Saturday, September 28, 2024

அப்பா குறள்

நவீன திருக்குறள்

அதிகாரம் - அப்பா
_________________________

1. அனைத்திலும் உட னிருக்கும் முழு
முதற் கடவுள் அப்பா!

2. நாம் அப்பாடானு இருக்க ஓய்வு
எடுக்க காரணம் அப்பாடா!

3. அப்பாவின் வார்த்தைகளில் தான் நம்
வாழ்க்கை அழகாய் விரிகின்றது!

4. இரத்தத்தை உழைப்பாக்கி வியர்வையாக்கி பணமாக்கி
குடும்பம் காக்கும் கடவுள்!

5. உயிரின் சொல் ஊக்கத்தின் சொல்
உந்துதலின் சொல் அப்பா!

6. வீம்பாய் வெளியே கோபம் உள்ளே
ஆயிரமடங்கு அன்புடையவர் அப்பா!

7. சுமையில் பெரிய சுமை குடும்பச்சுமை
சுமப்பார் சுகம் காப்பார்!

8. தோள் தாங்கி தோள் கொடுத்து
புதிய உலகம் காட்டியவர்!

9. தொடுகை அரவணைப்பு  விழிமொழி புன்சிரிப்பு
புரியாத புதிர் அப்பா!

10. அன்னை தெய்வமென்றால்  தந்தை இவன் 
தெய்வம் வாழும் கருவறை!

காதல் (!?)

ஒரு அன்பு கணவனின் ஆசையான கடிதம்...

28 இல் என் வாழ்வில் நுழைந்தாய்...
68 இல் என்னை விட்டுப் பிரிந்தாய்...

40 வருட தாம்பத்யம்...
அதிக கொஞ்சல்கள், 
அதை விட கொஞ்சம் குறைவான சண்டைகள்...

அனுசரித்துப் போவதில் மன்னி நீ... என்னையும் தான் இருக்கச் சொன்னாய்...

நீ இருந்த வரையில் அப்படி நான் இல்லை...
பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய்...

நீ இல்லாத இப்போது 
அனுசரித்து மட்டும் தான்
போக வேண்டி இருக்கிறது. 

கிச்சன் இல் நடக்கும் யுத்தம்...
பாத்திரம் தேய்க்க பிக்பாஸ் போல ஷிப்ட்..

காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்
இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபி.

நம் ரூமில் நடு இரவில்  A/c ஆஃப் ஆகி விடுகிறது...

ஹால் இல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.  

அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே..
அதில் சுவையாய் மணமும் இருக்கும்
உன் மனமும் இருக்கும்...

இன்று எனக்கு கூகிள் சமையல் பிடிக்கவே இல்லை. 

ஒரே ஒரு நாள் எனக்காக இறங்கி வருவாயா நீ...
இதமாக உன் கை விரல்களை 
கோர்த்துக் கொண்டு காதலோடு சில மணி நேரம் காலாற நடக்க ஆசை...

எனக்குப் பிடித்ததில் நீ செய்யாமல் போனது ஓன்று தான்.
கண்தானம். 
என்னையும் தடுத்தாய்..

நீ சொன்ன காரணம் மண்ணுலகில் கண்தானம் செய்து விட்டால் விண்ணுலகிற்கு நீங்கள் வரும் போது எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் என்றுக் கூறினாயே..
உண்மை தான்...

முன்போல் இல்லை என் உடல்நிலை. எனக்கொரு இடம் முன்பதிவு செய்... சந்திப்போம் விரைவில்...

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்...
நமக்கே நமக்கான வாழ்க்கையை 
நமக்காக நாம் வாழ...

கதையின் நீதி :-

ஒரு ஆண்மகன் தன்னுடைய இளமைக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து அவனுடைய தாய்...
ஒரு ஆண்மகன் தன்னுடைய கடைசிக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து அந்த ஆண்மகனின் மனநிலை மற்றும் வருமானத்தைப் புரிந்துக் கொண்டு அழகாகவும், அன்பாகவும் குடும்பம் நடத்திய ஒரு நல்ல மனைவி மட்டும் தான்...

ஐ மிஸ் யூ அம்மா √

types of water stored and their names in tamizh

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !

01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.

05. இலஞ்சி - (Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. உறை கிணறு - (Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. ஊருணி - (Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் - (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.

18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. சுனை - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 வாய்ககால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

 பொறுமையாக படித்தமைக்கு நன்றி

இட்லி மாவு கதை

# இட்லி மாவு

1970s
ஏங்க! இந்த ஆட்டுக்கல்ல கொத்தி தர சொல்லேன் கல்லு ஒரே வழ வழன்னு இருக்கு. இட்லிக்கு மாவு அரைக்க ரொம்ப நேரம் ஆகுது.

1980s
ஏங்க! எதோ புதுசா கிரைண்டர் அப்படின்னு ஒன்னு வந்திருக்காமே 🤔 பக்க வீடு பங்கஜம் சொன்னா. கரண்ட்ல வேலை செய்யறதாம். சுவிட்ச் தட்டினா ஒடுமாம். குழவி ஒரே இடத்தில இருக்குமாம். ஆட்டுக்கல்லு சுத்துமாம். டெக்னாலஜி எப்படி வளந்துருத்து பாத்தீங்களா! எத்தனை நாள் தான் நானும் இந்த பழைய ஆட்டுக்கல்ல வச்சுண்டு மாரடிக்கறது. எனக்கு ஒரு கிரைண்டர் வாங்கித் தாரிங்களா⁉️

1990s
ஏங்க! கிரைண்டர் குழவி ரொம்ப வெயிட் ஜாஸ்தியா இருக்கு. குழவி தூக்கி தூக்கி எனக்கு மாரடைப்பு வந்துடும் போல இருக்கு. குழவி வெயிட் கம்மியா ஒரு கிரைண்டர் வாங்கித் தாரீங்களா!?

2000
ஏங்க! இந்த கிரைண்டர் கல்லு எடுத்து அலம்பறது ரொம்ப சிரமமா இருக்கு. எனக்கு ஒரு டேபிள் டாப் கிரைண்டர் வாங்கி தாரீங்களா!
மாவு அரைச்சதும் அப்படியே கிரைண்டர் ஐ கமுத்திக்கலாம். கிரைண்டர் அலம்பறதும் ரொம்ப ஈஸி.

2010
ஏங்க! ஆபீஸ் லருந்து வரும் போது ஒரு இட்லி மாவு பாக்கெட் வாங்கிண்டு வாங்க!
போன வாட்டி நீங்க வாங்கிட்டு வந்த இட்லி மாவு நல்லவே இல்ல. அப்பறம் இட்லி கலர் இல்ல, சப்பையா இருக்குன்னு என்னை குறை சொல்லப் கூடாது, சரியா!?

2020
ஏங்க! சிவிக்கில இல்லாட்டி ஜோமாட்டோல இட்லி ஆர்டர் பண்ணிடுங்க❗
மறக்காம கெட்டி சட்னியும் சேர்த்து.😊

2030.✍🏼🌹


🤔🤔