Friday, March 25, 2022

குலதெய்வம்

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.

2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது.

3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.

4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.

4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.

5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.

6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.

8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.

9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.

10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

.11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.

12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

13). குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

14). அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

15). எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

16). ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.

17). குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

18). குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.

19). இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.

20). குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

21). குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.

22). வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

23). தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

24). குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பது.

25). குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.

26). குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.

27). குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது.

28). குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

29). குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.

30). துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்.

31). நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.

32). குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் இருங்கள்.

33). ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.

34). குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. [ ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.

35). குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.

36). குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

37). குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே.

பழமொழி

🌝 தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம். 
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய். 
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ. 
🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.

வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட 
முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...

#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

நாளின் பெருமை

அப்படி இந்த 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????

1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.

2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 

3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??

4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும் 

5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு. 

6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.
நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது
அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ...

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"
ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
"வேதம் நான்கினும்" மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே"

நான்மறை...என்பது வேதங்கள் நான்கு.

சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.
அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்
ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை
தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.
பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம் 

பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் நான்கு பேர்.சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.

நான்கு வர்ணங்கள்..பிராமண, ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

திசைகள் நான்கு

ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம..உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள்.

வெல்ல முடியாத நாலு..
நித்ரா..ஸ்வப்ன..ஸ்த்ரீ..காம
அக்னி..இந்தன..கரா..பாண

கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது
பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது
தீயை விறகு நிறைவு செய்யாது
குடிகாரனை குடி நிறைவு செய்யாது

ந ஸ்வப்னேன ஜயேத் நித்ராம் ந காமேன ஜயேத்ஸ்திரியஹ
ந இந்தனேன ஜயேதக்னீம் ந பானேன கராம் ஜயேத்..விதுர நீதி

இதையே ஹிதோபதேசம்
அக்னியை விறகு அணைக்காது
சமுத்திரத்தை ஆறுகள் நிறைக்காது
யமனை எல்லா உயிர்களும் சேர்ந்தாலும் வெல்ல முடியாது
அழகிகளை ஆண்கள் த்ருப்தி செய்ய முடியாது.. என சொல்கிறது

யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்

சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்

நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.

நான்கு என்ற எண் சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்.. , 

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

" செத்தாலும், 
நல்லதுக்கும்,
கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்" 

என்ற கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.

நாலு பத்தி எழுதினத நமது நண்பர்கள் குழு 2.0 சார்பாக ஒரு நாலு பேராவது படிச்சா சரி...படிப்பீங்களா?😂

எதிர்பார்ப்பு

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.

இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி. அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு போனார். பாதுகாப்பு எல்லாம் கொடுக்க முடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" என கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன்கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை.

ஒரு பழமொழி உன்டு..' கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும் கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். 

ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்" என அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை..? நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும் வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. 

அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போன பின்னர் வருத்தப்படமாட்டோம்.

செவன் சாமுராய். அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.

ஒரு விவசாய கிராமம். அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிரார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். 

போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள்.

விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உணவை கட்டிக்கொன்டு வயலுக்கு சென்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் சென்று விடுகிறார்கள்.
தம் தேவை அவர்களுக்கு முடிந்தது என தெரிந்து கொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்.

இதுதான் உலகம். நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும் வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது.

அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போன பின்னர் வருத்தப்படமாட்டோம்.

வங்கி

வங்கிகளில் என்ன நடக்கிறது?

லத்தீன் மொழியிலிருந்து ஃபிரெஞ்ச் மொழி வரைக்கும் வங்கித் தொழிலுக்கு ஒரே அர்த்தம்- 

“கொடுக்கல் வாங்கல்” தான்.

Bank is a institute which 
deals with money.

Buying and giving money

Lending money

Buy low cell high 

வணிக பாஷையில் லேவா தேவி

பாமர மொழியில் ஃபைனான்ஸ் 
கம்பெனி. 

சென்னைவாசிகளுக்கு சேட்டு கடை.

லத்தீன் மொழியிலிருந்து ஃபிரெஞ்ச் மொழி வரைக்கும் கொட்டாம் பட்டியிலிருந்து  நியூயார்க் வரை வங்கித் தொழிலுக்கான சுருக்கமான ஒரே அர்த்தம்.

“கொடுக்கல் வாங்கல்” தான்.

வங்கிகள் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன்பு வரை பெரும் செல்வந்தர்கள் மட்டுமே புழங்கும் கெளரமான இடமாக கருதப்பட்ட  மரியாதைக்குரிய இடம்.

வங்கி முதலாளிகளின் உறவினர்கள் 
வேண்டியவர்கள் மட்டுமே பணிபுரிய முடிந்த இடம்.

பாமரர்களும் உள் நுழையலாம் என்று
திருமதி இந்திரா காந்தி அம்மையார் வங்கி வாசல்களைத் திறந்து விட்டு இப்போது கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

அரசாங்கத்தின் ஓட்டு வங்கி கடன் கொள்கைகள் புதிது புதிதாக வகுக்கப்பட்டது

முன்னொரு காலத்தில் சஞ்சய் காந்தியும் 
ஜனார்த்தன பூஜாரி என்றொரு மத்திய 
மந்திரியும் ரூம்  போட்டு புதுசு புதுசாய் யோசித்து வித விதமான பெயர்களில் ஐந்து அம்சத்திட்டம் இருபது அம்சத்திட்டம் என்று திட்டம் தீட்டி கடன்களை வங்கிகள் வாரி வழங்க வேண்டுமென்று 
உத்தரவு பிறப்பித்தார்கள்.

பின்னர் அவர்களும் கடன் வாங்கியவர்களும் அந்த கடன்களும் காணாமல்
போயின. அதனால் கவலைக்கிடமான 
நிலைக்குப்போனது சில பொதுத்துறை
வங்கிகள். 

அந்த விஷயம் கிடந்துட்டுப் போகுது கழுதை. நடப்புக்கு வருவோம்.

ரெண்டு வருடங்களுக்கு முந்தைய தேதி 
கணக்குப்படி இந்தியாவில்  --

26 பொதுத்துறை வங்கிகள்
25 தனியார் வங்கிகள்
43 வெளிநாட்டு வங்கிகள்
56 கிராமிய வங்கிகள்  
1,589 நகர கூட்டுறவு வங்கிகள்

93,550 வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் 
இயங்கின.

இதில் சில பல வங்கிகள் வேறு வங்கிகளோடு இணைக்கப் பட்டன இவற்றின் 148623  கிளைகளில் சுமார் 
1௦ லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தார்கள்

இவற்றோடு 84839  ஏடிஎம் மையங்களின் மூலம் நாடு முழுவதும் சுமார் 17 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுக் 
கொண்டிருந்த மாபெரும் வங்கி சாம்ராஜ்யம் இப்போது மான்யம் வாங்கும் நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆ...வங்கிக்கே மான்யமா ?

ஆம் வங்கிகள் மட்டுமல்ல  BSNL, LIC, Railway என்று பல துறைகள் மீண்டும் தனியாரிடம் விற்கப்படலாம்.

History repeats itself.

ஆம்.அதுதான் யதார்த்தம்.
CUSTOMER IS OUR BOSS என்று போர்டு போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்
களை தெய்வமாக கொண்டாடிய கால
மெல்லாம் போச்சு.

இன்று ,ரேஷன் கடையில் அரிசிக்கும் 
மண்ணெண்ணெய்க்கும் கியூவில் நிற்க வைத்தது போல் மக்களை வரிசையில் நிற்க வைத்து தர்மாஸ்பத்திரியில் 
நர்சுகள் ஊசி போடுவது போல செல்லாத நோட்டுகளை விசிறி எறியாத குறையாக வீசிக் கொண்டிருக்கிறார்கள் மதிப்பிற்குரிய வங்கியாளர்கள்

இந்த லட்சணத்தில் ரேஷன் கடைகளிலும் வங்கிப் பணிகளை துவக்கப் போகிறார்களாம். அதாவது பேங்க் கேஷியர் இனி அரிசியையும் அளந்து போடணும். மண்ணெண்ணெய் ஊற்றணும்.

1950 களில் ஆயிரங்களிலும், 1980 களில் லட்சங்களிலும், 1990 களில் கோடிகளிலும் வீட்டுக்குள்ளேயே ஒரு கணக்குப்பிள்ளையை மட்டும் வைத்துக்கொண்டு
பற்று-வரவு எழுதி தலை முறை தலை முறையாக வட்டித்தொழில் செய்து வரும் நாட்டுக்கோட்டை செட்டியாரின் ஒரு நாள் 
Turnover பல கோடிகளுக்கு மேலே இருக்கும்..

ஒரு வங்கிக் கிளை செய்கிற வேலையை 
ஒரு கணக்குப் பிள்ளையை மட்டும் வைத்துக்கொண்டு ரேஷன் கார்டு ஆதார் அட்டை கேரண்டி எதுவுமே இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கோடிக்கணக்கில் வரவு செலவு செய்து ஃபைனான்ஸ் நடத்திக்
கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இதே அளவு வரவு செலவு செய்ய இன்று ஒரு வங்கி கிளைக்கு ஒரு மேலாளர், ஒரு காசாளர், ஒரு குமாஸ்தா, ஒரு பியூண், ஒரு அப்ரைசர், ஒரு வாட்ச் மேன். ஒரு ஜெனரேட்டர், பல கம்ப்யூட்டர்கள், தேவைப்படுகிறது.

இதற்காக மாதம் தோராயமாக 2.5௦ 
லட்சம் செலவாகிறது. இத்தனை இருந்தும் ஊழியர்களுக்கு வேலை எளிதாக இல்லை. வாடிக்கையாளர்களுக்கும் சுலபத்தில் வேலை முடிவதில்லை.

மொத்தத்தில் வாடிக்கை யாளர்களும் 
திருப்தியாக இல்லை.
ஊழியர்களும் சந்தோஷமாக இல்லை.

முன்பெல்லாம் அரசின் பணப்பரிவர்த்தனை முழுவதும் அரசு கருவூலங்களின்
மூலம்தான் நடக்கும்.

பென்ஷன்தாரர்ளும் ஒப்பந்ததாரர்களும் 
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடும் 
அதிகாரிகளும் TREASURY யில்தான் பணம் பெற்றுச் செல்வார்கள்.

பத்திரப்பதிவுக்கு சப்-ரிஜிஸ்ட்ரர் ஆபீசுக்
குத்தான் போக வேண்டும்.

தாலுகா ஆபீசில் பத்திரம் பதிவு செய்ய முடியாது,

ஜாதி சான்றிதழை தாலுகா ஆபீசில்தான் பெற முடியும்,

சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் வாங்க முடியாது.

இதே போல முன்னொரு காலத்தில் பணம் போட எடுக்க மட்டுமே என்றிருந்த 
வங்கிகளின்  நிலைதான் இன்று பரிதாபகரமாக மாறிவிட்டது.

மகளிர் சுய உதவிக்குழுவா ஓடு பேங்குக்கு,

நூறு நாள் வேலைத்திட்டமா ஓடு பேங்குக்கு,

முதியோர் உதவித் தொகையா ஓடு பேங்குக்கு,

கேஸ் சிலிண்டர் மான்யமா ஓடு பேங்குக்கு...

டெபாஸிட்டுக்கு (Target) குறி வைத்து அதுக்கொரு KASA காம்பெய்ன், கடனுக்கு ஒரு (Target) குறி வைத்து லோன் மேளா, கடன் கொடுத்த பிறகு அதை வசூலிக்க RECOVERY CAMP, வசூலாகாத வாராக்கடன்களின் 
வட்டிகளை தள்ளுபடி செய்ய கன்ஸ்யூமர்
கோர்ட் காம்ப்ரமைஸிங் செட்டில்மென்ட்

அதற்கொரு நீதிமன்ற குழு அமைத்து வசூலாகாத வாராக்கடன்களை தள்ளுபடி செய்ய லோக் அதாலத்.

கொடுக்கல் வாங்கலைத் தவிர இப்படி, பயனாளிகள் சந்தையில் மாடு பிடிப்பதிலிருந்து வீட்டுக்கடன் வாங்கினவரின் 
கொத்தனார் கலவை போடுவது வரை 
ஊர்ப்பட்ட வேலைகளை வங்கிப் பணிகளின் ஊடே திணித்துவிட்டார்கள்.

கடன்காரர்களை துரத்திக்கொண்டு 
வங்கி மேலாளர்களும் ஊழியர்களும் 
தெருத்தெருவாக அலய வேண்டியதிருக்கிறது. இதற்கு மார்கெட்டிங் என்றொரு கவுரவமான பெயருமுண்டு.

கடன் கொடுத்த பிறகு அதை வசூலிக்க 
அவர்கள் அலையும் அலைச்சல் இருக்கே 
சீச்சீ...நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்று வங்கி வேலைக்கு விரும்பி வந்தவர்களெல்லாம் மிரண்டு தலை தெறிக்க ஓடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. 

அதாவது அட்சய பாத்திரத்தை கையில் 
கொடுத்து பிச்சை எடு என்கிறது.

CBS  எனும் (CORE BANKING SYSTEM) கம்ப்யூடர் சிஸ்டம் வந்த பிறகு வங்கிப் 
பணியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் 
உள்ள உறவு சீர்குலைந்துவிட்டது.

வங்கிப் பணியாளர்களின் கண்கள் கணினியின் திரையை விட்டு விலகி 
வாடிக்கையாளரைப் பார்ப்பதே இல்லை. பார்க்க நினைத்தால் கூட பார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு டென்ஷன். பிரஸ்ஸர் ஸ்ட்ரெஸ்.

வேலைப்பளுவின் காரணத்தால் நிமிர்ந்து பரஸ்பரம் முகம் பார்த்தால் தானே சிரிப்பதற்கு?

இது போதாதென்று இப்போது செல்லாத 
நோட்டு பிரச்சினை வேறு. குருவி தலையில் பனங்காயாய் அழுத்துகிறது. ஊழியர்கள் தூக்குக்கயிற்றுக்கு கீழே வேலை செய்வதுபோல் நிம்மதியின்றி பணிபுரிகிறார்கள்.

இன்றைக்கு யார் மூலமாக என்ன பிரச்சினை வருமோ?

எத்தனை பொதுமக்களின் எரிச்சலுக்கும் 
வசவுகளுக்கும் ஆளாகப்போகிறோமோ?

வாங்கி வைத்திருக்கும் பணத்தில் எத்தனை கள்ள நோட்டுகளோ?
எவ்வளவு கருப்புப்பணமோ?

எவ்வளவு பணம் shortage ஆகி கைக்காசை போட்டு கணக்கு முடிக்கப்
போகிறோமோ ?

எப்போது வீடு திரும்புவோமோ என்கிற 
பதட்டத்திலேயே வேலை செய்கிறார்கள்.

பல வங்கிக் கிளைகளிலிருந்தும் 
அதிகாரிகள் மேலாளர்கள் வீடு திரும்ப 
நள்ளிரவாகிவிடுகிறது.
கம்ப்யூட்டர் சுத்துகிற சுத்தல் போதாதென்று நெட் ஒர்க்குகளும் பணியாளர்களின் 
வாணாளை வாங்குகின்றன.

பி.எஸ்.என்.எல் தான் மோசமென்றார்கள்
இப்போது ஏர் டெல், ஜியோ எல்லாம் அதுக்கு அப்பனாக இருக்கு.

வாரம் மூணு நாள்கள் ஊழியர்கள் சும்மா தான் உகார்ந்திருக்கிறார்கள்.

Connectivity இல்லை. அப்படியெனில் ATM மும் வேலை செய்யாது.

ஆப்புகளும் வேலை செய்யாது ஆப்பசைத்த குரங்கு அல்லது புலி வாலைப் பிடித்தவனின் கதையாகி விட்டது மோடியோடு சேர்ந்த வங்கிப் பணியாளர்களின் கதை.

1980 களில் டாக்டர்கள் எஞ்ஜினியர்களுக்குக் கூட பொண்ணு தர யோசிப்வர்கள் பேங்கு மாப்பிள்ளை என்றால் கண்ணை மூடிக்கொண்டு பெண் தருவார்கள்.

ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாகிவிட்டது எனில் வங்கிப் பணியாளர்களின் நிலையை புரிந்து கொள்ளலாம்.

ரொக்கப்பணப் பரிவர்த்தனையிலிருந்து முற்றிலுமாக விலகி NEFT, RTGS மொபைல் பேங்கிங் கூகுள் பே, பே.டி.எம், நெட்பேங்க் இப்படி ஆன்லைனில் 
ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைக்கு அறைகூவல் விடுத்து மக்களை தயார் படுத்தும் மோடி -- பத்து லட்சம் வங்கி ஊழியர்களுக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறாரோ என்று இப்போதே நெஞ்சம் பதறுகிறது.

சந்தையில் மாடு பிடிப்பவர் இரவு நேர இட்லிக்கடை நடத்தும் கையேந்திபவன் 
கடைக்காரர் நடுக்காட்டுக்குள் 
நள்ளிரவில் புரோட்டா சால்னா விற்பவர் 
தின்னும் லாரி டிரைவர் கிளீனர்கள் இவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

ரொக்கமற்ற பரிவர்த்தனையில் 
பில்லுக்கு கார்டுகளை நீட்டினால் உதைதான் விழும் அல்லது மாவாட்ட  வேண்டியதிருக்கும்.

தொழில் நுட்பம் மட்டுமல்ல நாட்டை  முன்னேற்றப் பாதையில் கொண்டு  செல்ல மதி நுட்பமும் வேண்டும்....  

முகநூல் பகிர்வு

வைத்தியம்/மருத்துவம்

ஒரு நாட்டின் மந்திரி ஒரு சேவகனைக் கூப்பிட்டு, நாளை காலையில் நீ வீட்டிலிருந்து அரண்மனைக்கு வேலைக்கு வரும் போது, தலையில் வெள்ளைத் துணியால் ஒரு கட்டு போட்டுக் கொண்டு வா! வழியில் யாராவது என்ன கட்டு என்று கேட்டால், தலைவலி என்று மட்டும் சொல். பின் நடந்தவற்றை முழுவதையும் மன்னரிடம் வந்து சொல் என்றார்.

மறுநாள் சேவகனும் அதே போல் செய்தான். அரண்மனைக்குள் நுழைந்து மன்னனைச் சந்தித்து வணங்கி நின்றான். 

மன்னர் கேட்டார், தலையில் என்னப்பா கட்டு? மன்னா, தலைவலி என்றான் சேவகன். 

மன்னர் சொன்னார், கடுக்காயை அரைத்து அதில் கொஞ்சம் ஓமம் கலந்து நெற்றியில் தடவு சரியாகிடும். அது சரி இப்ப ஏன் இங்கு வந்தாய்?

மந்திரிதான் உங்களை வந்து பார்க்க சொன்னார். வந்தேன்.

ஏன் மந்திரி என்னைப் பார்க்கச் சொன்னார்? 

இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பியது முதல் என்ன நடந்தது என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று சொல்லி சேவகன் முழுமையாக விளக்கினான்,

காலையில் தலையில் கட்டு போட்டதும் என் மனைவி கேட்டாள் ஏன் கட்டுனு? தலைவலினு சொன்னேன். 
கேழ்வரகுப் பத்துப் போட்டுட்டுக் கிளம்புங்க என்றாள்.

வீட்டை விட்டு வெளியே வந்ததிலிருந்து அரண்மனைக்கு வரும் வரை நான் பார்த்த 86 பேரில் 72 பேர் தலையில் என்னவென்று கேட்டார்கள். தலைவலினு சொன்னேன். ஆளுக்கொரு வைத்தியம் சொன்னார்கள்.

அரண்மனைக்குள் நுழைந்த பின்னும் 16 பேர் கட்டினைப் பற்றி விசாரித்தார்கள் பதினாறு வைத்தியம் கிடைத்தது. நீங்களும் ஒரு மருந்து சொல்லியிருக்கீங்க.. இப்ப நான் எதைச் செய்யணும்?

மன்னருக்குக் குழப்பம். இதை ஏனப்பா என்னிடம் வந்து கேட்கிறாய்? என்று கேட்டார்.

 மந்திரி குறுக்கிட்டார். 
மன்னர் மன்னா, நேற்று காலையில், நீங்கள் ஒரு சந்தேகம் கேட்டீர்கள். அதை ஆதாரத்தோடு நிரூபிக்கச் சொன்னீர்கள். அதை உங்களிடம் நிரூபிக்கவே இதைச் செய்தேன் என்றார்.

மன்னர் கேட்ட சந்தேகம் இது தான்.              " நம்ம நாட்டில் அதிகமாகப் பார்க்கப்படும் தொழில் என்ன? "

மந்திரி சொன்ன பதில் "வைத்தியம்/மருத்துவம்".

இன்னிக்கு வரை நோயாளிகளின் பெரிய பிரச்சினை இது தான். எல்லாரும் எல்லா வியாதிக்கும் ஒரு வைத்தியம் சொல்லிப் படுத்துவது தான். நோயாளிகள் நோயை விட இவர்கள் சொல்லும் மருத்துவத்திற்கு தான் அதிகம் பயப்படுகிறார்கள்.

இந்தக் கூத்திற்கிடையே இப்ப கூகுளும் யூட்யூபும் வாட்சப்பும்  வேற நாட்டில் எல்லாரையும் டாக்டராக்கிடுச்சு.

பென்சில்

ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும் பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில் HB என எந்த இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்காது. 

கடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா? வேண்டாமா? என்று கத்திக் கொண்டே கேட்பார். 

நானும் வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார். எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து போய்விட்டது. 

முப்பது வருடம் கழித்து இப்போது எனது மகன் HB6 பென்சில் கேட்கிறான். அவனுடைய ஓவிய ஆசிரியர் இப்போது அவனை துரத்துகிறார். வாழ்க்கை வட்டம் என அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

இப்போது பென்சிலை தேடுவது என் மகனல்ல. நான். கடை கடையாய் அலைந்து பார்த்தேன். HB6 என்ற பென்சில் கிடைக்கவே இல்லை. 

நடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது. 

கடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின் அளவு கோல் என புரிந்து கொண்டேன். 

பென்சில் கிராபைட் மற்றும் களிமண் ஆகிய இரண்டையும் கலந்து செய்கிறார்கள். கிராபைட்டுடன் கலக்கும் களிமண் தான் பென்சிலின் blackness ஐ தீர்மானிக்கிறது. 

இந்த களிமண் சாம்பல் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை இருக்கிறது. அதிக blackness வேண்டுமானால் கருமையான களிமண்ணையும், குறைவான blackness வேண்டுமானால் சாம்பல் நிற களிமண்ணையும் கிராபைட்டுடன் கலக்கிறார்கள். 

இது போல சேர்க்கும் களிமண்ணின் விகிதம் குறைவாக இருந்தால் அது softness ஐ தரும். அதிகமாக இருந்தால் hardness ஐ தரும். 

H என்பது பென்சிலில் இருக்கும் hardness ஐ குறிக்கிறது. B என்பது அதன் blackness ஐ குறிக்கிறது. 

HB பென்சில் என்றால் கடினத்தன்மையும் கருமை அதிகமாகவும் இருக்கும். பொதுவாக எழுதுவதற்கு HB பென்சிலை பயன்படுத்துவார்கள். 

HH என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அதிக கடினத்தன்மையோடு இருக்கும். பொறியியல் வரைபடம் வரைபவர்கள் HH பென்சிலை பயன்படுத்துவார்கள்.

BBB என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அடர் கருமை நிறத்தில் எழுதும்.

1H6B பென்சில் அதிக கருமை எழுதுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.

6H1B பென்சில் கருமை குறைந்து சாம்பல் நிறத்திலும் அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.

H ன் மதிப்பு 1, 2, 3 என அதிகரித்துக் கொண்டே போகும். அது போல B ன் மதிப்பும் 1,2,3 என அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

ஒவியர்கள், பொறியியல் வரைவாளர்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் பென்சிலை தேர்ந்தெடுப்பர். கறுப்பு வெள்ளை படம் வரையும் போது விதவிதமான நிற பேதங்களை வேறுபடுத்திக் காட்ட விதவிதமான பென்சில்கள் தேவை.

இப்போது குழந்தைகள் நேரடியாக அலைப்பேசி அல்லது கணினியில் வரைய தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் பென்சிலால் வரையும் போது கிடைக்கும் finishing கணினியில் வரையும் போது ஏற்படுவதில்லை.

இனி பென்சில் வாங்கும் போது எதற்காக பென்சிலை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தேவையான பென்சிலை கேட்டு வாங்குவோம்.

Nursing Homes

In our close contact a lady (85) is thinking of leaving Mumbai and shifting to a senior citizens colony near Pune. 

Her husband passed away many years ago.  She is educated and married her three daughters, who are now US citizens. They have two kids each who are now in High School/College. 

The lady travelled to US on her own many a times. She lived there for six months or more on six occasions when her daughters delivered babies.

The other day when we called on her she became emotional and disclosed her plan to settle for assisted living in an old age home here, and that she had no intention to go back to US for some reasons.

We felt very sorry for her life in sun set years.

Please read the article below. We felt that our friend was feeling the same way as the author of the article. 

'Relocating to Nursing Home' (in Western Countries, Retirement Homes are called Nursing Homes):

This is an article on the internet that has caused many to reflect over their own lives. The author is a retired writer, and she expressed emotion when she was about to go to a nursing home.

I'm going to a nursing home. I have to. When life, gets to where you are no longer able to take care of yourself, completely, your children are busy, at work and have to take care of their children, and have no time to take care of you, this seems to be the only way out.

The nursing home is in good condition, with clean single rooms equipped with simple and practical electrical appliances. All kinds of entertainment facilities are complete, the food is fairly delicious, the service is also very good. The environment is also very beautiful, but the price is not cheap.

My pension is poorly able to support this. But I have my own house. If I sell it, then money is not a problem. I can spend it on retirement, and the rest will be left as an inheritance for my son. 

The son understands very well: "your money and your property should be enjoyed by you, don't worry about us." 

Now I have to consider preparing to go to a nursing home.

As the saying goes: Breaking a family is worth tens of thousands, which refers to many things. Boxes, bags, cabinets, and drawers are filled with all kinds of daily necessities: clothings for all weathers and beddings for all seasons.

I like to collect. I have collected a lot of stamps. I have also hundreds of purple clay tea pots. There are many small collections, and such small items as pendants of emerald and walnut amber, and two small yellow croakers. 

I am specially fond of books. The bookshelves on the wall are full.

There are also dozens of bottles of good foreign wine. There are full sets of household appliances; various cooking utensils, pots and pans, rice, oil, salt, noodles, floue,spices, various seasonings, in fact the kitchen is also full. 

There are also dozens and dozens of photo albums..., looking at the house full of things, I'm worried!

The nursing home has only one room with a cabinet, a table, a bed, a sofa, a refrigerator, a washing machine, a TV, an induction cooker and a microwave oven -- all the things I will really need. 

There is no place to store the wealth that I have accumulated throughout my life.

At this moment, I suddenly feel that my so-called wealth is superfluous, and it doesn't belong to me. I just take a look at it, play with it, use it. It actually belongs to this world. The wealth that come in turns are just passing by. 

Whose palace is the Forbidden City? The Emperor thought it belonged to him, but today it belongs to the people and society.

You look at these, you play with these, you use these but you can't take them with you in death.

I really want to donate the things in my house, but I can’t get it done. To deal with it has now become a problem. Very few children and grandchildren can appreciate what I have collected. I can imagine what it will be like when my children and grandchildren face with these painstakingly accumulated treasures of mine: all the clothes and bedding will be thrown away; dozens of precious photos will be destroyed; books will be sold as scrap. Collections? If you are not interested, you will dispose of them. The mahogany furniture is not practical and will be sold at a low price.

Just like the end of the Red Mansion: only a piece of white left, so clean.

Facing with the mountain of clothes, I only picked a few favourites; I only kept a set of pots and pans for kitchen supplies, a few books that are worth reading; a handful of teapots for tea. 

Bring along my ID card, senior citizen certificate, health insurance card, household register, and of course a bank card. Enough!

It's all my belongings! I'm gone. I bid farewell to my neighbours, I knelt down at the door and bowed three times and gave this home back to the world.

Yes! In life, you can only sleep in one bed, live in one room. Any more of it is merely for watching and playing!

Having lived a lifetime, people finally understand: we don’t really need much. Don’t be shackled by superfluous things to be happy!

It's ridiculous to compete for fame and fortune. Life is no more than a bed.

For people over 60 years old, shouldn’t we think carefully about how to take the last journey in life?

Let go of fantasies and baggage, and of those things that can't be eaten, worn, used.

Be healthy and be happy

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்து வரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம் தான் பொய்யானால், பாம்பை பாரு..

மருந்து தான் பொய்யானால் வாணம் பாரு..

சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..

சாமி தான் பொய்யானால் சாணம் பாரு..

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

இதற்கான விளக்கம்

மந்திரம் தான் பொய்யானால், பாம்பை பாரு

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்

மருந்து தான் பொய்யானால் வாணம் பாரு

வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பது தான் இதன் பொருள்.

சாஸ்திரம் தான் பொய்யானால் கிரகணம் பாரு

ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன் கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.

எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமி தான் பொய்யானால் சாணம் பாரு

 இது ரொம்ப சுவாரசியமான விஷயம்.  கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். 

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள்.  அதில் தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி,  அதை சாப்பிடும்.

விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின்  கருத்து.

அர்த்தமுள்ள சனாதன தர்மம்..

Sunday, November 28, 2021

time to learn caring

Amma, I am going to the Mall along with my wife and daughter." 

"OK Son.  You go ahead.  Already my legs are paining. I am not interested in coming to the Mall. You go ahead." 

"Grandma, you should also come" insisted the grand daughter... 

"Grandma cannot climb all those steps in the Mall.  
She does not know how to use the escalator.  
As there are no temples there, *Grandma would not be interested. She is interested only in going to temples"* said the daughter in law. 

Though Grandma agreed with this statement, Grand daughter was adamant.  
She refused to go to the Mall if Grandma was not accompanying them.  
Though Grandma repeated that she was not interested, she had to comply with her dear ten year old granddaughter's will.  
She agreed to accompany them. 

The granddaughter was very happy.  
Before her parents could get ready, the oldest and the youngest were ready.  

The youngster took her grandma to the front room.  
She drew two parallel lines, a foot apart.  She told her grandmother that it was a game and the old lady had to pretend that she was a Crane (Bird).
She had to keep one leg within the lines and raise the other leg by three inches.  
"What is this my dear?"  asked Grandma..."
"This is the Crane game Grandma.  I will show you how to play."                              Both of them played a few times and before the father could bring out the Car....Grandma became adept in the game. 

They reached the Mall and when they reached the escalator, the father and mother were wondering how the elderly lady would manage that.   
The granddaughter took her grandma near the escalator and asked her to play the Crane game.  Grandma raised her right foot and kept it one of the moving steps and raised her left leg by three inches and could easily reach the next moving step. 
This way she used the escalator easily to reach the higher level, much to the amazement of her son and daughter-in-law.  Then grandma and her grand daughter moved up and down several times on the escalator and had fun.  

They then went to the theatre to see a movie.  
As it was cold inside, granddaughter took out a shawl from her bag and covered the old lady, with a smile.  
She came prepared for this!  

After the movie, they went to the restaurant.  When the son asked his mother for the dish to be ordered, his daughter took away the menu and thrust it in the hands of Grandma.     

"You know how to read; go through the menu and order whatever you want".  Grandma decided about the dishes to be eaten. 

After the meal, Grandma and the grand daughter played some video games.  Before leaving for home, Grandma went to the toilet.  Using that occasion, the father asked his daughter how she knew so much about his mother which as a son, he was not aware. 

"Dad...., when a young child is taken out of the home, how many  preparations are made - milk bottles, diapers, wipes etc.!?....  Your  mother must have also done all these things for you.  Why not  show the same consideration for your mother? Why did you presume that she would be interested only in temples?   They also have normal desires,  enjoying with family, go out, have fun!  Since they may not openly express it, we have to compel them to enjoy these things" 

The father was speechless.  However he was happy that he had learnt a lesson from his ten year old daughter... 

*Reflection* 

A lot goes into making you who you are. We *assume* a lot of things about elderly parents which are not really true. 

It is called *generation gap* 
But it is a matter of *perspective* and *empathy* . 

Life is about giving back.
Do it graciously! 👍🙏

oxymoron

Eat whatever you want, because:

1. The inventor of the treadmill died at the age of 54

2. The inventor of gymnastics dies at the age of 57

3. World Bodybuilding Champion Dies At 41

4. World's best footballer Maradona dies at the age of 60

But but
5. KFC founder died at the age of 94

6. Nutella brand founder dies at age 88

7. Cigarette maker Winston dies at the age of 102

8. The discoverer of opium died in an earthquake at the age of 116

9. The founder of Hennessy's world-famous brandy brand dies at the age of 98

10. Eat more spices too because the gentleman with MDH spices lived for 97 years.

Then how did these doctors come to the conclusion that exercise prolongs life?

The rabbit always jumps up and down but he only survives 2 years and the turtle that doesn't exercise at all survives 400 yrs.

So, relax a little, be calm, be cool, eat, drink and enjoy your life to the fullest. 

Issued in public interest 🙏🏻😜😉🤣🤣😀🙏🏻

know about your culture

தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!

செட்டிநாட்டுப் பகுதிகளில் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சில கலை சொற்கள்

சத்த :~
சற்று என்பது மருவி சத்த என்றானது .

பைய :~
 பொறுமை, மெதுவாக.

எங்குட்டு :~
எந்தப் பக்கம்.

எம்புட்டு :~
எவ்வளவு.

இம்புட்டோண்டு :~
சிறிதாக.

எம்புட்டு :~
என்னுடையது.

மகிர உள்ளது :~
நிரம்ப உள்ளது .

வெள்ளந :~
இருட்டு அகன்று 'வெள்ளி்' முளைக்கையிலே அதாவது வானில் வெள்ளி காலையில் குறிப்பிட்ட நேரமே தோன்றும் அது தோன்றும் பொழுது என்பது பொருள்

குறிச்சி :~
சாய்வு நாற்காலி.

கொட்டகை :~
மங்கல நிகழ்வுகளில் கொட்டகை என்றும் அதையே துயர துக்க நிகழ்வுகளில் பந்தல் என்றும் சொல்லும் வழக்கம்

மாடு கட்டுமிடத்தை
தொழுவம்
கட்டுத்தரை

வட்டி :~
உணவு உண்ணும் கும்பா
(வட்டில் என்பது பண்டையத் தமிழ் வழக்கு,)
அதாவது அசலில் கை வைக்காமல் அதன் வருமானத்தில் சாப்பிடுதல்

சிலாத்தி :~
சல்லடை.

சிட்டை
குறிப்பு

சுளகு சொளகு
முறம்.

மரவை
மரத்தால் ஆன தாம்பாளம்

போகினி / லோட்டா /
குவளை தோட்டா என்பது பர்மிய சொல்

குந்தாணி
 உரல்.

திருகை
அரிசி உடைக்கப் பயன்படுத்தப் படும் ஒருவகை கல் உரல்

ஏவம் கேட்டல் :~
பரிந்து பேசுதல்.

கொண்டி :~
போக்கிரி.
(கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம் பெறுகிறது)

தாக்கல் :~
தகவல் தாக்கீது

ஒள்ளத்தி உள்ளத்தி
மிகச்சிறிய அளவு.
(எள் அத்தனை. எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்)

தொக்கடி தொக்கு + அடி
மிகக் குறைந்த விலை.

மருக்கோளி :~
பைத்தியம்.

வறளி :~
பிடிவாதக்காரர்.

மூதலித்தல் :~
மெய்ப்பித்தல்.

பட்டியல்
விலைச்சீட்டு

பெட்டகம் :~
இரும்பால் ஆன அலமாரி.

பெட்டக சாலை
பெட்டிக்குள் வைக்கும் இடம்

கேணி :~
கிணறு.

கிண்ணி :~
சிறு தட்டு.

பலகாரம்:~
பலாரம் ( காலைப் பலகாரம் , இராத்திரிப் பலகாரம் ) - டிபன்.

துடுப்பு :~
மரத்தால் ஆன ஒருவகைக் கரண்டி.

கொட்டான் :~
பனை ஓலையில் பின்னப்பட்ட ஒருவகைக் கூடை.

சத்தகம் :~
தேங்காய் கீறுவதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு வகை கத்தி போன்ற கரண்டி

வக்கூடை.
மூங்கிலால் பின்னிய கூடை

சுவத்தலமாரி :~
வீடுகளில் சுவற்றோடு பதிக்க பட்டிருக்கும் அலமாரி.

சீசா :~
கண்ணாடிக் குடுவை.

ரொட்டிக்கட்டு :~
பிஸ்கட் பாக்கெட்.

தாளிக்கிற பெட்டி :~
அஞ்சரை பெட்டி / அஞ்சு அறைப் பெட்டி.

இரவைக்கு :~
இரவு

கடிசு - கடிது :~
கடினம்.

சவுக்காரம் :~
சோப்பு.

கடைக்கால் :~
அஸ்திவாரம்.

தொலைவு :~
தூரம்.

பட்டியக்கல் :~
கருங்கல்லால் ஆன தரை

தொரட்டி :~
உயர்த்தில் உள்ள மரக்கிளைகளை வளைத்து ஒடிக்கப் பயன்படும் கருவி / துரட்டி.

அம்புட்டு :~
அவ்வளவு.

பூராத்தையும் :~
அனைத்தையும்.

சீவிக்கிரபொட்டி :~
கண்ணாடி சீப்பு வைத்து கொள்ளும் பெட்டி.

ஊரணி :~
குளம்.

புரவி :~
குதிரை.

அங்கிட்டு :~
அந்தப் பக்கம்.

இங்கிட்டு :~
இந்தப் பக்கம்.

பொட்டல் :~
மைதானம்.

விளக்கு வைக்கணும் :~
விளக்கு ஏற்றனும்.

ஏத்தனும்
ஏற்றனும்

ராக்கை :~
அடுக்கம் / Rack.

படைக்கிற அறை :~
சாமி அறை.

உக்குராண அறை :~
சேமிப்பு அறை - சமையல் சாமான்கள் அறை

முகப்பு (மோப்பு ) :~
வீட்டின் முன்பகுதி.

வளவு - வளைவு :~
செவ்வகமான மத்தியப் பகுதி.

 திறந்த வெளியாகவும் இரு பக்கங்களிலும் அறைகள் கொண்டதாக அமைத்திருக்கும்.

வாரம் :~
தாழ்வாரம்.

பேழை :~
 ஓலையால் செய்த பெட்டி.

தடுக்கு :~
ஓலையில் செய்த சிறு பாய்.

அவுக :~
அவர்கள்.

இவுக :~
 இவர்கள்.

வந்தாக :~
வந்தார்கள்.

போனாக :~
போனார்கள்.

வருவாக :~
வருவார்கள்.

மேலைக்கு
பிற்பாடு
அதாவது யாராவது உதவி கேட்டு வந்தால் தரமாட்டேன் என்று சொல்லாமல் மேலைக்கு பார்போம் என்பர்

born in late 70 and before 80

1980 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1980 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1980கலில் முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் உடல் சூட்டுக்கு அடுப்பின் பக்கத்தில் போயி நிற்ப்போம் அம்மா விரட்டும் வரை. ...

காலையில் கரி கொட்டையில் சுத்தமாக பல் விழக்குவோம்.....

♥மாலையில் குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு செம்மன் சாலையில் நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே.. ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட மலாய் ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

மாலையில் கள்ளுக்கடையில் கள் குடித்து விட்டு அமதியாய் கொஞசம் ஆடிக்கொண்டும் வருவார்கள் பெரியவர்கள் ....

♥உதிரியாக வாங்கிய ஒரு சாமந்தி பூவை தலையின் பக்கவாட்டில் வைத்து படம் பிடித்த பெண்கள் அதிகம்.....

♥சனிக்கிழமையன்று குறைந்தபட்சம் தீவி 2 தமிழ் படம் பக்கத்து வீட்டுக்கு சென்று ஒன்றாக அமர்ந்து பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ ஞாயிற்று கிழமை ஒரு வீட்டில் ஓடும் வீடேயொ கூட்டமா அமற்ந்து பார்த்து இருக்கிறோம்…

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவில் திடலில் திரைப்படம் பார்த்தோம்...

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி கிருஸ்மஸ் , ஹரிராயா பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை பள்ளிக்கூடத்தில் கூட வாங்கி எழுதி நன்பர்களுக்கு 
 தெரியாமல் பேக்கில் வைத்தோம்

♥SRP பாஸ் ஆகினால் தான் SPM படிக்க முடியும் 

♥நம் அக்காவும் தங்கையும் ரெட்டை சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பிள்ளைகள் BMX சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥கரண்ட் இல்லாமல் மண்ணெண்ணை விளக்கில் தான் படித்தோம்.....

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்

♥10ல் 7 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் மற்றும் ஆற்றில் குளிக்கும் துணி துவைக்கும் பழக்கம் இருந்தது…

பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது .

♥ மரத்தால் ஆன மேஜையில் தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

FMB in relation to the construction of buildings

FMB விளக்கம்.
*****************
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
**********************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

 . 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர் 

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை 

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம் - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட் 

100 சென்ட் - 1 ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர் 

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள் 

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி

Thursday, November 11, 2021

கோப்பு களால் ஒரு கொலை

*கோப்புகளால் ஒரு கொலை*
-----------------------------------------------------

அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. முப்பத்தைந்து  ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான வேதாச்சலம்  வகுப்பெடுத்துக்   கொண்டிருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வழக்கை மாதிரியாகக்  கொண்டு வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. வழக்கின்  சிக்கல் இது தான்.

        ஒருவர் ஓய்வுபெற்ற பின் முழு ஓய்வூதியதையும் பெறவேண்டுமானால் குறைந்த பட்சம் முப்பது ஆண்டுகளாவது பணியாற்றி இருக்க வேண்டும். அதற்கு கீழே பணியாற்றி இருந்தால் அதற்குத் தகுந்தபடி ஓய்வூதியம் குறைக்கப் படும். ஆனால் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பணியாற்றி இருக்கவேண்டும். இல்லை என்றால் ஒரு ரூபாய் கூட வாங்க இயலாது.

             ஒருவர் பத்தரை ஆண்டுகள் பணியாற்றி விட்டு ஓய்வுபெறுகிறார். அதன்பின் அவரது பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கவேண்டும்.

     அந்தக்  கோப்பைக் கையாண்ட கிளார்க் கோபாலன் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்.   கொடுத்த வேலையை கருமமே கண்ணாகக்  கொண்டுசெய்து முடிப்பவர். ஓய்வுபெற்றவரின் பணிப் பதிவேட்டை  எடுத்து ஆராயும்  போது ஓய்வுபெற்றவர் பல முறை தனக்கு அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிக நாட்கள் விடுமுறை எடுத்திருந்தது தெரிய வருகிறது.  பொறுமையாக அதனைக் கணக்கிடத்  தொடங்குகிறார். ஓய்வுபெற்றவர் ஒன்பது ஆண்டுகளும் பத்து மாதங்களும் மட்டுமே பணியாற்றி இருக்கிறார். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பத்து ஆண்டுகள் வரவிலை. உடனே தனது பிரிவின் கண்காணிப்பாளரிடம் எடுத்துச்சென்று கலந்துரையாடுகிறார். அவரும் ஒருமுறை கணக்கிட்டுப் பார்க்கிறார். ஒன்பது ஆண்டுகள் பத்து மாதங்கள் மட்டுமே வருகிறது. எனவே கோப்பை உரிய உயரதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுகின்றனர். கருவூலத் துறைக்கெல்லாம் சென்று வந்த பின் ஓய்வூதியம் வழங்க இயலாது என்று ஆணையிடப் படுகிறது.

    ஓய்வுபெற்றவர் அந்த ஆணையைப் பெற்றவுடன் அதிர்ச்சியடைகிறார். இதன் சிக்கல்கள் புரியாத அவரது நண்பர்களில் சிலர் அவரிடம் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள் என்று  ஆலோசனை  கூறுகின்றனர்.நேராகப்  போய் ஒரு வழக்கறிஞரைப் பார்க்கிறார். "ஆகா! ஒருகேஸ் கிடைச்சிருச்சே " என நினைத்த வழக்கறிஞர்  "கவலையே படாதீங்க சார். ஒரு தடவை கேஸை நடத்தி ஜெயிச்சிட்டோம்னா நீங்க சாகுற வரைக்கும் பென்சன் வாங்கலாம்" என்று உற்சாகப்படுத்தி விட்டு வழக்குப்  போட வைக்கிறார். சம்பந்தப்பட்ட துறையின் ஆணையாளரை முதல் பிரதிவாதியாகவும், இணை ஆணையரை இரண்டாம் பிரதிவாதியாகவும், உதவி ஆணையரை மூன்றாம் பிரதிவாதியாகவும், பிரிவின் கண்காணிப்பாளரை நான்காம் பிரதிவாதியாகவும் வைத்து வழக்குத் தொடரப் படுகிறது. வழக்கு சில நாட்களில் நீதிபதியின் முன் விசாரணைக்கு வருகிறது. அதனைப் படித்துப் பார்த்த நீதிபதி எடுத்தவுடன் எல்லாவறுக்கும் நேரடியாக வழக்குப் போடத் தேவையில்லை. முதலில் நிர்வாக ரீதியாக சரிசெய்ய முயலுமா? என்று பாருங்கள் என்று கூறி விட்டு  இன்னும் எட்டு வாரங்களுக்குள் வாதியின் பணிப்பதிவேடுகளை ஆய்வு செய்து நீதிமன்றத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

       நீதிமன்ற உத்தரவு ஆணையாளர்,  இணை ஆணையாளர் என ஒவ்வொரு பிரதிவாதியின் கைகளுக்கு வருகிறது. வழக்கம் போல் ஒவ்வொருவரும் மிக அவசரம் என்று குறிப்பிட்டு கண்காணிப்பாளருக்கு அனுப்புகின்றனர். இறுதியாக நீதிமன்ற உத்தரவு  கிளார்க் கோபாலன்  கரங்களுக்கு வந்து சேர்கிறது.

      அவர் உடனே பரபரப்பாக வாதியின் பணிப் பதிவேடுகளை எடுத்து ஆராய்கிறார். எத்தனை முறை திரும்பத் திரும்பப் பார்த்தும்  முதலில் செய்த கணக்கீட்டில் எவ்விதத் தவறும் இல்லை. ஏற்கனவே எடுக்கப் பட்ட முடிவு சரியானது என்றே காட்டியது. பணிப்பதிவேடு மற்றும்   கோப்புகளுன் சென்று கண்காணிப்பாளரிடம் செல்கிறார். இருவரும் சேர்ந்து மீண்டும் ஆராய்ந்து பார்க்கின்றனர். சரியாகவே இருந்தது. கோப்பில் தெளிவாக விவரங்களைப் பதிவுசெய்து உதவி ஆணையாளருக்கு சமர்ப்பிக்கின்றனர். அவர் எதற்கும் ஒரு முறை கருவூலத் துறையின் கருத்தையும் பெற்றுக்  கொள்ளுங்கள் என்கிறார். ஓரிரு நாட்களில் முறைப்படி கருவூலத் துறையின் கருத்துரைக்காக அனுப்பப் படுகிறது. அங்கும் அந்தக் கோப்பு ஆராயப்பட்டு சில நாட்களில் பழைய முடிவு சரியானதே என்ற கருத்துடன் பதில் வருகிறது.

       நீதிமன்றத்திற்குப் பதில் அளிக்கக் கூடிய வகையில் விரிவான அறிக்கையை கிளார்க்கும் கண்காணிப்பாளரும் இணைந்து தயார் செய்கின்றனர். உதவி ஆணையரின் ஒப்புதல் பெற்ற பின் அவ்வறிக்கை இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பப் படுகிறது. அவரது  மேஜையில்  குவிந்து கிடந்த  கோப்புகளில் ஒன்றாக இந்தக் கோப்பும் சென்று சேர்கிறது.

        ஊழோ.விதியோ, யாருடைய கெட்ட நேரமோ  தெரிய வில்லை. அன்று மாலை மேசையின் விளிம்பில் இருந்த  அந்தக்  கோப்பு சரிந்து விழுகிறது. அறையைப் பூட்ட வந்த அலுவலக உதவியாளர் கீழே கிடந்த  கோப்பை எடுத்து அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த பயன்படுத்தாமல் வைக்கப் பட்டிருந்த ஒரு சில பழைய கோப்புகளின் மேல் அடுக்கி வைத்து விட்டுச் சென்று விடுகிறார். மேசையின் மேல் பல்வேறு  கோப்புகள் வருவதும் ஒப்புதல் பெற்றுச்  செல்வதுமாக இருந்தன.

       அடுத்தடுத்த நாட்களில் இணை ஆணையாளரும் பல்வேறு அவசரப் பணிகளில் மூழ்கி விடுகிறார். சில நாட்கள் காத்திருந்து பார்த்த கோபாலன் இணை ஆணையாளர் அலுவலகத்தைத்   தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணை ஆணையரின் நேர்முக உதவியாளரிடம்  நினைவு படுத்துகிறார். சில நாட்கள் காத்திருந்து பார்த்து விட்டு நேராகவே இணை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று, இணை ஆணையாளரின் நேர்முக உதவியாளரிடம் கூறி நினைவுபடுத்துகிறார். “சார் கையெழுத்துப் போட்டதுதும் உங்களுக்கு உடனே கூறுகிறேன்” என்று கூறுகின்றனர். ஆனாலும் கையெழுத்தாகி வந்து சேரவில்லை. மேலும்,சில நாட்கள் காத்திருந்து பார்த்து விட்டு நேராகவே இணை ஆணையாளர் அலுவலகத்திற்குச் செல்கிறார். இணை ஆணையரின் அலுவலகத்தில் நினைவு படுத்துகிறார். அதன்பின் அங்கு கோப்பினைத் தேடித் தேடிப் பார்க்கின்றனர். அந்த அலுவலகத்தின் பெரும்பாலான மேசைகளில், பீரோக்களில் தேடியும் அது கிடைக்கவில்லை. பின்னர் ஒரு நாள் எதேச்சையாக தேவையற்ற பழைய கோப்புகளை அழிக்க முனையும்போது அந்தக் கோப்பு கண்களில் தட்டுப் படுகிறது.

ஆனால் அதற்குள் காலம் கடந்து விடுகிறது. வழக்குத் தொடர்ந்தவர் இதையெல்லாம் அறியாததால் நீதிமன்றம் விதித்த எட்டு வாரக் காலக்கெடு முடிகின்ற நேரத்தில்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் “நீதிமன்ற அவமதிப்பு" செய்து விட்டதாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.

நீதிமன்றம் உடனடியாகத் தீர்ப்பளிக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக ஓய்வூதியத்தை வழங்குமாறும், நீதிமன்ற அவமதிப்பிற்குக் காரணமான அரசாங்க அலுவலர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையிடுகிறது.

துறையின் தலைமை இடத்தில் இருந்த ஆணையாளர் கடும் கோபமடைகிறார். உடனடியாக இணை ஆணையாளரை அழைத்து "கோர்ட் கேஸக் கூட டிலே பண்ணுவீங்களா?. உடனே டிலே பண்ணுனவங்களுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் இஸ்யு பண்ணி கோர்ட்ல சப்மிட் பண்ணுங்க" என்று கட்டளையிடுகிறார்.

ஆணையாளருக்கு முன்பு எதுவுமே பேசாமல் இருந்த இணை ஆணையாளர் தனது அலுவலகத்திற்கு வந்தவுடன் உடனடியாக ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். சம்பந்தப் பட்ட கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கருவூல அதிகாரி அனைவரும் அழைக்கப்படுகின்றனர். கருவூல அதிகாரி உடனடியாகப் பதில் கூறி விடுகிறார். "சார்! எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்த கேஸ் சம்பந்தமா ஆலோசனை மட்டும் கேட்டாங்க. அதை நாங்க மூணு நாளிலே கொடுத்துட்டோம்"

  உதவி ஆணையாளரும்  கண்காணிப்பாளரும் தாங்களும் இரண்டு வாரங்களுக்குள் வேலையை  முடித்து அனுப்பி விட்டதாகக் கூறுகின்றனர். தான் தப்பித்தால் போதும் என்ற பயம் ஒவ்வொருவருடைய முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

இணை ஆணையாளர் கோபமாகப் பேச ஆரம்பித்தார். "பைலை அனுப்புனா போதும் உங்க வேலை முடிஞ்சிருச்சு அவ்வளவு தானே? எனக்கு தினமும் நூற்றுக்கணக்கான பைல்  வருது. ஒவ்வொண்ணையும் எது எவ்வளவு அவசரம்னு பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? நீங்க ஃபாலோபண்ணியிருக்கணுமா? இல்லையா? "

கண்காணிப்பாளர் "சார்! எங்க  கிளார்க் வந்து பார்த்துட்டு தான் இருந்தார்".

 இணை ஆணையாளர் மீண்டும்  கோபமாகப் பேசினார்." இவ்வளவு முக்கியமான விஷயத்திற்கு கிளார்க் ஃபாலோ  பண்ணுனா போதுமா? நீங்க  எதுக்கு சூப்பரிண்டெண்ட், அசிஸ்டண்ட் கமிஷனர்னு இருக்கீங்க? "

கண்காணிப்பாளர் தலைகுனிந்து கொண்டே கூறினார்.  " சார்! தப்பு தான் சார். ஆனா அடுத்த மாசம் எனக்கு ரிட்டையர்மெண்ட் சார். இப்போ என்மேல ஏதாவது ஆக்சன் எடுத்தா என்னால  ரிட்டையர்மெண்ட் ஆக முடியாது சார். ரிட்டையர்மெண்ட் பெனிபிட், பென்சன் எதுவுமே  இல்லாம நடுத்தெருவுக்கு வந்துடுவேன் சார்" என்றார்.

இணை ஆணையருக்கும் அப்போது தான் தனக்கு விரைவில் வர இருக்கும் பதவி உயர்வு பற்றி நினைவு வந்தது. அமைதியாக உதவி ஆணையரைப் பார்த்துக்  கூறினார். " பியூன் பைலை மூலையில போட்டுட்டார்னு கோர்ட்ல சொன்னா ஜட்ஜ் கேவலமாத் திட்டுவாரே " என்றார்.    

மறுநாள் அவர் அந்தக் கோப்பை கையாண்ட கிளார்க் கோபாலனை  அழைத்தார் .நிதானமாகப் பேசத் துவங்கினார்."இதோ பாருங்க எல்லோர் மேலயும் தப்பிருக்கு. நான் உள்பட. அசிஸ்டன்ட் கமிஷனர் மேல எல்லாம் ஆக்ஷன் எடுத்தா, கமிஷனர் லெவல்ல, தலைமைச் செயலக லெவல்ல தான் சரி செய்ய முடியும். இப்போதைக்கு உங்களுக்கு மட்டும் சஸ்பென்சன் ஆர்டர் தற்காலிகமா தர்றேன். அதைக் கோர்ட்ல ஃபைல்பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனவுடன் உங்க மேல எந்த பாதிப்பும் வராதபடி துறை ரீதியான நடவடிக்கையில் நீங்க குற்றமற்றவர்னு நானே ஆர்டர் போட்டுத் தர்றேன், கவலைப்படாம தைரியமா போங்க " என்கிறார் .   

அதனை கோபாலனால் மனதளவில்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருடைய அறிவுக்கு எட்டியவரை வேறு சிறந்தவழிகள் எதையும் கூற இயலவில்லை. உயரதிகாரிக்கு முன்னால் எதுவும் எதிர்த்துப் பேசவும்  இயலவில்லை. கனத்த இதயத்துடன் "சரிங்க சார் " என்று கூறி விட்டு வெளியேறுகிறார்.

கோபாலன் கலங்கிய கண்களுடன் தனது அலுவலகத்திற்குச் சென்றார். அவரைப் பார்த்தவுடன் கண்காணிப்பாளர் பரபரப்பாக அவரிடம் ஓடி வந்து  என்ன நடந்தது என்று கேட்கிறார். கண்களில் கண்ணீரோடு கையறு நிலையில் தட்டுத் தடுமாறி கோபாலன் நடந்ததைக் கூற ஆரம்பித்தார். சொல்ல  ஆரம்பித்ததிலிருந்து கண்காணிப்பாளர் படபடக்கும் இதயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். சொல்லி முடித்தவுடன் கோபாலன் அவருக்குள் எழுந்த கோபத்தையும், ஆற்றாமையையும் கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்து கொண்டார்.   கண்காணிப்பாளருக்கு  உள்ளூர ஒரு நிம்மதி. இருந்தாலும் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு ஆறுதல் கூறுகிறார். உண்மையிலேயே கோபாலன் மேல் பரிதாபமும் கொண்டார்.  "கவலைப் படாதப்பா!, நாங்க எல்லாம் இருக்கிறோம்ல , அவ்வளவு  சீக்கிரம் உன்னைக் கை  விட்டுடுவோமா என்ன?  தைரியமா இரு, கொஞ்ச நாள் தான்" என்று ஆறுதல் கூறுகிறார்.     

அந்த ஆறுதல் வார்த்தைகளையெல்லாம் கோபாலனுக்குள் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவை வெறுமனே ஆறுதலுக்காகச் சொல்லப்படுகின்ற வார்த்தைகள் மட்டுமே என்று கோபாலனுக்குத் தோன்றியது. நிமிர்ந்து கண்காணிப்பாளரின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்தார். எதுவும் பேசவில்லை.

சில நிமிடங்களில் நடந்தவை எல்லாம் அந்த அலுவலகம் முழுவது பரவியது. சிலர் நம்பிக்கையுடன் பேசினர். சிலர் ஆறுதலாகப் பேசினர். சிலர் கோபத்துடன் யார் யாரையோ திட்டினர். ஆனால் இவை எதையுமே கேட்கும் மனநிலையில் கோபாலன் இல்லை. யார் முகத்தையும் பார்க்கவும் விரும்பவில்லை. அமைதியாக வீட்டிற்குக்  கிளம்பிச் சென்றார்.       

ஓரிரு நாட்களில்  பணியிடை நீக்க ஆணை வருகிறது. துறை ரீதியான விசாரணை  துவங்கப் படுகிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்காகக்  காலதாமதமாகிறது.    

 ஆனால் கோபாலன் நடந்த எதையுமே தனது வீட்டில் சொல்லவில்லை. அது தனக்கு அவமானம்  என்று நினைத்திருக்கலாம்.  தனது வீட்டிலிருப்பவர்களுக்கு வேதனையைத் தரும் என்று நினைத்திருக்கலாம். குழந்தைகளின் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்திருக்கலாம். எதுவாயிருந்தால் என்ன? அவரின் ஒற்றை இதயம் மட்டும் அத்தனை அழுத்தங்களையும் சுமந்து கொண்டு துடித்துக் கொண்டிருந்தது.

தினமும் வழக்கம் போலவே அலுவலகம் செல்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பி சென்றார். ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த  ஒரு பூங்காவிற்குச் சென்று அமர்ந்து கொண்டார். மாநகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலத்திலும் பூங்காவிற்குள் பல மனிதர்கள் வேறொரு உலகத்தில் இருந்தனர்.  வேலை வெட்டிக்குப் போகாமல் அங்கிருந்த நீண்ட இருக்கைகளில் படுத்துக் கொண்டு சிலர் இருந்தனர். ஏகாந்த நிலையில்  எதற்கும் கவலைப்படாத முகங்களைக் கொண்டிருந்தனர்.  விற்பனைப் பிரதிநிதிகள் சிலர் வெய்யில் நேரம் என்பதால் அங்கு மர   நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். விற்பனை இலக்குகளை எப்படி அடைவது என்ற உரையாடல் அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.  சில இளைஞர்கள் அங்கு போட்டித் தேர்வுகளுக்காக சேர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். கனவுகளைத் துரத்திக் கொண்டு  ஓடிக்கொண்டிருந்ததை அவர்களின் முகங்கள்  பிரதிபலித்தன. சில பெண்மணிகள் தங்களது கணவன்மார்களை அலுவலகத்திற்கும், பிள்ளைகளைப்  பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டுப்  பொறுமையாக அங்கு வந்து நடைபயணம் செய்து கொண்டிருந்தனர். தங்களுக்குள் தோழிகளைப்  போலப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.  

அங்கிருந்த அனைவருக்கும் அந்தப் பூங்கா ஏதோ ஒருவகையில் ஆறுதலைத் தந்து கொண்டிருந்தது. கோபாலன் ஒருவரைத் தவிர. பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்ற மரங்கள், செடிகொடிகள், வண்ணத்துப் பூச்சிகள், சின்னஞ்சிறிய உயிரினங்கள், பறவைகள், மனிதர்கள் எனப் பல்வேறு ஜீவராசிகள் சூழ்ந்திருந்த இடத்தில் அவர் அவருடைய உலகில் யாருமற்ற தனிமையில் இருந்தார். சாலையில் செல்பவர்களில் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்து தன்னைப் பார்த்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணிப் பயந்த அவர் பூங்காவின் ஒரு மூலையில் புதர் போல இருந்த ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.      

வீட்டில் அவரது முகத்தில் இருந்த கவலையைப் பார்த்த அவரது மனைவி என்னவென்று கேட்க அலுவலகத்தில் வேலைப்பளு, சீனியாரிட்டி பிரச்சினை என்று ஏதேதோ பொய்களாகச் சொல்லி சமாளிக்கிறார். "ஆபீஸ் பிரச்சினையை ஆபீஸ்லயே விட்டுடுங்க, வீட்டுக்கு கொண்டு வராதீங்க" என்று அவரது மனைவி அறிவுரை கூறி விட்டு முடித்துக் கொள்கிறார்.   

நாட்கள் மெதுவாகச் செல்லுகின்றன. அவரது அன்றாட வாழ்க்கை பூங்காவிலேயே தனிமையில் கழிகிறது. சம்பள பிரச்சினைகளும் வருகின்றன பணியிடை நீக்கத்தால் அவருக்குப் பாதி சம்பளம் மட்டுமே கிடைத்தது. மீதியைக் கடன் வாங்கி சமாளிக்கிறார்.    

அவர் நான்கு நாட்களுக்கு ஒருமுறை விடாமல் நீதிமன்றத்திற்குச் சென்று வருகிறார்.வழக்கு முடிந்து விட்டால் அதன் பின் துறைரீதியான விசாரணையில் குற்றமற்றவர் என்று வெளிவந்து விடலாம். ஆனால் ஆயிரக்கணக்கான  வழக்குகள் நிலுவையில் இருந்த அந்த நீதிமன்றத்தில் பெரிய பெரிய வழக்குகளும், அவசர வழக்குகளுமே அன்றாட விசாரணைக்கு வந்து கொண்டிருந்தன. அந்த வழக்கு மட்டும்  வரவேயில்லை.

ஒரு வழியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு வந்து வழக்கு முற்றுப்பெறுகிறது. வழக்குத் தொடர்ந்தவர் ஒய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு மகிழ்சசியுடன் சென்று விட்டார். கோபாலன்  உடனடியாக இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு ஓடுகிறார்.

அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளும் சரிந்து விழுந்து உடைந்து நொறுங்கின. அது வரை இருந்த இணை ஆணையாளர் பதவி உயர்வோடு பணியிட மாறுதலும் பெற்று வெளியூருக்குச் சென்று விட்டார். கடுமைக்கும் கண்டிப்புக்கும்  பெயர் போன ஒருவர் அங்கு புதிதாக இணை ஆணையாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.    

கோபாலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  அனைத்து வழிகளும்  மொத்தமாக அடைபட்டு விட்டது போலத்  தோன்றின. கண்கள் இருட்டிக் கொண்டு  வந்தன. அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வந்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவர் அதன் பின் எழுந்திருக்கவே இல்லை.   

வீட்டிற்குத் தகவல் சொல்லப்படுகிறது. அத்தனை நிகழ்வுகளும் அதற்குப் பிறகு தான் அவரது மனைவிக்குத் தெரிய வருகிறது கோபாலனுடைய மனைவி மார்பிலறைந்து கொண்டு அழுதார். அழுகையோடு வார்த்தைகள் நெஞ்சைப்  பிளந்து கொண்டு வந்தன. 

“அடப்பாவி மனுசா!! ஒரு பேச்சு என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. சஸ்பென்சன் என்ன, வேலையே போயிருந்தாக்கூட நாம வாழ்ந்திருக்க முடியாதா? இப்படி எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே போட்டு வச்சு மொத்தமாப் போய்ச் சேர்ந்துட்டயே”  .

வகுப்பை  எடுத்துக் கொண்டிருந்தவர் முழுக்கதையையும் சொல்லி முடித்தார். முடித்து விட்டு அந்த வகுப்பறையிலிருந்த  அனைவருடைய முகங்களையும் பார்த்து விட்டு நிதானமாக ஒரு கேள்வி கேட்டார்.

"கோபாலனின் அகால மரணத்திற்கு யார் காரணம்?"

கேள்வியைக் கேட்டு  முடிப்பதற்குள் அங்கிருந்தவர்களுள் சரவணன் என்ற ஒருவர்  எழுந்து நின்று பேச ஆரம்பித்தார். "சார் அந்த அளவுக்குப் போகாமலேயே சரி பண்ணியிருக்கலாமே. சட்ட ரீதியாகவே வழி இருக்கே!" என்று பேச ஆரம்பித்தார்.

வேதாச்சலம் உடனடியாக அவரை அமர வைத்து விட்டு "என்ன பண்ணியிருக்கலாம்னு எல்லாம் நான் கேட்கல, நடந்து முடிஞ்சிடுச்சு. ஒருத்தன் செத்துட்டான். அவனோட சாவுக்கு யார் காரணம்? கொன்றது யார்? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க" .

இரண்டு நிமிடங்கள் அமைதி நிலவியது. முதலாவதாக ஒருவர் கூறத்  துவங்கினார்.

"சார் மத்த எல்லோரையும் விட கோபாலன் தான் முதல் காரணம். அவர் போன்ல பேசுனதுக்குப் பதிலா, நேர்ல போனதுக்குப்  பதிலா எழுத்துப் பூர்வமா வாரம் ஒரு தடவை நினைவூட்டுக் கடிதம் அனுப்பியிருக்கலாம். அவர் வேலையை சரியாகச் செஞ்சார்னு பதிவு ஆகியிருக்கும்ல. இப்படி சிக்கியிருக்க மாட்டார்ல?"

பலருக்கு அந்த பதில் திருப்தியானது போல் தெரியவில்லை.

இன்னொருவர் எழுந்து "சார்! செக்சன்ல நடக்குற எல்லாத்துக்கும் சூப்பரின்டென்ட் தான் பொறுப்பு. அவர் தான் கவனிச்சிருக்கணும். சுதாரிச்சு அவரே சரி பண்ணியிருக்கணும். நேரடியா இணை ஆணையாளர் அலுவலகத்துடன் பேசி ஆரம்பத்திலேயே முடிச்சிருக்கணும்"

மூன்றாமவர் அதையே வழிமொழிந்தார். "ஆமா, சார்! கண்காணிப்பாளரும், துணை ஆணையரும் தான் முதன்மையான காரணம். எல்லாத்தையும் கிளார்க்கே செய்யுறார்னா, அவுங்க ரெண்டு பேரும் எதுக்கு?. முக்கியமான பைல்களையாவது ஃபாலோ பண்ண வேண்டாமா? அது மட்டுமில்லாமா பிரச்சினைன்னு வந்தப்போ கோபாலனை காப்பாத்த முயற்சி பண்ணனுமா? வேண்டாமா? தான் தப்பிச்சா போதும்."

 எங்கிருந்தோ அதற்கு மறுமொழியும் வந்தது. "துறை நடவடிக்கையின் போது காப்பாத்திக்கலாம்னு நெனைச்சிருப்பாங்க, அவங்களுக்கு எப்படி சார் தெரியும், இப்படி நடக்கும்னு"

நான்காவதாக ஒருவர் எழுந்து "இணை ஆணையாளர் தான் சார் எல்லாத்துக்கும் காரணம். கோபாலனுக்கு  சஸ்பென்ஷன் ஆர்டர்  கொடுக்கலாம்னு முடிவெடுத்தது அவர்.அந்த முடிவுல வேற யாருக்கும் பங்கில்லை. எனவே இணை ஆணையாளர் தான் முதன்மைக் குற்றவாளி" என்றார்.

ஐந்தாவதாக ஒருவர் அதனை மறுத்து வாதிட்டார் "அது எப்படீங்க ஒட்டு மொத்தப் பழியையும் அவர் ஒருத்தர் மேலயே போடுவீங்க. என்னைக் கேட்டா இவுங்க யாருமே இல்லை, ஆணையாளர் தான் காரணம். அவர் தான் அந்தத் துறையின் தலைமை இடத்துல இருக்கிறார். அவருக்கு கீழ நடக்குற எல்லாத்துக்கும் அவர் தான் பொறுப்பு. கோர்ட்லயே அந்த வழக்குல முதல் பிரதிவாதி அவரு தானே?. டிபார்ட்மெண்ட்ல ஏதாவது சாதனை நடந்தா கிரெடிட் மட்டும் எடுத்துக்கு வார்ல? தப்பு நடந்தா மட்டும் யாரு கீழ இருக்காங்களோ அவங்க பொறுப்பேத்துக்கணும்!."

அருகிலிருந்தவர் "தோழர்! உணர்ச்சிவசப்படாதீங்க!! உட்காருங்க" என்று கூறி அவரை சாந்தப்படுத்தி அமர வைத்தார்.

ஆறாவதாக ஒருவர் "ஏன் சார் நீதிபதி காரணமாக இருக்கக் கூடாது? ஏன் இன்னொரு வாய்ப்புக் கொடுத்து நிதானமாகத் தீர்ப்பு சொல்லியிருக்கக் கூடாது"   என்றார்.

ஏழாவதாக ஒருவர் "வக்கீலும் கூடக் காரணம் தான். தனக்கு கேஸ் கெடைச்சாப் போதும். வேற யாரைப் பத்தியும் கவலையில்லை"

எட்டாவதாக ஒருவர் "சிஸ்டம் சரியில்ல சார், அது தான் எல்லாத்துக்கும் காரணம்.சிஸ்டத்தை மாத்துனா எல்லாம் சரியாகிடும் சார்" என்றார். வகுப்பில் சிரிப்பலை எழத் துவங்கியது.

ஒன்பதாக  ஒருவர் விரிவாகப் பேசத்து வங்கினார். "சார் இவுங்க எல்லாம் திரும்பத்  திரும்ப  வேலையைப் பத்தியே பேசிக்கிட்டிருந்தாங்க. ஆனா வாழ்க்கை ரொம்பப் பெருசு சார்! அதுக்கு முன்னாடி சஸ்பென்சன், துறை நடவடிக்கை எல்லாம் ஒண்ணுமே இல்லை சார். வேலையே போனாக் கூட வேற வேலை தேடிக்கலாம். வேலையே இல்லைனாக் கூட வாழலாம். கோபாலன் எல்லாத்தையும் யாரிடமும் சொல்லாம மனசுக்குள்ளேய போட்டு வெச்சுக்கிட்டது தான் சார் அவரோட மன அழுத்தம், மாரடைப்பு எல்லாத்துக்கும் காரணம். மனைவியிடம் எல்லாத்தையும் பகிர்ந்திருக்கலாம். மன பாரம் குறைந்திருக்கும். மனைவி கிட்ட என்ன சார் மான அவமானம், கவுரவம் எல்லாம்? இல்லைனா, நண்பர்களிடமாவது பகிர்ந்திருக்கலாம். ஆபீஸ்ல பிரச்சினைன்னா வீடு ஆறுதல் கொடுக்கும். வீட்டுல பிரச்சினைன்னா ஆபீஸ் கண்டுக்காது.  பிரச்சினைக்குத் தீர்வே இல்லைனு நினைச்ச அவரோட நம்பிக்கையின்மை ரெண்டாவது காரணம்"

அவர் பேசி முடித்தவுடன் வேதாச்சலம் அமைதியாக அவரிடம் "உங்களுடைய  பெயர் என்ன?" என்றார். "தட்சிணாமூர்த்தி" என்று பதில் வந்தது.

வேதாச்சலம் அவரைப் பார்த்து மேலும் பேசினார். "ஆனா அவர் தட்சிணாமூர்த்தி இல்லையே, அவர் கோபாலன் மட்டுமே, உங்க அளவு அவருக்குத் தெளிவோ, தன்னம்பிக்கையோ  இல்லையே!"

வகுப்பு முடியும் நேரம்  நெருங்கிக் கொண்டிருந்தது.

பிறகு அங்கிருந்தவர்கள்  எல்லோருமே வேதாச்சலத்தைப் பார்த்துக் கேட்டனர். "சரியான பதில் என்ன சார்? யார் குற்றவாளி? "

வேதாச்சலம் புன்னகையுடன் அனைவரையும் பார்த்து விட்டு "வீட்டிற்குப் போய் நிதானமாக இரவு முழுவதும் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய மனசாட்சியிடமிருந்தோ, ஆழ்மனதிலிருந்தோ பதில் கிடைக்கலாம்" என்று கூறி வகுப்பை நிறைவு செய்து விட்டுச் சென்று விட்டார்.

வகுப்பு முடிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்த சரவணன் என்பவரும், அவரது நண்பரும்  ஓய்வறையை நோக்கிச் சென்றனர். அப்போது ஓய்வறையிலிருந்து  வேதாச்சலம் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரது முகம் தண்ணீரால் கழுவப்பட்டிருந்தது. கண்கள் சிவந்திருந்தன.     

அது இறந்து போன அவரது அப்பா கிளார்க் கோபாலனுக்காக அவர் வடித்த கண்ணீர்.

-- தர்மராஜன் முத்துசாமி

சுபவங்ள்

இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்

புரட்டி போட்டாலும் தோசை மாதிரி பொறுமையா இருக்கனும்

உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்

அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்

ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்

உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்

பொங்கல் மாதிரி குழைவா பேசனும்

அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்

பிரியாணி மாதிரி famousஆ இருக்கனும்

சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்

ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது

நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது

பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது

ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது

புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது

கேசரி மாதிரி இனிமையா பேசனும்

பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்

அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்

அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்

புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்

ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்

டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்.

ஆறுகள்

🌴தமிழக ஆறுகளும் அவை ஓடும் மாவட்டங்களும்🌴🌊

  சென்னை - கூவம், அடையாறு

திருவள்ளூர்- கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு

காஞ்சிபுரம் - பாலாறு, அடையாறு, செய்யாறு

திருவண்ணாமலை - தென் பெண்ணை, செய்யாறு

வேலூர் - பாலாறு, பொன்னியாறு

விழுப்புரம்- கோமுகி ஆறு, பெண்ணாறு

கடலூர்- தென் பெண்ணை, கெடில ஆறு

நாகப்பட்டினம்- பெண்ணாறு, காவிரி, வெட்டாறு

திருவாரூர் - காவிரி, குடமுருட்டி, பாமணியாறு

தஞ்சாவூர் -காவிரி, குடமுருட்டி, பாமணியாறு, கொள்ளிடம்

பெரம்பலூர் - கொள்ளிடம்

திருச்சிராப்பள்ளி - காவிரி, கொள்ளிடம்

நாமக்கல் - காவிரி, நொய்யல், உப்பாறு

சேலம் - காவிரி, வசிட்டா நதி

தருமபுரி - காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு

கிருஷ்ணகிரி - தென் பெண்ணை, தொப்பையாறு

ஈரோடு - காவிரி, நொய்யல், அமராவதி, பவானி

கோயமுத்தூர் - அமராவதி, சிறுவாணி

கரூர் - அமராவதி, நொய்யல்

திண்டுக்கல் - மருதா ஆறு, சண்முகா ஆறு

மதுரை - வைகை

தேனி - வைகை, சுருளியாறு, மஞ்சளாறு

விருதுநகர் - கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, அர்ஜூனா ஆறு

திருநெல்வேலி - மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு

கன்னியாகுமரி - கோதையாறு, பழையாறு

தூத்துக்குடி - தாமிரபரணி, மணிமுத்தாறு

உறவுகள்

"எந்த இடத்தில்... யாராக இருந்தாலும், நாம் மக்களை சந்திப்பதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கும்.

ஒன்று அவர்கள் நமது வாழ்க்கையை மாற்றுவார்கள், அல்லது நாம் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுவோம்.”


ஒரு முறை நான் என் நண்பருடன் கடவுச் சீட்டு (passport) அவசரப் பிரிவில் (Tatkal) விண்ணப்பிக்க கடவுச்சீட்டு அலுவலகம் (Passport office) சென்றிருந்தேன்.

நாங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம், நாங்கள் பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டிய இடத்தை அடைந்த போது பணியில் இருந்த எழுத்தர் அங்கிருந்த டிக்கட் கவுன்டரை மூடி விட்டு நேரம் முடிந்தது, நாளை வாருங்கள் என்றார்.
 
ஒரு நாள் முழுவதும் காத்திருந்து விட்டோம், கட்டணம் செலுத்துவது மட்டுமே உள்ளது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினோம்.

அந்த எழுத்தரோ வருத்தமும் கோபமுமாக, “நீங்கள் நாள் முழுவதும் செலவழித்தது என் தவறு அல்ல..
அதற்கு நான் பொறுப்பும் அல்ல...
தேவையான அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியது அரசின் கடமை. காலை முதல் நான் என் வேலையைச் செய்து வருகிறேன்... " என்று கூறினார்.
 
என் நண்பர் மிகுந்த ஏமாற்றத்தோடு நாளை மீண்டும் வருவோம் என்று கூறினார். 

நான் அவரிடம் கொஞ்சம் காத்திரு நான் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறேன் என்றேன்.

எழுத்தர் தனது சாப்பாட்டுப் பையுடன் எழுந்தார். நான் எதுவும் பேசாமல், அமைதியாக அவரைப் பின் தொடர்ந்தேன். 

அவர் அலுவலகத்தில் இருந்த கேண்டீனுக்குச் சென்று, தனது பையில் இருந்து மதிய உணவை எடுத்து மெதுவாக தனியாக சாப்பிடத் தொடங்கினார்.
 
நான் அவர் முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்தேன். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும், தினமும் பல புதிய நபர்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினேன்.

அதற்கு அவர் ஆம், தான் நிறைய மூத்த அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை சந்திப்பதாகவும்,
தினமும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்து என் நாற்காலியின் முன் வந்து காத்திருக்கிறார்கள் என்றார்.
 
அப்போது நான் அவரிடம் உங்கள் தட்டில் இருந்து ஒரு ரொட்டி சாப்பிட தரமுடியுமா? என்றேன். அவர் சரி என்றதும் அவருடைய தட்டில் இருந்து ஒரு ரொட்டியை எடுத்து, காய்கறியுடன் சாப்பிட ஆரம்பித்தேன். 
உணவைப் பாராட்டினேன், உங்கள் மனைவி மிகவும் சுவையாக சமைத்திருக்கிறார் என்றேன்.

*நீங்கள் மிக முக்கியமான இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்கள். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் கடவுச் சீட்டு வாங்க வேண்டும் என்றால் உங்களைத் தேடி வரவேண்டும்." 

"இந்த அளவு மதிப்புமிக்க நாற்காலியில் அமர நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, மேலும் மிகவும் பொறுப்புமிக்க வேலை செய்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு, "உங்கள் வேலையை மதிக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு,
"நீங்கள் உங்கள் வேலையை மதிக்கவில்லை" என்று நானே பதிலும் சொன்னேன்.

“அதை எப்படி நீங்கள் சொல்ல முடியும்?" என்று கோபித்துக் கொண்டார்.

அவரிடம் நான் பொறுமையாக 
"உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மரியாதை இருந்தால், நீங்கள் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டீர்கள்" என்று சொன்னேன்.

"நீங்கள் அலுவலக கேண்டீனில் தனியாக சாப்பிடுகிறீர்கள், நண்பர்கள் கூட இல்லை,
உங்கள் இருக்கையில் கூட விரக்தியுடன் உட்கார்ந்து, நாடி வரும் மக்களின் வேலையை முடிப்பதற்கு பதிலாக அலைக்கழிக்கிறீர்கள்."

"காலையில் வெளி ஊர்களில் இருந்து வரும் மக்கள், காத்திருந்து கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவாமல், அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கத்திடம் கேளுங்கள்." என்று பதில் சொல்கிறீர்கள்.

"ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள், அதிக எண்ணிக்கையில் ஆட்கள்  வேலைக்கு அமர்த்தப்பட்டால், உங்கள் முக்கியத்துவம் குறையாதா? அல்லது ஒருவேளை இந்த இடம் உங்களிடமிருந்து பறிக்கப்படலாம்."
 
"உறவுகளை உருவாக்க கடவுள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். ஆனால் உங்கள் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, நீங்கள் உறவுகளைக் கெடுக்கிறீர்கள்."

"இதனால் எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. நாளையோ அல்லது நாளை மறுநாளோ கூட நாங்கள் வரமுடியும்."

"ஆனால் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த,  ஒருவருக்கு உதவ  உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது.. அதை நீங்கள் தவற விட்டீர்கள்" என்று சொன்னேன்.

"மேலும், நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம், ஆனால் எந்த உறவையும் சம்பாதிக்கவில்லை என்றால் எல்லாம் பயனற்றது. பணத்தை வைத்து என்ன செய்வீர்கள்?,  உங்கள் நடத்தையை நீங்கள் மாற்றாவிட்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்களும் உங்களுடன் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். மேலும் உங்களுக்கு நண்பர்கள்! கூட இருக்க மாட்டார்கள்" என்றேன்.

நான் பேசுவதைக் கேட்ட அவர் கண்ணீர் விட்டார். 
"நீங்கள் சொல்வது சரிதான். நான் தனியாக இருக்கிறேன். தகராறும் மன வருத்தமும் ஏற்பட்டு என் மனைவி அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தைகளுக்கும் என்னைப் பிடிக்காது. என் அம்மாவும் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.
அவள் காலையில் நான்கைந்து ரொட்டிகள் செய்து தருகிறார். இங்கே நான் தனியாக சாப்பிடுகிறேன். இரவில் வீட்டுக்குச் செல்வதைக் கூட விரும்புவதில்லை" என்று கூறிவிட்டு, "எங்கே தவறு செய்தேன் என்று புரியவில்லை?" என்று கூறினார்.

நான் அவரிடம் மெதுவாக சொன்னேன், "மக்களின் இதயங்களோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒருவருக்கு உதவ முடிந்தால், அதைச் செய்யுங்கள். என்னிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ளது. என் நண்பரின் பாஸ்போர்ட்டிற்காக நான் இங்கு வந்துள்ளேன். என் சுயநலத்திற்காக இல்லாமல் ஒரு நண்பருக்காக நான் உங்களிடம் கெஞ்சினேன். அதனால்தான் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு இல்லை. ” என்றேன்.

அவர் எழுந்து என்னை கவுன்டருக்கு வரச்சொன்னார். என் நண்பரின் படிவத்தையும் மற்றவர்களின் படிவத்தையும் வாங்கினார்.

பின்னர் அவர் எனது தொலைபேசி எண்ணைக் கேட்டார், நான் கொடுத்தேன்.

ஆண்டுகள் பல கடந்துவிட்டன.

இந்த ரக்ஷா பந்தன் அன்று எனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது ...
ரவீந்திர குமார் சவுத்ரி பேசுகிறார், ஐயா. பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு நண்பரின் பாஸ்போர்ட்டிற்காக வந்திருந்தீர்கள், நீங்களும் என்னுடன் ரொட்டி சாப்பிட்டீர்கள். பணத்திற்கு பதிலாக உறவுகளை உருவாக்குங்கள் என்று சொன்னீர்கள் என்றார். எனக்கு ஞாபகம் வந்தது.
நான், "ஆம், எப்படி இருக்கிறீர்கள் சவுத்திரி சாப்?” என்று கேட்டேன்.

அவர் மகிழ்ச்சியுடன் "ஐயா, நீங்கள் அன்று சென்ற பிறகு, நான் நீண்ட நேரம் யோசித்தேன்.
அது உண்மை!", என்று உணர்ந்தேன். "நிறைய பேர் தங்கள் வேலையைச் செய்ய பணம் கொடுக்கிறார்கள், ஆனால் உட்கார்ந்து உணவு சாப்பிட யாரும் இல்லை."

அடுத்த நாள், "நான் என் மனைவியின் தாய் வீட்டிற்குச் சென்றேன், நிறைய சமாதானமாகப் பேசி, அவளை வீட்டிற்கு அழைத்தேன் அவள் சம்மதிக்கவில்லை, அவள் சாப்பிட உட்கார்ந்தாள், நான் அவள் தட்டில் இருந்து ஒரு ரொட்டியை எடுத்து, நீ எனக்கு உணவளிப்பாயா?" என்று கேட்டேன், "அவள் ஆச்சரியப்பட்டு அழ ஆரம்பித்தாள்.
அவள் என்னுடன் வீட்டிற்கு வந்தாள், குழந்தைகளும் உடன் வந்தார்கள்."

"ஐயா, இப்போது நான் பணத்தை பெரிதாக நினைக்கவில்லை, உறவுகளை சம்பாதிக்கிறேன். என்னிடம் யார் வந்தாலும், அவருடைய வேலையை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்."
 
"ஐயா இன்று ரக்ஷாபந்தன் வாழ்த்துச் சொல்ல உங்களை அழைத்தேன், ஏன் தெரியுமா? மக்களுடன் எப்படி தொடர்புகொள்வது, உறவுகளில் எப்படி ஈடுபடுவது என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.

அடுத்த மாதம் என் மகளின் திருமணம். நீங்கள் வந்து என் மகளை ஆசீர்வதிக்க வேண்டும்."

"நீங்கள் உறவுகளை மீண்டும் ஏற்படுத்தியவர்..." அவர் பேசிக்கொண்டே போனார், நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

*ஒரு நாள் நான் பேசியது அவரது வாழ்க்கையை பாதிக்கும்," என்றும் "இந்த அளவு பணத்தை விட உறவுகளை மதிப்பவராக மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை."
💐

ஆம்,
உறவுகள் என்பது நண்பர்கள்,
தெரிந்த அல்லது தெரியாத மக்கள், மற்றும் நாம் சந்திக்கும் நபர்களின் உணர்ச்சிகளின் மீது கட்டமைக்கப்படுகின்றன.

வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது. ஒருமுறை நின்று சுற்றிப் பார்க்கவில்லை என்றால் நமக்குத் தான் இழப்பு.

அறிவும் விதிகளும் உறவுகளை உருவாக்காது.

இயந்திரத்தனமாக விதிகளை மட்டுமே பிடித்துக் கொண்டு வேலை செய்கிறவர்களைவிட,
மனித நேயத்தோடும்
உதவும் உயர்ந்த உள்ளத்தோடும்
வேலை செய்பவர்களே மகத்தான மனிதர்கள்.

நாம் இயந்திரங்கள் அல்ல, இதயம் உள்ள மனிதர்கள்.*

எந்த வேலையாக இருந்தாலும் உதட்டில் சிறு புன்னகையோடு செய்வோம்.‌ அது தரும் நம்பிக்கையையும்,
தைரியத்தையும் எதனாலும் தரமுடியாது.

நாம் மேலே உயர்வது, 
நம்மை பிறர் பார்க்க அல்ல.....
நாம் பிறரைப் பார்க்க.
🙏🏻💐

school

ᴅᴏ ʏᴏᴜ sᴛɪʟʟ ʀᴇᴍᴇᴍʙᴇʀ ᴛʜᴏsᴇ ᴀᴡᴋᴡᴀʀᴅ ᴅᴀʏs ɪɴ sᴄʜᴏᴏʟs ᴅᴜʀɪɴɢ ᴇxᴀᴍs ?

ᴡʜᴇɴ ᴀ ʙʀɪɢʜᴛ sᴛᴜᴅᴇɴᴛ ᴛᴇʟʟs ᴛʜᴇ ɪɴᴠɪɢɪʟᴀᴛᴏʀ ᴛʜᴀᴛ ǫᴜᴇsᴛɪᴏɴ 4 ʜᴀs ᴀ ᴘʀᴏʙʟᴇᴍ, ʙᴜᴛ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ᴀʟʀᴇᴀᴅʏ ᴀɴsᴡᴇʀᴇᴅ ɪᴛ...😳😜

ᴡʜᴇɴ ᴀ ғᴇʟʟᴏᴡ sᴛᴜᴅᴇɴᴛ ᴀsᴋs ғᴏʀ ᴀ ɢʀᴀᴘʜ ᴘᴀᴘᴇʀ, ʙᴜᴛ ʏᴏᴜ ᴀʀᴇ ғɪɴɪsʜᴇᴅ ᴀɴᴅ ᴅɪᴅ ɴᴏᴛ sᴇᴇ ᴀɴʏᴡʜᴇʀᴇ ᴡʜᴇʀᴇ ɪᴛ ᴡᴀs ʀᴇǫᴜɪʀᴇᴅ...😧 😁😁

ᴡʜᴇɴ ᴛʜᴇ ɪɴᴠɪɢɪʟᴀᴛᴏʀ sᴀʏs ᴊᴜᴍᴘ ǫᴜᴇsᴛɪᴏɴ 6 ᴡᴇ ᴡɪʟʟ ʀᴇᴄᴛɪғʏ ɪᴛ ʟᴀᴛᴇʀ, ʙᴜᴛ ɪᴛ ᴡᴀs ᴛʜᴇ ǫᴜᴇsᴛɪᴏɴ ʏᴏᴜ ᴇɴᴊᴏʏᴇᴅ ᴍᴏsᴛ ᴡʜᴇɴ ᴀɴsᴡᴇʀɪɴɢ...😟 😱😲

ᴡʜᴇɴ ʏᴏᴜ sᴇᴇ ᴘᴇᴏᴘʟᴇ ʙᴜsʏ ᴜsɪɴɢ ʀᴜʟᴇʀs ᴀɴᴅ ʏᴏᴜ ᴀʀᴇ ᴡᴏɴᴅᴇʀɪɴɢ ᴡʜᴀᴛ ɪs ɢᴏɪɴɢ ᴏɴ...😣😫😫

ᴡʜᴇɴ ʏᴏᴜ ʜᴇᴀʀ ʏᴏᴜʀ ғʀɪᴇɴᴅs ᴀʀɢᴜɪɴɢ ᴀғᴛᴇʀ ᴛʜᴇ ᴇxᴀᴍ ᴡʜᴇᴛʜᴇʀ ᴛʜᴇ ᴀɴsᴡᴇʀ ᴛᴏ ǫᴜᴇsᴛɪᴏɴ 5 ᴡᴀs 35.5% ᴏʀ 36.5% ᴀɴᴅ ʏᴏᴜʀ ᴀɴsᴡᴇʀ ᴡᴀs 1800 😩😏

ᴛʜᴇ ᴄʀᴇᴀᴍ. ᴡʜᴇɴ ᴛʜᴇ ᴏᴛʜᴇʀ sᴛᴜᴅᴇɴᴛs ᴀsᴋᴇᴅ ғᴏʀ 4-5 ᴀᴅᴅɪᴛɪᴏɴᴀʟ ᴀɴsᴡᴇʀ sʜᴇᴇᴛs ᴀɴᴅ ʏᴏᴜ ʜᴀᴅ ᴛᴡᴏ ᴘᴀɢᴇs ᴇᴍᴘᴛʏ ɪɴ ᴛʜᴇ ᴍᴀɪɴ ᴀɴsᴡᴇʀ sʜᴇᴇᴛ😨😰😱

sᴇᴇ ᴡʜᴇʀᴇ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ʀᴇᴀᴄʜᴇᴅ ɪɴ ʟɪғᴇ ɪɴsᴘɪᴛᴇ ᴏғ ᴛʜᴏsᴇ ᴍᴏᴍᴇɴᴛs... ᴛʜɪɴɢs ᴀʀᴇ ɴᴏᴛ ᴘᴇʀᴍᴀɴᴇɴᴛ... ᴇɴᴊᴏʏ ʟɪғᴇ! 😃😃

ᴏɴʟʏ ғᴏʀ ᴛʜᴏsᴇ ᴡʜᴏ ᴇɴᴊᴏʏᴇᴅ ᴛʜᴇɪʀ sᴄʜᴏᴏʟ ʟɪғᴇ😂😂😂

ᴛᴏᴘ 10 ᴅɪᴀʟᴏɢᴜᴇ ᴏғ ᴛᴇᴀᴄʜᴇʀ:

👉 ɪғ ʏᴏᴜ ᴀʀᴇ ɴᴏᴛ ɪɴᴛᴇʀᴇsᴛᴇᴅ ᴛʜᴇɴ ʏᴏᴜ ᴍᴀʏ  ʟᴇᴀᴠᴇ ᴛʜᴇ ᴄʟᴀss.

👉 ᴛʜɪs ᴄʟᴀss ɪs ᴡᴏʀsᴇ ᴛʜᴀɴ ᴀ ғɪsʜ ᴍᴀʀᴋᴇᴛ.

👉 ᴀʀᴇ ʏᴏᴜ ʜᴇʀᴇ ᴛᴏ ᴡᴀsᴛᴇ ʏᴏᴜʀ ᴘᴀʀᴇɴᴛs ᴍᴏɴᴇʏ? 

👉 ᴛᴇʟʟ ᴍᴇ ᴡʜᴇɴ ʏᴏᴜ ᴀʟʟ ʜᴀᴠᴇ ғɪɴɪsʜᴇᴅ ᴛᴀʟᴋɪɴɢ.

👉 ᴡʜʏ ᴀʀᴇ ᴜ ʟᴀᴜɢʜɪɴɢ? ᴄᴏᴍᴇ ʜᴇʀᴇ ɴ ᴛᴇʟʟ ᴜs ᴡᴇ'ʟʟ ᴀʟsᴏ ʟᴀᴜɢʜ. 

👉 ᴅᴏ ʏᴏᴜ ᴛʜɪɴᴋ ᴛᴇᴀᴄʜᴇʀs ᴀʀᴇ ғᴏᴏʟs ᴛᴏ ᴛᴇᴀᴄʜ ʏᴏᴜ?

👉 ᴅᴏɴ'ᴛ ᴛʀʏ ᴛᴏ ᴀᴄᴛ ᴏᴠᴇʀsᴍᴀʀᴛ ᴡɪᴛʜ ᴍᴇ.

👉 ᴡʜʏ ᴅᴏ ᴜ ᴄᴏᴍᴇ ᴛᴏ sᴄʜᴏᴏʟ ᴡʜᴇɴ ʏᴏᴜ ᴅᴏɴ'ᴛ ᴡᴀɴᴛ ᴛᴏ sᴛᴜᴅʏ.

👉 ᴛʜᴇ ᴘʀᴇᴠɪᴏᴜs ʙᴀᴛᴄʜ ᴡᴀs 100 ᴛɪᴍᴇs ʙᴇᴛᴛᴇʀ ᴛʜᴀɴ ʏᴏᴜʀs.

👉 ɪғ ʏᴏᴜ ᴡᴀɴᴛ ᴛᴏ ᴛᴀʟᴋ ᴛʜᴇɴ ᴜ ᴍᴀʏ ɢᴇᴛ ᴏᴜᴛ ғʀᴏᴍ ᴛʜᴇ ᴄʟᴀss.

ᴀɴᴅ ᴛʜᴇ ʙᴇsᴛ ᴏɴᴇ

👉 ʏᴏᴜ ʏᴇs ʏᴏᴜ...  ɪ ᴀᴍ ᴛᴀʟᴋɪɴɢ ᴛᴏ ʏᴏᴜ ᴏɴʟʏ, ᴅᴏɴ'ᴛ ʟᴏᴏᴋ ʙᴀᴄᴋ.. 😄😄
.
.
.
ɪ'ᴍ sᴜʀᴇ ᴛʜᴀᴛ ᴛʜᴇ ʟᴀsᴛ ʟɪɴᴇ ᴍᴀᴅᴇ ᴀʟʟ ᴏғ ʏᴏᴜ ʀᴇᴍᴇᴍʙᴇʀ ᴀɴᴅ sᴍɪʟᴇ .

ᴛʜɪs ᴡᴀs ᴏᴜʀ sᴄʜᴏᴏʟ ᴅᴀʏs. 
ᴛʜᴇ ʙᴇsᴛ ᴘᴀʀᴛ ᴡᴀs ᴛʜᴀᴛ ᴡᴇ ᴜsᴇᴅ ᴛᴏ ʜᴀᴠᴇ ᴛʜᴇ ᴍᴏsᴛ ɪɴɴᴏᴄᴇɴᴛ ғᴀᴄᴇ ᴛᴏ sʜᴏᴡ ᴀᴛ ᴛʜᴀᴛ ᴘᴏɪɴᴛ..😂😂 

ʀᴇᴘᴏsᴛ ɪғ ʏᴏᴜ ᴍɪss ʏᴏᴜʀ sᴄʜᴏᴏʟ ʟɪғᴇ...😀😂😂😂

சொர்க்கம்

கவிதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.

 சொர்க்கம்
 
மெரினா பீச் போனால் 
மிளகாய் பஜ்ஜி சொர்க்கம்...

Rayars Cafe போனால் 
ரவா தோசை சொர்க்கம்...

ஏப்ரல் உச்சி வெயிலுக்கு
 இளநீரே சொர்க்கம்...

December மாத குளிருக்கு
 Degree coffee சொர்க்கம் ...

திருமணமான புதிதில்
 தினந்தோறும் சொர்க்கம்...

விளக்கு வைத்த பின்னால்
 வெள்ளி நிலா சொர்க்கம்...

குலவும் காதல் ஜோடிக்கு
 கும்மிருட்டே சொர்க்கம்...

உலவும் தென்றல் காற்று
 உடலை வருட சொர்க்கம்...

படுத்தவுடன் தூக்கம்
 பட்டென்று வந்தால் சொர்க்கம்...

மீந்து போன அடைமாவில்
 மிருதுவான குனுக்கு சொர்க்கம்...

ஒருவாரமான தோசை மாவில் 
ஊத்தப்பமே சொர்க்கம்..

 மார்கழி மாத குளிரில்
 மணக்கும் வெண் பொங்கல் சொர்க்கம்...

கார மிளகு தாளித்த பொங்கலுடன்
கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்..

பரங்கிக்காய் சாம்பாருக்கு
  பீன்ஸ் பருப்புசிலி சொர்க்கம்...

கதம்ப சாம்பாருக்கு -
 பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்...

குடைமிளகாய் சாம்பாருக்கு
 கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்...

உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் 
உருளை காரகறியே சொர்க்கம்...

வெந்திய குழம்பிற்கு
 வெண்டைக்காய் கறி சொர்க்கம்...

சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு 
சுட்ட அப்பளமே சொர்க்கம்....

பத்திய மிளகு குழம்பிற்கு
 பருப்பு தொகையலே சொர்க்கம்...

மத்தியான தயிர் சாதத்திற்கு 
மாவடு இருந்தால் சொர்க்கம்....

Fast ஆய் வளரும் குழந்தைக்கு  
Fast Foodஏ சொர்க்கம்..

Waste ஆய் போன food கூட
 வீதியில் நிற்போருக்கு சொர்க்கம்....

பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு 
பருப்பு சாதமே சொர்க்கம்....

அடைக்கு வெல்லத்தோடு
 அவியல் இருந்தா சொர்க்கம்...

பசுமாடு உண்பதற்கு
 பச்சைப் புல்லே சொர்க்கம்....

நாயாய் பிறந்து விட்டால்
 நட்டநடு வீதியே சொர்க்கம்...

சாராயம் குடிப்பவனுக்கு
 தோதாய் Side Dish இருந்தா சொர்க்கம்...

பரீட்சை எழுதும் மாணவர்க்கு 
பாஸ் மார்க்கே சொர்க்கம்....

ஆப்பம் பிட்டு தின்பவனுக்கு
 ஆட்டுக்கால் பாயா சொர்க்கம்....

ஏப்பம் வந்தவுடன் 
சரிய ஏசி ரூம் இருந்தா சொர்க்கம்...

பாய்ப் போட்டு படுத்தவுடன்
 வாய் பிளந்து தூங்கினா சொர்க்கம்...

முதுமை வரும் போது 
முன் வழுக்கை சொர்க்கம்....

ஞானம் வரும் வேளை
 நரகம் கூட சொர்க்கம்....

பசியில் துடிப்பவனுக்கு
 பழைய சோறே சொர்க்கம்..

நோயில் வீழ்ந்தவனுக்கு
 நொய்க் கஞ்சியே சொர்க்கம்....

கோடை வெயிலுக்கு
 குளிர்ந்த மோர் சொர்க்கம்...

வாடை காற்றுக்கு
 வஞ்சியின் வெப்பம் சொர்க்கம்....

நேசிக்க நெஞ்சமிருந்தால்
 நினைவெல்லாம் சொர்க்கம்....

வாசிக்க புத்தகமிருந்தால்
 வரிக்கு வரி சொர்க்கம்..

தள்ளாத வயதில் 
தாரத்தின் தாய்மடி சொர்க்கம்....

மரணம் வரும் நேரத்தில்
 மரிப்பதே சொர்க்கம்...

இரவு படுக்க போகும் முன் 
இரண்டு முத்தம் சொர்க்கம்...

தூங்கி 
எழவில்லையென்றால் தூக்கத்திலேயே 
சொர்க்கம்! சொர்க்கம்!!