Friday, March 25, 2022

குலதெய்வம்

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.

2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது.

3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.

4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.

4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.

5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.

6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.

8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.

9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.

10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

.11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.

12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

13). குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

14). அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

15). எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

16). ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.

17). குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

18). குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.

19). இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.

20). குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

21). குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.

22). வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

23). தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

24). குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பது.

25). குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.

26). குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.

27). குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது.

28). குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

29). குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.

30). துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்.

31). நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.

32). குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் இருங்கள்.

33). ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.

34). குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. [ ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.

35). குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.

36). குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

37). குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே.

பழமொழி

🌝 தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம். 
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய். 
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ. 
🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.

வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட 
முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...

#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

நாளின் பெருமை

அப்படி இந்த 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????

1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.

2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 

3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??

4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும் 

5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு. 

6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.
நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது
அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ...

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"
ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
"வேதம் நான்கினும்" மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே"

நான்மறை...என்பது வேதங்கள் நான்கு.

சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.
அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்
ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை
தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.
பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம் 

பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் நான்கு பேர்.சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.

நான்கு வர்ணங்கள்..பிராமண, ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

திசைகள் நான்கு

ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம..உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள்.

வெல்ல முடியாத நாலு..
நித்ரா..ஸ்வப்ன..ஸ்த்ரீ..காம
அக்னி..இந்தன..கரா..பாண

கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது
பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது
தீயை விறகு நிறைவு செய்யாது
குடிகாரனை குடி நிறைவு செய்யாது

ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ
ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்..விதுர நீதி

இதையே ஹிதோபதேசம்
அக்னியை விறகு அணைக்காது
சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது
யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது
அழகிகளை ஆண்கள் த்ருப்தி செய்ய முடியாது.. என சொல்கிறது

யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்

சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்

நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.

நான்கு என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்.. , 

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

" செத்தாலும், 
நல்லதுக்கும்,
கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்" 

என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.

நாலு பத்தி எழுதினத நமது நண்பர்கள் குழு 2.0 சார்பாக ஒரு நாலு பேராவது படிச்சா சரி...படிப்பீங்களா?😂

எதிர்பார்ப்பு

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.

இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி. அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு போனார். பாதுகாப்பு எல்லாம் கொடுக்க முடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" என கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன்கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை.

ஒரு பழமொழி உன்டு..' கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும் கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். 

ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்" என அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை..? நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும் வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. 

அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போன பின்னர் வருத்தப்படமாட்டோம்.

செவன் சாமுராய். அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.

ஒரு விவசாய கிராமம். அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிரார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். 

போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள்.

விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உணவை கட்டிக்கொன்டு வயலுக்கு சென்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் சென்று விடுகிறார்கள்.
தம் தேவை அவர்களுக்கு முடிந்தது என தெரிந்து கொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்.

இதுதான் உலகம். நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும் வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது.

அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போன பின்னர் வருத்தப்படமாட்டோம்.

வங்கி

வங்கிகளில் என்ன நடக்கிறது?

லத்தீன் மொழியிலிருந்து ஃபிரெஞ்ச் மொழி வரைக்கும் வங்கித் தொழிலுக்கு ஒரே அர்த்தம்- 

“கொடுக்கல் வாங்கல்” தான்.

Bank is a institute which 
deals with money.

Buying and giving money

Lending money

Buy low cell high 

வணிக பாஷையில் லேவா தேவி

பாமர மொழியில் ஃபைனான்ஸ் 
கம்பெனி. 

சென்னைவாசிகளுக்கு சேட்டு கடை.

லத்தீன் மொழியிலிருந்து ஃபிரெஞ்ச் மொழி வரைக்கும் கொட்டாம் பட்டியிலிருந்து  நியூயார்க் வரை வங்கித் தொழிலுக்கான சுருக்கமான ஒரே அர்த்தம்.

“கொடுக்கல் வாங்கல்” தான்.

வங்கிகள் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன்பு வரை பெரும் செல்வந்தர்கள் மட்டுமே புழங்கும் கெளரமான இடமாக கருதப்பட்ட  மரியாதைக்குரிய இடம்.

வங்கி முதலாளிகளின் உறவினர்கள் 
வேண்டியவர்கள் மட்டுமே பணிபுரிய முடிந்த இடம்.

பாமரர்களும் உள் நுழையலாம் என்று
திருமதி இந்திரா காந்தி அம்மையார் வங்கி வாசல்களைத் திறந்து விட்டு இப்போது கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

அரசாங்கத்தின் ஓட்டு வங்கி கடன் கொள்கைகள் புதிது புதிதாக வகுக்கப்பட்டது

முன்னொரு காலத்தில் சஞ்சய் காந்தியும் 
ஜனார்த்தன பூஜாரி என்றொரு மத்திய 
மந்திரியும் ரூம்  போட்டு புதுசு புதுசாய் யோசித்து வித விதமான பெயர்களில் ஐந்து அம்சத்திட்டம் இருபது அம்சத்திட்டம் என்று திட்டம் தீட்டி கடன்களை வங்கிகள் வாரி வழங்க வேண்டுமென்று 
உத்தரவு பிறப்பித்தார்கள்.

பின்னர் அவர்களும் கடன் வாங்கியவர்களும் அந்த கடன்களும் காணாமல்
போயின. அதனால் கவலைக்கிடமான 
நிலைக்குப்போனது சில பொதுத்துறை
வங்கிகள். 

அந்த விஷயம் கிடந்துட்டுப் போகுது கழுதை. நடப்புக்கு வருவோம்.

ரெண்டு வருடங்களுக்கு முந்தைய தேதி 
கணக்குப்படி இந்தியாவில்  --

26 பொதுத்துறை வங்கிகள்
25 தனியார் வங்கிகள்
43 வெளிநாட்டு வங்கிகள்
56 கிராமிய வங்கிகள்  
1,589 நகர கூட்டுறவு வங்கிகள்

93,550 வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் 
இயங்கின.

இதில் சில பல வங்கிகள் வேறு வங்கிகளோடு இணைக்கப் பட்டன இவற்றின் 148623  கிளைகளில் சுமார் 
1௦ லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தார்கள்

இவற்றோடு 84839  ஏடிஎம் மையங்களின் மூலம் நாடு முழுவதும் சுமார் 17 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுக் 
கொண்டிருந்த மாபெரும் வங்கி சாம்ராஜ்யம் இப்போது மான்யம் வாங்கும் நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆ...வங்கிக்கே மான்யமா ?

ஆம் வங்கிகள் மட்டுமல்ல  BSNL, LIC, Railway என்று பல துறைகள் மீண்டும் தனியாரிடம் விற்கப்படலாம்.

History repeats itself.

ஆம்.அதுதான் யதார்த்தம்.
CUSTOMER IS OUR BOSS என்று போர்டு போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்
களை தெய்வமாக கொண்டாடிய கால
மெல்லாம் போச்சு.

இன்று ,ரேஷன் கடையில் அரிசிக்கும் 
மண்ணெண்ணெய்க்கும் கியூவில் நிற்க வைத்தது போல் மக்களை வரிசையில் நிற்க வைத்து தர்மாஸ்பத்திரியில் 
நர்சுகள் ஊசி போடுவது போல செல்லாத நோட்டுகளை விசிறி எறியாத குறையாக வீசிக் கொண்டிருக்கிறார்கள் மதிப்பிற்குரிய வங்கியாளர்கள்

இந்த லட்சணத்தில் ரேஷன் கடைகளிலும் வங்கிப் பணிகளை துவக்கப் போகிறார்களாம். அதாவது பேங்க் கேஷியர் இனி அரிசியையும் அளந்து போடணும். மண்ணெண்ணெய் ஊற்றணும்.

1950 களில் ஆயிரங்களிலும், 1980 களில் லட்சங்களிலும், 1990 களில் கோடிகளிலும் வீட்டுக்குள்ளேயே ஒரு கணக்குப்பிள்ளையை மட்டும் வைத்துக்கொண்டு
பற்று-வரவு எழுதி தலை முறை தலை முறையாக வட்டித்தொழில் செய்து வரும் நாட்டுக்கோட்டை செட்டியாரின் ஒரு நாள் 
Turnover பல கோடிகளுக்கு மேலே இருக்கும்..

ஒரு வங்கிக் கிளை செய்கிற வேலையை 
ஒரு கணக்குப் பிள்ளையை மட்டும் வைத்துக்கொண்டு ரேஷன் கார்டு ஆதார் அட்டை கேரண்டி எதுவுமே இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கோடிக்கணக்கில் வரவு செலவு செய்து ஃபைனான்ஸ் நடத்திக்
கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இதே அளவு வரவு செலவு செய்ய இன்று ஒரு வங்கி கிளைக்கு ஒரு மேலாளர், ஒரு காசாளர், ஒரு குமாஸ்தா, ஒரு பியூண், ஒரு அப்ரைசர், ஒரு வாட்ச் மேன். ஒரு ஜெனரேட்டர், பல கம்ப்யூட்டர்கள், தேவைப்படுகிறது.

இதற்காக மாதம் தோராயமாக 2.5௦ 
லட்சம் செலவாகிறது. இத்தனை இருந்தும் ஊழியர்களுக்கு வேலை எளிதாக இல்லை. வாடிக்கையாளர்களுக்கும் சுலபத்தில் வேலை முடிவதில்லை.

மொத்தத்தில் வாடிக்கை யாளர்களும் 
திருப்தியாக இல்லை.
ஊழியர்களும் சந்தோஷமாக இல்லை.

முன்பெல்லாம் அரசின் பணப்பரிவர்த்தனை முழுவதும் அரசு கருவூலங்களின்
மூலம்தான் நடக்கும்.

பென்ஷன்தாரர்ளும் ஒப்பந்ததாரர்களும் 
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடும் 
அதிகாரிகளும் TREASURY யில்தான் பணம் பெற்றுச் செல்வார்கள்.

பத்திரப்பதிவுக்கு சப்-ரிஜிஸ்ட்ரர் ஆபீசுக்
குத்தான் போக வேண்டும்.

தாலுகா ஆபீசில் பத்திரம் பதிவு செய்ய முடியாது,

ஜாதி சான்றிதழை தாலுகா ஆபீசில்தான் பெற முடியும்,

சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் வாங்க முடியாது.

இதே போல முன்னொரு காலத்தில் பணம் போட எடுக்க மட்டுமே என்றிருந்த 
வங்கிகளின்  நிலைதான் இன்று பரிதாபகரமாக மாறிவிட்டது.

மகளிர் சுய உதவிக்குழுவா ஓடு பேங்குக்கு,

நூறு நாள் வேலைத்திட்டமா ஓடு பேங்குக்கு,

முதியோர் உதவித் தொகையா ஓடு பேங்குக்கு,

கேஸ் சிலிண்டர் மான்யமா ஓடு பேங்குக்கு...

டெபாஸிட்டுக்கு (Target) குறி வைத்து அதுக்கொரு KASA காம்பெய்ன், கடனுக்கு ஒரு (Target) குறி வைத்து லோன் மேளா, கடன் கொடுத்த பிறகு அதை வசூலிக்க RECOVERY CAMP, வசூலாகாத வாராக்கடன்களின் 
வட்டிகளை தள்ளுபடி செய்ய கன்ஸ்யூமர்
கோர்ட் காம்ப்ரமைஸிங் செட்டில்மென்ட்

அதற்கொரு நீதிமன்ற குழு அமைத்து வசூலாகாத வாராக்கடன்களை தள்ளுபடி செய்ய லோக் அதாலத்.

கொடுக்கல் வாங்கலைத் தவிர இப்படி, பயனாளிகள் சந்தையில் மாடு பிடிப்பதிலிருந்து வீட்டுக்கடன் வாங்கினவரின் 
கொத்தனார் கலவை போடுவது வரை 
ஊர்ப்பட்ட வேலைகளை வங்கிப் பணிகளின் ஊடே திணித்துவிட்டார்கள்.

கடன்காரர்களை துரத்திக்கொண்டு 
வங்கி மேலாளர்களும் ஊழியர்களும் 
தெருத்தெருவாக அலய வேண்டியதிருக்கிறது. இதற்கு மார்கெட்டிங் என்றொரு கவுரவமான பெயருமுண்டு.

கடன் கொடுத்த பிறகு அதை வசூலிக்க 
அவர்கள் அலையும் அலைச்சல் இருக்கே 
சீச்சீ...நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்று வங்கி வேலைக்கு விரும்பி வந்தவர்களெல்லாம் மிரண்டு தலை தெறிக்க ஓடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. 

அதாவது அட்சய பாத்திரத்தை கையில் 
கொடுத்து பிச்சை எடு என்கிறது.

CBS  எனும் (CORE BANKING SYSTEM) கம்ப்யூடர் சிஸ்டம் வந்த பிறகு வங்கிப் 
பணியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் 
உள்ள உறவு சீர்குலைந்துவிட்டது.

வங்கிப் பணியாளர்களின் கண்கள் கணினியின் திரையை விட்டு விலகி 
வாடிக்கையாளரைப் பார்ப்பதே இல்லை. பார்க்க நினைத்தால் கூட பார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு டென்ஷன். பிரஸ்ஸர் ஸ்ட்ரெஸ்.

வேலைப்பளுவின் காரணத்தால் நிமிர்ந்து பரஸ்பரம் முகம் பார்த்தால் தானே சிரிப்பதற்கு?

இது போதாதென்று இப்போது செல்லாத 
நோட்டு பிரச்சினை வேறு. குருவி தலையில் பனங்காயாய் அழுத்துகிறது. ஊழியர்கள் தூக்குக்கயிற்றுக்கு கீழே வேலை செய்வதுபோல் நிம்மதியின்றி பணிபுரிகிறார்கள்.

இன்றைக்கு யார் மூலமாக என்ன பிரச்சினை வருமோ?

எத்தனை பொதுமக்களின் எரிச்சலுக்கும் 
வசவுகளுக்கும் ஆளாகப்போகிறோமோ?

வாங்கி வைத்திருக்கும் பணத்தில் எத்தனை கள்ள நோட்டுகளோ?
எவ்வளவு கருப்புப்பணமோ?

எவ்வளவு பணம் shortage ஆகி கைக்காசை போட்டு கணக்கு முடிக்கப்
போகிறோமோ ?

எப்போது வீடு திரும்புவோமோ என்கிற 
பதட்டத்திலேயே வேலை செய்கிறார்கள்.

பல வங்கிக் கிளைகளிலிருந்தும் 
அதிகாரிகள் மேலாளர்கள் வீடு திரும்ப 
நள்ளிரவாகிவிடுகிறது.
கம்ப்யூட்டர் சுத்துகிற சுத்தல் போதாதென்று நெட் ஒர்க்குகளும் பணியாளர்களின் 
வாணாளை வாங்குகின்றன.

பி.எஸ்.என்.எல் தான் மோசமென்றார்கள்
இப்போது ஏர் டெல், ஜியோ எல்லாம் அதுக்கு அப்பனாக இருக்கு.

வாரம் மூணு நாள்கள் ஊழியர்கள் சும்மா தான் உகார்ந்திருக்கிறார்கள்.

Connectivity இல்லை. அப்படியெனில் ATM மும் வேலை செய்யாது.

ஆப்புகளும் வேலை செய்யாது ஆப்பசைத்த குரங்கு அல்லது புலி வாலைப் பிடித்தவனின் கதையாகி விட்டது மோடியோடு சேர்ந்த வங்கிப் பணியாளர்களின் கதை.

1980 களில் டாக்டர்கள் எஞ்ஜினியர்களுக்குக் கூட பொண்ணு தர யோசிப்வர்கள் பேங்கு மாப்பிள்ளை என்றால் கண்ணை மூடிக்கொண்டு பெண் தருவார்கள்.

ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாகிவிட்டது எனில் வங்கிப் பணியாளர்களின் நிலையை புரிந்து கொள்ளலாம்.

ரொக்கப்பணப் பரிவர்த்தனையிலிருந்து முற்றிலுமாக விலகி NEFT, RTGS மொபைல் பேங்கிங் கூகுள் பே, பே.டி.எம், நெட்பேங்க் இப்படி ஆன்லைனில் 
ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைக்கு அறைகூவல் விடுத்து மக்களை தயார் படுத்தும் மோடி -- பத்து லட்சம் வங்கி ஊழியர்களுக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறாரோ என்று இப்போதே நெஞ்சம் பதறுகிறது.

சந்தையில் மாடு பிடிப்பவர் இரவு நேர இட்லிக்கடை நடத்தும் கையேந்திபவன் 
கடைக்காரர் நடுக்காட்டுக்குள் 
நள்ளிரவில் புரோட்டா சால்னா விற்பவர் 
தின்னும் லாரி டிரைவர் கிளீனர்கள் இவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

ரொக்கமற்ற பரிவர்த்தனையில் 
பில்லுக்கு கார்டுகளை நீட்டினால் உதைதான் விழும் அல்லது மாவாட்ட  வேண்டியதிருக்கும்.

தொழில் நுட்பம் மட்டுமல்ல நாட்டை  முன்னேற்றப் பாதையில் கொண்டு  செல்ல மதி நுட்பமும் வேண்டும்....  

முகநூல் பகிர்வு

வைத்தியம்/மருத்துவம்

ஒரு நாட்டின் மந்திரி ஒரு சேவகனைக் கூப்பிட்டு, நாளை காலையில் நீ வீட்டிலிருந்து அரண்மனைக்கு வேலைக்கு வரும் போது, தலையில் வெள்ளைத் துணியால் ஒரு கட்டு போட்டுக் கொண்டு வா! வழியில் யாராவது என்ன கட்டு என்று கேட்டால், தலைவலி என்று மட்டும் சொல். பின் நடந்தவற்றை முழுவதையும் மன்னரிடம் வந்து சொல் என்றார்.

மறுநாள் சேவகனும் அதே போல் செய்தான். அரண்மனைக்குள் நுழைந்து மன்னனைச் சந்தித்து வணங்கி நின்றான். 

மன்னர் கேட்டார், தலையில் என்னப்பா கட்டு? மன்னா, தலைவலி என்றான் சேவகன். 

மன்னர் சொன்னார், கடுக்காயை அரைத்து அதில் கொஞ்சம் ஓமம் கலந்து நெற்றியில் தடவு சரியாகிடும். அது சரி இப்ப ஏன் இங்கு வந்தாய்?

மந்திரிதான் உங்களை வந்து பார்க்க சொன்னார். வந்தேன்.

ஏன் மந்திரி என்னைப் பார்க்கச் சொன்னார்? 

இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பியது முதல் என்ன நடந்தது என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று சொல்லி சேவகன் முழுமையாக விளக்கினான்,

காலையில் தலையில் கட்டு போட்டதும் என் மனைவி கேட்டாள் ஏன் கட்டுனு? தலைவலினு சொன்னேன். 
கேழ்வரகுப் பத்துப் போட்டுட்டுக் கிளம்புங்க என்றாள்.

வீட்டை விட்டு வெளியே வந்ததிலிருந்து அரண்மனைக்கு வரும் வரை நான் பார்த்த 86 பேரில் 72 பேர் தலையில் என்னவென்று கேட்டார்கள். தலைவலினு சொன்னேன். ஆளுக்கொரு வைத்தியம் சொன்னார்கள்.

அரண்மனைக்குள் நுழைந்த பின்னும் 16 பேர் கட்டினைப் பற்றி விசாரித்தார்கள் பதினாறு வைத்தியம் கிடைத்தது. நீங்களும் ஒரு மருந்து சொல்லியிருக்கீங்க.. இப்ப நான் எதைச் செய்யணும்?

மன்னருக்குக் குழப்பம். இதை ஏனப்பா என்னிடம் வந்து கேட்கிறாய்? என்று கேட்டார்.

 மந்திரி குறுக்கிட்டார். 
மன்னர் மன்னா, நேற்று காலையில், நீங்கள் ஒரு சந்தேகம் கேட்டீர்கள். அதை ஆதாரத்தோடு நிரூபிக்கச் சொன்னீர்கள். அதை உங்களிடம் நிரூபிக்கவே இதைச் செய்தேன் என்றார்.

மன்னர் கேட்ட சந்தேகம் இது தான்.              " நம்ம நாட்டில் அதிகமாகப் பார்க்கப்படும் தொழில் என்ன? "

மந்திரி சொன்ன பதில் "வைத்தியம்/மருத்துவம்".

இன்னிக்கு வரை நோயாளிகளின் பெரிய பிரச்சினை இது தான். எல்லாரும் எல்லா வியாதிக்கும் ஒரு வைத்தியம் சொல்லிப் படுத்துவது தான். நோயாளிகள் நோயை விட இவர்கள் சொல்லும் மருத்துவத்திற்கு தான் அதிகம் பயப்படுகிறார்கள்.

இந்தக் கூத்திற்கிடையே இப்ப கூகுளும் யூட்யூபும் வாட்சப்பும்  வேற நாட்டில் எல்லாரையும் டாக்டராக்கிடுச்சு.

பென்சில்

ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும் பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில் HB என எந்த இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்காது. 

கடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா? வேண்டாமா? என்று கத்திக் கொண்டே கேட்பார். 

நானும் வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார். எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து போய்விட்டது. 

முப்பது வருடம் கழித்து இப்போது எனது மகன் HB6 பென்சில் கேட்கிறான். அவனுடைய ஓவிய ஆசிரியர் இப்போது அவனை துரத்துகிறார். வாழ்க்கை வட்டம் என அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

இப்போது பென்சிலை தேடுவது என் மகனல்ல. நான். கடை கடையாய் அலைந்து பார்த்தேன். HB6 என்ற பென்சில் கிடைக்கவே இல்லை. 

நடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது. 

கடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின் அளவு கோல் என புரிந்து கொண்டேன். 

பென்சில் கிராபைட் மற்றும் களிமண் ஆகிய இரண்டையும் கலந்து செய்கிறார்கள். கிராபைட்டுடன் கலக்கும் களிமண் தான் பென்சிலின் blackness ஐ தீர்மானிக்கிறது. 

இந்த களிமண் சாம்பல் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை இருக்கிறது. அதிக blackness வேண்டுமானால் கருமையான களிமண்ணையும், குறைவான blackness வேண்டுமானால் சாம்பல் நிற களிமண்ணையும் கிராபைட்டுடன் கலக்கிறார்கள். 

இது போல சேர்க்கும் களிமண்ணின் விகிதம் குறைவாக இருந்தால் அது softness ஐ தரும். அதிகமாக இருந்தால் hardness ஐ தரும். 

H என்பது பென்சிலில் இருக்கும் hardness ஐ குறிக்கிறது. B என்பது அதன் blackness ஐ குறிக்கிறது. 

HB பென்சில் என்றால் கடினத்தன்மையும் கருமை அதிகமாகவும் இருக்கும். பொதுவாக எழுதுவதற்கு HB பென்சிலை பயன்படுத்துவார்கள். 

HH என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அதிக கடினத்தன்மையோடு இருக்கும். பொறியியல் வரைபடம் வரைபவர்கள் HH பென்சிலை பயன்படுத்துவார்கள்.

BBB என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அடர் கருமை நிறத்தில் எழுதும்.

1H6B பென்சில் அதிக கருமை எழுதுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.

6H1B பென்சில் கருமை குறைந்து சாம்பல் நிறத்திலும் அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.

H ன் மதிப்பு 1, 2, 3 என அதிகரித்துக் கொண்டே போகும். அது போல B ன் மதிப்பும் 1,2,3 என அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

ஒவியர்கள், பொறியியல் வரைவாளர்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் பென்சிலை தேர்ந்தெடுப்பர். கறுப்பு வெள்ளை படம் வரையும் போது விதவிதமான நிற பேதங்களை வேறுபடுத்திக் காட்ட விதவிதமான பென்சில்கள் தேவை.

இப்போது குழந்தைகள் நேரடியாக அலைப்பேசி அல்லது கணினியில் வரைய தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் பென்சிலால் வரையும் போது கிடைக்கும் finishing கணினியில் வரையும் போது ஏற்படுவதில்லை.

இனி பென்சில் வாங்கும் போது எதற்காக பென்சிலை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தேவையான பென்சிலை கேட்டு வாங்குவோம்.

Nursing Homes

In our close contact a lady (85) is thinking of leaving Mumbai and shifting to a senior citizens colony near Pune. 

Her husband passed away many years ago.  She is educated and married her three daughters, who are now US citizens. They have two kids each who are now in High School/College. 

The lady travelled to US on her own many a times. She lived there for six months or more on six occasions when her daughters delivered babies.

The other day when we called on her she became emotional and disclosed her plan to settle for assisted living in an old age home here, and that she had no intention to go back to US for some reasons.

We felt very sorry for her life in sun set years.

Please read the article below. We felt that our friend was feeling the same way as the author of the article. 

'Relocating to Nursing Home' (in Western Countries, Retirement Homes are called Nursing Homes):

This is an article on the internet that has caused many to reflect over their own lives. The author is a retired writer, and she expressed emotion when she was about to go to a nursing home.

I'm going to a nursing home. I have to. When life, gets to where you are no longer able to take care of yourself, completely, your children are busy, at work and have to take care of their children, and have no time to take care of you, this seems to be the only way out.

The nursing home is in good condition, with clean single rooms equipped with simple and practical electrical appliances. All kinds of entertainment facilities are complete, the food is fairly delicious, the service is also very good. The environment is also very beautiful, but the price is not cheap.

My pension is poorly able to support this. But I have my own house. If I sell it, then money is not a problem. I can spend it on retirement, and the rest will be left as an inheritance for my son. 

The son understands very well: "your money and your property should be enjoyed by you, don't worry about us." 

Now I have to consider preparing to go to a nursing home.

As the saying goes: Breaking a family is worth tens of thousands, which refers to many things. Boxes, bags, cabinets, and drawers are filled with all kinds of daily necessities: clothings for all weathers and beddings for all seasons.

I like to collect. I have collected a lot of stamps. I have also hundreds of purple clay tea pots. There are many small collections, and such small items as pendants of emerald and walnut amber, and two small yellow croakers. 

I am specially fond of books. The bookshelves on the wall are full.

There are also dozens of bottles of good foreign wine. There are full sets of household appliances; various cooking utensils, pots and pans, rice, oil, salt, noodles, floue,spices, various seasonings, in fact the kitchen is also full. 

There are also dozens and dozens of photo albums..., looking at the house full of things, I'm worried!

The nursing home has only one room with a cabinet, a table, a bed, a sofa, a refrigerator, a washing machine, a TV, an induction cooker and a microwave oven -- all the things I will really need. 

There is no place to store the wealth that I have accumulated throughout my life.

At this moment, I suddenly feel that my so-called wealth is superfluous, and it doesn't belong to me. I just take a look at it, play with it, use it. It actually belongs to this world. The wealth that come in turns are just passing by. 

Whose palace is the Forbidden City? The Emperor thought it belonged to him, but today it belongs to the people and society.

You look at these, you play with these, you use these but you can't take them with you in death.

I really want to donate the things in my house, but I can’t get it done. To deal with it has now become a problem. Very few children and grandchildren can appreciate what I have collected. I can imagine what it will be like when my children and grandchildren face with these painstakingly accumulated treasures of mine: all the clothes and bedding will be thrown away; dozens of precious photos will be destroyed; books will be sold as scrap. Collections? If you are not interested, you will dispose of them. The mahogany furniture is not practical and will be sold at a low price.

Just like the end of the Red Mansion: only a piece of white left, so clean.

Facing with the mountain of clothes, I only picked a few favourites; I only kept a set of pots and pans for kitchen supplies, a few books that are worth reading; a handful of teapots for tea. 

Bring along my ID card, senior citizen certificate, health insurance card, household register, and of course a bank card. Enough!

It's all my belongings! I'm gone. I bid farewell to my neighbours, I knelt down at the door and bowed three times and gave this home back to the world.

Yes! In life, you can only sleep in one bed, live in one room. Any more of it is merely for watching and playing!

Having lived a lifetime, people finally understand: we don’t really need much. Don’t be shackled by superfluous things to be happy!

It's ridiculous to compete for fame and fortune. Life is no more than a bed.

For people over 60 years old, shouldn’t we think carefully about how to take the last journey in life?

Let go of fantasies and baggage, and of those things that can't be eaten, worn, used.

Be healthy and be happy

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்து வரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம் தான் பொய்யானால், பாம்பை பாரு..

மருந்து தான் பொய்யானால் வாணம் பாரு..

சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..

சாமி தான் பொய்யானால் சாணம் பாரு..

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

இதற்கான விளக்கம்

மந்திரம் தான் பொய்யானால், பாம்பை பாரு

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்

மருந்து தான் பொய்யானால் வாணம் பாரு

வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பது தான் இதன் பொருள்.

சாஸ்திரம் தான் பொய்யானால் கிரகணம் பாரு

ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன் கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.

எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமி தான் பொய்யானால் சாணம் பாரு

 இது ரொம்ப சுவாரசியமான விஷயம்.  கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். 

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள்.  அதில் தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி,  அதை சாப்பிடும்.

விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின்  கருத்து.

அர்த்தமுள்ள சனாதன தர்மம்..