதுக்கும் கத்துப்போமா?'

'இதுவரைக்கும் நான் உனக்கு சொல்லிக் கொடுத்ததயெல்லாம் கொஞ்சம் ஞாபகபடுத்திண்டிரு. பூஜ துணிகள கொஞ்சம் திருப்பாற்கடல் குளத்துல அலசி காயப் போட்டுட்டு வந்துடுறேன். பத்து நிமிஷம் தான் ஆகும். சமத்தா ஒக்காந்து இருக்கியா.'

அவர் ஒரு வாளியில் சில துணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பாற்கடல் பக்கம் செல்கிறார். நானும் அவர் சொன்னதைப் போல பாடங்களில் என்னுடைய ஞாபகங்களை கூட்டுகிறேன்.

தொடரும்

மனதோடுயாகம் - பகுதி 7

பகுதி 7

சில வாரங்களுக்கு பிறகு தான் அடுத்த ஸந்தியா வந்தன வகுப்பு தொடர சாத்தியமாகிறது. கற்றுக்கொடுக்கும் என் ஆசான் ரகுபதி சாஸ்திரிகள் வைதீகங்களில் படு பிஸி. சிறிய ஊர். விரல்விட்டு எண்ணும் படியாகத்தான் அக்ரஹார தெருக்களின் எண்ணிக்கை.

அவர் உச்சரிக்கும் மந்திர ஒலிகளின் நேர்த்திகளும் சாஸ்திர சம்பிரதாயங்களில் அவருக்கு இருந்த அசாத்திய தேர்ச்சியும் அவரை ஆத்து வாத்தியாராக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தன பல பிராமண குடும்பங்கள். பல பிராமண குடும்பங்களில் அவர் வைத்திருந்த பேரன்பும் அவரின் ஜீவனத்திற்கு பேருதவியாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

'ரொம்ப நாள் ஆயிடுத்தில்லடா பாஸு?'

'மாமா உங்கள புடிக்கவே முடியல. மடத்துக்கு வந்து பார்ப்பேன். பூட்டியிருக்கும். திரும்ப போயிடுவேன்.'

'எனக்கு உன் ஞாபகம் இருந்து கொண்டே இருக்கும். ஆச ஆசையா கத்துகிறானே பாஸு. கத்துக் கொடுக்க முடியலியே அப்படின்னு தோணிண்டே இருக்கும். என்ன பண்றது டா. ஜீவனம்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணுமே. இல்லையா?'

'பரவாயில்லை மாமா. நீங்க தானே சொன்னேள் கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டா தான் நன்னா மூளைக்கு ஏறும்னு.'

'சரி டா நாம ஆரம்பிப்போம். இதுவரைக்கும் சொல்லிக்கொடுத்ததுல என்ன ஞாபகம் வெச்சிண்டுருக்க. எங்க சொல்லு பாப்போம்?'

வாமனர் உபநயனத்துல ஆரம்பிச்சு ஸ்நான வகைகள ஒண்ணு விடாம சொல்லி ஆசமனம் வரைக்கும் சொல்கிறேன். இடையிடையே அவர் கேள்விகள் என் பதில்கள் அவர் திருத்தங்கள் என்று நீண்டு முடிந்தன இதுவரை கற்ற பாடங்களின் தொகுப்பு.

'மாமா அன்னிக்கு ஆசமனத்துல ஏதோ விட்டுப்போச்சு. அடுத்த கிளாஸ்ல எனக்கு ஞாபகப்படுத்து அப்படின்னு சொன்னேளே.'

'ஆஆஆஆங். ஞாபகம் இருக்கு. அதுலேந்தே ஆரம்பிப்போம்.'

'ஆசமனம் ஆரம்பிக்கும்போது மூணு நாமாக்களோடு ஆரம்பிக்கிறோம் இல்லையா?'

'ஆமா மாமா. அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: இதைத்தானே சொல்ல வரேள்.'

'ஆமாண்டா. இந்த மூணு நாமக்களுக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கு. இந்த மூணு நாமாக்களையும் ஒண்ணா ஒருத்தர் தொடர்ந்து சொல்றச்சே அது சகல வியாதிகளையும் போக்கக்கூடிய சக்தி படைச்சதா இருக்கு. ஆரோக்கியத்துக்கும் இந்த மூணு நாமாக்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு. பொதுவா சந்தியாவந்தனமே ஆயுள் விருத்திக்கும் தேஜஸுக்கும் பாபங்களை போக்கறதுக்கும் செய்யப்படுகிற ஒரு நித்திய கர்மா இல்லையா!'

'மாஆஆஆஆமா. இந்த நாமாக்களை பத்தி எனக்கு ஏற்கனவே ஒரு தடவை நீங்க சொன்ன ஞாபகம் இருக்கு‌ நான் ஜொரத்தோட படுத்துண்டு இருந்தப்ப.'

'பரவாயில்லையே. கெட்டிகாரண்டா நீ.'

'ஆனா மாமா இப்ப இன்னொரு தடவையும் சொல்லுங்கோ இதப்பத்தி. கேட்டுக்கறேன்.'

'டெய்லி லட்சுமி நாராயணன் கோவில்ல எல்லாரோடையும் சேர்ந்து நீ ஒரு ஸ்தோத்திரம் சொல்லுவியே .... ஆபதாப பஹத் தாரம்.... அப்படின்னு ஆரம்பிக்குமே ஞாபகம் இருக்கா? ஆபதோத்தாரண ஸ்லோகம்னு அந்த ஸ்லோகத்துக்கு பெயர். அதுல கூட இந்த நாமாக்கள பத்தி நடுப்புல ரெண்டு வரி வரும்...

'அச்சுதானந்த கோவிந்த
நாமோ சாரண பேஷஜாத்
நஸ்யந்தி சகலாஹா ரோஹாஹா
சத்யம் சத்யம் வதாம்மயகம்'

இதுக்கு என்ன அர்த்தம்னா 'அச்சுதா அனந்தா கோவிந்தா என்ற மூன்று நாமாக்களும் சகல ரோகங்களையும் அதாவது வியாதிகளையும் போக்கவல்லது. இது சத்தியமாக சொல்லப்படுவது.'

'இப்ப புரிஞ்சுதா இந்த நாமாக்களோட மகிமைய பத்தி? இந்த மூணு நாமாக்களையும் ஆசமனத்துல வெச்சு மனுஷா உயிர் வாழ பிரதானமாக இருக்கிற ஜலத்தோட இணைச்சு நம்மளோட ஆயுள் விருத்திக்காக செய்யப்படுகிற சந்தியாவந்தனத்தின் ஆரம்பமாக வெச்சிருக்கா.'

'சந்தியாவந்தனம் மாத்திரம் இல்ல. பூஜையோ அல்லது வேற எந்த கர்மாக்களுக்கோ இந்த ஆசமனத்தத்தான் ஆரம்பமா சொல்லி இருக்கா. ஜலத்தோடையும் நாமாக்களோடையும் ஸ்பரிஸங்களாலேயும் இந்த ஆசமனமானது பின்னப்பட்டிருப்பதால தேக சுத்தம் ஆத்ம சுத்தம் ஆயுள் விருத்தி ... எல்லாத்துக்குமே இது உகந்ததா இருக்கு. இந்த ஆசமனத்த இன்னொரு விதமாவும் சொல்லுவா. 'மஹா வியாதி-பிரசமனீ நாம த்ரயீ-வித்யா'. அதாவது மகா வியாதிகளையும் போக்கக்கூடிய மூணு நாமாக்கள் அடங்கிய வித்யை இது. புரிஞ்சுதா?'

'அடுத்ததாக நாம பார்க்கப் போறது கணபதி த்யானம். இது அனேகமா எல்லாருக்கும் தெரிஞ்ச மந்திரம்தான். இத சொல்லாம எந்த பூஜையோ புனஸ்காரமோ ஆரம்பிக்கவே ஆரம்பிக்காது. நோக்கும்தான் தெரியுமே.... எங்கே சொல்லு பார்ப்போம்?

'சுக்கலாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே'

'பிரமாதம். அக்ஷரப் பிஸகு கூட இல்லாம நன்னா சொல்றியே? சமத்து.'

'சரி இந்த மந்திரத்த சொல்லும்போது என்ன செய்யறோம்?'

'தலையில குட்டிப்போம் மாமா.'

'உங்க பள்ளிக்கூடத்துல நீ விஷமம் பண்ணினா வாத்தியார் உன் தலையில குட்டற மாதிரியா?'

'என்ன ஒண்ணும் என்னிக்கும் எங்க வாத்தியார் குட்ட மாட்டாராக்கும்.'

'உன்ன எதுக்கு குட்ட போறார்? நீதான் கட்டி சமத்தாச்சே. சரி, இப்போ பிள்ளையார தியானிக்கும் போது ஏன் குட்டிக்கணும்னு சொல்லி தரேன்.'

'நம்ம சிரசுல எப்போதும் அமிர்தம் ஒட்டிண்டு இருக்கும். அந்த அமிர்தத்த மஹா கணபதிய நினைச்சுட்டு சிரத்தோட ரெண்டு பக்கத்தையும் அஞ்சு முறை மெதுவா குட்டிக்கும்போது சிரசில் உள்ள அந்த அமிர்தம் நம்ம உடம்புல உள்ள அத்தனை நாடிகளிலேயும் பாயறதா சொல்லப்பட்டிருக்கு. இது கணபதி ஆராதனையில ஒரு விசேஷமான அம்சமா பெரியவாளெல்லாம் சொல்லி இருக்கா. இப்ப அர்த்தத்துக்கு போகலாமா?'

'சமஸ்கிருதத்தில விஷ்ணும் அப்படின்னா எங்கும் நிறைந்திருப்பவர். சுக்லாம் பரதரம் அப்படின்னா வெள்ளை ட்ரெஸ் போட்டிருப்பவர். சசி வர்ணம் அப்படின்னா நிலவு மாதிரி ஒளி உள்ளவர். சதுர்புஜம் அப்படின்னாத்தான் உனக்கு தெரியுமே. நான்கு கைகள் உள்ளவர். ப்ரசன்ன வதனம் அப்படிங்கரத்துக்கு ஆனந்தமான வடிவமைப்பு கொண்டவர்னு அர்த்தம். ஸர்வ விக்ன உபசாந்தயே அப்படின்னா எல்லா தடைகளையும் விலக்கி .... த்யாயேத் .... தியானம் செய்கிறேன்.'

'இவ்வளவு தாண்டா அர்த்தம் இந்த ஸ்லோகத்துக்கு. நிலவு போல முகம் ஆனந்தம் பொங்கும் முக மண்டலம் எங்கும் நிறைந்திருப்பவர் வெள்ளை ஆடை உடுத்தி இருப்பவர,‌ நான்கு கைகளை உடையவர்.... இப்பேர்ப்பட்ட கணபதிய செய்ய போகிற என் எந்த செயல்களுக்கும் தடையில்லாமல் நடத்திக் கொடுக்க தியானம் செய்கிறேன்.'

'ஒரு சின்ன சந்தேகம் மாமா. பிள்ளையாரோட பிரத்தியேகமான யானைமுகம் இல்லாட்டி தும்பிக்கை தந்தம் தொந்தி இதைப்பத்தியெல்லாம் இந்த ஸ்லோகத்தில வரலையே?'

'நீ கேக்குறது அற்புதமான கேள்வி. நீ சொல்றதெல்லாம் இந்த ஸ்லோகத்தில் வராததால ஒருவேளை உனக்கு இது கணேச ஸ்துதிதானான்னு சந்தேகமா இருக்காக்கும்? கவலைப்படாத இது கணேச ஸ்துதியேதான்.'

'நான் ஒரு தடவ அற்புதமான கோவிலுக்கு போனேன். மாயவரத்துக்கும் திருவாரூருக்கும் நடுவுல ஒரு ஊர் இருக்கு. திலதர்ப்பணபுரின்னு அந்த ஊருக்கு பேரு. அங்க இருக்கிற பிள்ளையாருக்கு யானை முகம் தும்பிக்கை தந்தம் இப்படி எதுவுமே இல்லை. ஆதிவிநாயகர் அப்படின்னு அந்த பிள்ளையாரை சொல்றா. இப்ப நீ இந்த கேள்வி கேழ்கறச்சே என் மனசுல பட்டத நான் சொல்றேன். காலம் காலமா இந்த கணேச ஸ்துதிய தான் எல்லா பூஜைகளுக்கும் கர்மாக்களுக்கும் ஆரம்பமா வெச்சிருக்கா. அதனால இத ஆதி விநாயகர் ஸ்லோகமா கூட எல்லாரும் ஏத்துண்டு இருக்கான்னு தோணறது. நான் சொல்றது தப்பா கூட இருக்கலாம். சந்தேகம் வேண்டாம். இது பிள்ளையார் ஸ்லோகம் தான்.'

'நான் ஏதாவது தப்பிதமா கேட்டுட்டேனா மாமா.'

'பாஸு. ஒண்ண நீ புரிஞ்சிக்கணும். வேதம் அல்லது ஸ்லோங்களுக்கு ஒரு அர்த்தம்தான் இருக்கணும்னு இல்லை. நம் மனசு கேட்க கேட்க அனுபவங்களால புதுப்புது பொருள்கள் விளங்கும். தேடல்கள் தொடர தொடர, நம் ஞானம் விரிவடையும். அது முடிவில்லாம போயிண்டே இருக்கும்.:

'பாஸு, இன்னைக்கே உனக்கு பிராணாயாமம் பத்தியும் கிளாஸ் எடுக்கலாம்னூனு தான் நெனச்சிண்டு வந்தேன். ஆனா இப்ப தோண்றது பிராணாயாமத்தை தனி கிளாஸா எடுத்தா என்ன அப்படின்னு. சந்தியாவந்தனத்தில பிராணாயாமமும் காயத்ரி ஜபமும் ரொம்ப இம்பார்ட்டண்ட் இல்லையா? அதனால பிராணாயாமத்தை ஸ்பெஷலா கத்துக்கலாம், என்ன?'

'நீங்க சொன்னா சரி மாமா.'

'அது போகட்டும். இன்னிக்கு கிளாஸ்ல என்ன கத்துண்டேன்னு சுருக்கமா சொல்லு.'

சொல்கிறேன். சொல்லாமல் விட்டதை தெளிவாகச் சொல்லி புரியவைக்கிறார்.

'சரி பாஸூ. நீ கிளம்பு. எனக்கு சித்த மடத்துல வேலை இருக்கு. நான் ஒன்னோட கிளம்பல.'

தொடரும்..