Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts

Friday, March 25, 2022

வங்கி

வங்கிகளில் என்ன நடக்கிறது?

லத்தீன் மொழியிலிருந்து ஃபிரெஞ்ச் மொழி வரைக்கும் வங்கித் தொழிலுக்கு ஒரே அர்த்தம்- 

“கொடுக்கல் வாங்கல்” தான்.

Bank is a institute which 
deals with money.

Buying and giving money

Lending money

Buy low cell high 

வணிக பாஷையில் லேவா தேவி

பாமர மொழியில் ஃபைனான்ஸ் 
கம்பெனி. 

சென்னைவாசிகளுக்கு சேட்டு கடை.

லத்தீன் மொழியிலிருந்து ஃபிரெஞ்ச் மொழி வரைக்கும் கொட்டாம் பட்டியிலிருந்து  நியூயார்க் வரை வங்கித் தொழிலுக்கான சுருக்கமான ஒரே அர்த்தம்.

“கொடுக்கல் வாங்கல்” தான்.

வங்கிகள் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன்பு வரை பெரும் செல்வந்தர்கள் மட்டுமே புழங்கும் கெளரமான இடமாக கருதப்பட்ட  மரியாதைக்குரிய இடம்.

வங்கி முதலாளிகளின் உறவினர்கள் 
வேண்டியவர்கள் மட்டுமே பணிபுரிய முடிந்த இடம்.

பாமரர்களும் உள் நுழையலாம் என்று
திருமதி இந்திரா காந்தி அம்மையார் வங்கி வாசல்களைத் திறந்து விட்டு இப்போது கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

அரசாங்கத்தின் ஓட்டு வங்கி கடன் கொள்கைகள் புதிது புதிதாக வகுக்கப்பட்டது

முன்னொரு காலத்தில் சஞ்சய் காந்தியும் 
ஜனார்த்தன பூஜாரி என்றொரு மத்திய 
மந்திரியும் ரூம்  போட்டு புதுசு புதுசாய் யோசித்து வித விதமான பெயர்களில் ஐந்து அம்சத்திட்டம் இருபது அம்சத்திட்டம் என்று திட்டம் தீட்டி கடன்களை வங்கிகள் வாரி வழங்க வேண்டுமென்று 
உத்தரவு பிறப்பித்தார்கள்.

பின்னர் அவர்களும் கடன் வாங்கியவர்களும் அந்த கடன்களும் காணாமல்
போயின. அதனால் கவலைக்கிடமான 
நிலைக்குப்போனது சில பொதுத்துறை
வங்கிகள். 

அந்த விஷயம் கிடந்துட்டுப் போகுது கழுதை. நடப்புக்கு வருவோம்.

ரெண்டு வருடங்களுக்கு முந்தைய தேதி 
கணக்குப்படி இந்தியாவில்  --

26 பொதுத்துறை வங்கிகள்
25 தனியார் வங்கிகள்
43 வெளிநாட்டு வங்கிகள்
56 கிராமிய வங்கிகள்  
1,589 நகர கூட்டுறவு வங்கிகள்

93,550 வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் 
இயங்கின.

இதில் சில பல வங்கிகள் வேறு வங்கிகளோடு இணைக்கப் பட்டன இவற்றின் 148623  கிளைகளில் சுமார் 
1௦ லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தார்கள்

இவற்றோடு 84839  ஏடிஎம் மையங்களின் மூலம் நாடு முழுவதும் சுமார் 17 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுக் 
கொண்டிருந்த மாபெரும் வங்கி சாம்ராஜ்யம் இப்போது மான்யம் வாங்கும் நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆ...வங்கிக்கே மான்யமா ?

ஆம் வங்கிகள் மட்டுமல்ல  BSNL, LIC, Railway என்று பல துறைகள் மீண்டும் தனியாரிடம் விற்கப்படலாம்.

History repeats itself.

ஆம்.அதுதான் யதார்த்தம்.
CUSTOMER IS OUR BOSS என்று போர்டு போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்
களை தெய்வமாக கொண்டாடிய கால
மெல்லாம் போச்சு.

இன்று ,ரேஷன் கடையில் அரிசிக்கும் 
மண்ணெண்ணெய்க்கும் கியூவில் நிற்க வைத்தது போல் மக்களை வரிசையில் நிற்க வைத்து தர்மாஸ்பத்திரியில் 
நர்சுகள் ஊசி போடுவது போல செல்லாத நோட்டுகளை விசிறி எறியாத குறையாக வீசிக் கொண்டிருக்கிறார்கள் மதிப்பிற்குரிய வங்கியாளர்கள்

இந்த லட்சணத்தில் ரேஷன் கடைகளிலும் வங்கிப் பணிகளை துவக்கப் போகிறார்களாம். அதாவது பேங்க் கேஷியர் இனி அரிசியையும் அளந்து போடணும். மண்ணெண்ணெய் ஊற்றணும்.

1950 களில் ஆயிரங்களிலும், 1980 களில் லட்சங்களிலும், 1990 களில் கோடிகளிலும் வீட்டுக்குள்ளேயே ஒரு கணக்குப்பிள்ளையை மட்டும் வைத்துக்கொண்டு
பற்று-வரவு எழுதி தலை முறை தலை முறையாக வட்டித்தொழில் செய்து வரும் நாட்டுக்கோட்டை செட்டியாரின் ஒரு நாள் 
Turnover பல கோடிகளுக்கு மேலே இருக்கும்..

ஒரு வங்கிக் கிளை செய்கிற வேலையை 
ஒரு கணக்குப் பிள்ளையை மட்டும் வைத்துக்கொண்டு ரேஷன் கார்டு ஆதார் அட்டை கேரண்டி எதுவுமே இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கோடிக்கணக்கில் வரவு செலவு செய்து ஃபைனான்ஸ் நடத்திக்
கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இதே அளவு வரவு செலவு செய்ய இன்று ஒரு வங்கி கிளைக்கு ஒரு மேலாளர், ஒரு காசாளர், ஒரு குமாஸ்தா, ஒரு பியூண், ஒரு அப்ரைசர், ஒரு வாட்ச் மேன். ஒரு ஜெனரேட்டர், பல கம்ப்யூட்டர்கள், தேவைப்படுகிறது.

இதற்காக மாதம் தோராயமாக 2.5௦ 
லட்சம் செலவாகிறது. இத்தனை இருந்தும் ஊழியர்களுக்கு வேலை எளிதாக இல்லை. வாடிக்கையாளர்களுக்கும் சுலபத்தில் வேலை முடிவதில்லை.

மொத்தத்தில் வாடிக்கை யாளர்களும் 
திருப்தியாக இல்லை.
ஊழியர்களும் சந்தோஷமாக இல்லை.

முன்பெல்லாம் அரசின் பணப்பரிவர்த்தனை முழுவதும் அரசு கருவூலங்களின்
மூலம்தான் நடக்கும்.

பென்ஷன்தாரர்ளும் ஒப்பந்ததாரர்களும் 
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடும் 
அதிகாரிகளும் TREASURY யில்தான் பணம் பெற்றுச் செல்வார்கள்.

பத்திரப்பதிவுக்கு சப்-ரிஜிஸ்ட்ரர் ஆபீசுக்
குத்தான் போக வேண்டும்.

தாலுகா ஆபீசில் பத்திரம் பதிவு செய்ய முடியாது,

ஜாதி சான்றிதழை தாலுகா ஆபீசில்தான் பெற முடியும்,

சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் வாங்க முடியாது.

இதே போல முன்னொரு காலத்தில் பணம் போட எடுக்க மட்டுமே என்றிருந்த 
வங்கிகளின்  நிலைதான் இன்று பரிதாபகரமாக மாறிவிட்டது.

மகளிர் சுய உதவிக்குழுவா ஓடு பேங்குக்கு,

நூறு நாள் வேலைத்திட்டமா ஓடு பேங்குக்கு,

முதியோர் உதவித் தொகையா ஓடு பேங்குக்கு,

கேஸ் சிலிண்டர் மான்யமா ஓடு பேங்குக்கு...

டெபாஸிட்டுக்கு (Target) குறி வைத்து அதுக்கொரு KASA காம்பெய்ன், கடனுக்கு ஒரு (Target) குறி வைத்து லோன் மேளா, கடன் கொடுத்த பிறகு அதை வசூலிக்க RECOVERY CAMP, வசூலாகாத வாராக்கடன்களின் 
வட்டிகளை தள்ளுபடி செய்ய கன்ஸ்யூமர்
கோர்ட் காம்ப்ரமைஸிங் செட்டில்மென்ட்

அதற்கொரு நீதிமன்ற குழு அமைத்து வசூலாகாத வாராக்கடன்களை தள்ளுபடி செய்ய லோக் அதாலத்.

கொடுக்கல் வாங்கலைத் தவிர இப்படி, பயனாளிகள் சந்தையில் மாடு பிடிப்பதிலிருந்து வீட்டுக்கடன் வாங்கினவரின் 
கொத்தனார் கலவை போடுவது வரை 
ஊர்ப்பட்ட வேலைகளை வங்கிப் பணிகளின் ஊடே திணித்துவிட்டார்கள்.

கடன்காரர்களை துரத்திக்கொண்டு 
வங்கி மேலாளர்களும் ஊழியர்களும் 
தெருத்தெருவாக அலய வேண்டியதிருக்கிறது. இதற்கு மார்கெட்டிங் என்றொரு கவுரவமான பெயருமுண்டு.

கடன் கொடுத்த பிறகு அதை வசூலிக்க 
அவர்கள் அலையும் அலைச்சல் இருக்கே 
சீச்சீ...நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்று வங்கி வேலைக்கு விரும்பி வந்தவர்களெல்லாம் மிரண்டு தலை தெறிக்க ஓடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. 

அதாவது அட்சய பாத்திரத்தை கையில் 
கொடுத்து பிச்சை எடு என்கிறது.

CBS  எனும் (CORE BANKING SYSTEM) கம்ப்யூடர் சிஸ்டம் வந்த பிறகு வங்கிப் 
பணியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் 
உள்ள உறவு சீர்குலைந்துவிட்டது.

வங்கிப் பணியாளர்களின் கண்கள் கணினியின் திரையை விட்டு விலகி 
வாடிக்கையாளரைப் பார்ப்பதே இல்லை. பார்க்க நினைத்தால் கூட பார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு டென்ஷன். பிரஸ்ஸர் ஸ்ட்ரெஸ்.

வேலைப்பளுவின் காரணத்தால் நிமிர்ந்து பரஸ்பரம் முகம் பார்த்தால் தானே சிரிப்பதற்கு?

இது போதாதென்று இப்போது செல்லாத 
நோட்டு பிரச்சினை வேறு. குருவி தலையில் பனங்காயாய் அழுத்துகிறது. ஊழியர்கள் தூக்குக்கயிற்றுக்கு கீழே வேலை செய்வதுபோல் நிம்மதியின்றி பணிபுரிகிறார்கள்.

இன்றைக்கு யார் மூலமாக என்ன பிரச்சினை வருமோ?

எத்தனை பொதுமக்களின் எரிச்சலுக்கும் 
வசவுகளுக்கும் ஆளாகப்போகிறோமோ?

வாங்கி வைத்திருக்கும் பணத்தில் எத்தனை கள்ள நோட்டுகளோ?
எவ்வளவு கருப்புப்பணமோ?

எவ்வளவு பணம் shortage ஆகி கைக்காசை போட்டு கணக்கு முடிக்கப்
போகிறோமோ ?

எப்போது வீடு திரும்புவோமோ என்கிற 
பதட்டத்திலேயே வேலை செய்கிறார்கள்.

பல வங்கிக் கிளைகளிலிருந்தும் 
அதிகாரிகள் மேலாளர்கள் வீடு திரும்ப 
நள்ளிரவாகிவிடுகிறது.
கம்ப்யூட்டர் சுத்துகிற சுத்தல் போதாதென்று நெட் ஒர்க்குகளும் பணியாளர்களின் 
வாணாளை வாங்குகின்றன.

பி.எஸ்.என்.எல் தான் மோசமென்றார்கள்
இப்போது ஏர் டெல், ஜியோ எல்லாம் அதுக்கு அப்பனாக இருக்கு.

வாரம் மூணு நாள்கள் ஊழியர்கள் சும்மா தான் உகார்ந்திருக்கிறார்கள்.

Connectivity இல்லை. அப்படியெனில் ATM மும் வேலை செய்யாது.

ஆப்புகளும் வேலை செய்யாது ஆப்பசைத்த குரங்கு அல்லது புலி வாலைப் பிடித்தவனின் கதையாகி விட்டது மோடியோடு சேர்ந்த வங்கிப் பணியாளர்களின் கதை.

1980 களில் டாக்டர்கள் எஞ்ஜினியர்களுக்குக் கூட பொண்ணு தர யோசிப்வர்கள் பேங்கு மாப்பிள்ளை என்றால் கண்ணை மூடிக்கொண்டு பெண் தருவார்கள்.

ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாகிவிட்டது எனில் வங்கிப் பணியாளர்களின் நிலையை புரிந்து கொள்ளலாம்.

ரொக்கப்பணப் பரிவர்த்தனையிலிருந்து முற்றிலுமாக விலகி NEFT, RTGS மொபைல் பேங்கிங் கூகுள் பே, பே.டி.எம், நெட்பேங்க் இப்படி ஆன்லைனில் 
ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைக்கு அறைகூவல் விடுத்து மக்களை தயார் படுத்தும் மோடி -- பத்து லட்சம் வங்கி ஊழியர்களுக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறாரோ என்று இப்போதே நெஞ்சம் பதறுகிறது.

சந்தையில் மாடு பிடிப்பவர் இரவு நேர இட்லிக்கடை நடத்தும் கையேந்திபவன் 
கடைக்காரர் நடுக்காட்டுக்குள் 
நள்ளிரவில் புரோட்டா சால்னா விற்பவர் 
தின்னும் லாரி டிரைவர் கிளீனர்கள் இவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

ரொக்கமற்ற பரிவர்த்தனையில் 
பில்லுக்கு கார்டுகளை நீட்டினால் உதைதான் விழும் அல்லது மாவாட்ட  வேண்டியதிருக்கும்.

தொழில் நுட்பம் மட்டுமல்ல நாட்டை  முன்னேற்றப் பாதையில் கொண்டு  செல்ல மதி நுட்பமும் வேண்டும்....  

முகநூல் பகிர்வு