Sunday, November 28, 2021

know about your culture

தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!

செட்டிநாட்டுப் பகுதிகளில் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சில கலை சொற்கள்

சத்த :~
சற்று என்பது மருவி சத்த என்றானது .

பைய :~
 பொறுமை, மெதுவாக.

எங்குட்டு :~
எந்தப் பக்கம்.

எம்புட்டு :~
எவ்வளவு.

இம்புட்டோண்டு :~
சிறிதாக.

எம்புட்டு :~
என்னுடையது.

மகிர உள்ளது :~
நிரம்ப உள்ளது .

வெள்ளந :~
இருட்டு அகன்று 'வெள்ளி்' முளைக்கையிலே அதாவது வானில் வெள்ளி காலையில் குறிப்பிட்ட நேரமே தோன்றும் அது தோன்றும் பொழுது என்பது பொருள்

குறிச்சி :~
சாய்வு நாற்காலி.

கொட்டகை :~
மங்கல நிகழ்வுகளில் கொட்டகை என்றும் அதையே துயர துக்க நிகழ்வுகளில் பந்தல் என்றும் சொல்லும் வழக்கம்

மாடு கட்டுமிடத்தை
தொழுவம்
கட்டுத்தரை

வட்டி :~
உணவு உண்ணும் கும்பா
(வட்டில் என்பது பண்டையத் தமிழ் வழக்கு,)
அதாவது அசலில் கை வைக்காமல் அதன் வருமானத்தில் சாப்பிடுதல்

சிலாத்தி :~
சல்லடை.

சிட்டை
குறிப்பு

சுளகு சொளகு
முறம்.

மரவை
மரத்தால் ஆன தாம்பாளம்

போகினி / லோட்டா /
குவளை தோட்டா என்பது பர்மிய சொல்

குந்தாணி
 உரல்.

திருகை
அரிசி உடைக்கப் பயன்படுத்தப் படும் ஒருவகை கல் உரல்

ஏவம் கேட்டல் :~
பரிந்து பேசுதல்.

கொண்டி :~
போக்கிரி.
(கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம் பெறுகிறது)

தாக்கல் :~
தகவல் தாக்கீது

ஒள்ளத்தி உள்ளத்தி
மிகச்சிறிய அளவு.
(எள் அத்தனை. எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்)

தொக்கடி தொக்கு + அடி
மிகக் குறைந்த விலை.

மருக்கோளி :~
பைத்தியம்.

வறளி :~
பிடிவாதக்காரர்.

மூதலித்தல் :~
மெய்ப்பித்தல்.

பட்டியல்
விலைச்சீட்டு

பெட்டகம் :~
இரும்பால் ஆன அலமாரி.

பெட்டக சாலை
பெட்டிக்குள் வைக்கும் இடம்

கேணி :~
கிணறு.

கிண்ணி :~
சிறு தட்டு.

பலகாரம்:~
பலாரம் ( காலைப் பலகாரம் , இராத்திரிப் பலகாரம் ) - டிபன்.

துடுப்பு :~
மரத்தால் ஆன ஒருவகைக் கரண்டி.

கொட்டான் :~
பனை ஓலையில் பின்னப்பட்ட ஒருவகைக் கூடை.

சத்தகம் :~
தேங்காய் கீறுவதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு வகை கத்தி போன்ற கரண்டி

வக்கூடை.
மூங்கிலால் பின்னிய கூடை

சுவத்தலமாரி :~
வீடுகளில் சுவற்றோடு பதிக்க பட்டிருக்கும் அலமாரி.

சீசா :~
கண்ணாடிக் குடுவை.

ரொட்டிக்கட்டு :~
பிஸ்கட் பாக்கெட்.

தாளிக்கிற பெட்டி :~
அஞ்சரை பெட்டி / அஞ்சு அறைப் பெட்டி.

இரவைக்கு :~
இரவு

கடிசு - கடிது :~
கடினம்.

சவுக்காரம் :~
சோப்பு.

கடைக்கால் :~
அஸ்திவாரம்.

தொலைவு :~
தூரம்.

பட்டியக்கல் :~
கருங்கல்லால் ஆன தரை

தொரட்டி :~
உயர்த்தில் உள்ள மரக்கிளைகளை வளைத்து ஒடிக்கப் பயன்படும் கருவி / துரட்டி.

அம்புட்டு :~
அவ்வளவு.

பூராத்தையும் :~
அனைத்தையும்.

சீவிக்கிரபொட்டி :~
கண்ணாடி சீப்பு வைத்து கொள்ளும் பெட்டி.

ஊரணி :~
குளம்.

புரவி :~
குதிரை.

அங்கிட்டு :~
அந்தப் பக்கம்.

இங்கிட்டு :~
இந்தப் பக்கம்.

பொட்டல் :~
மைதானம்.

விளக்கு வைக்கணும் :~
விளக்கு ஏற்றனும்.

ஏத்தனும்
ஏற்றனும்

ராக்கை :~
அடுக்கம் / Rack.

படைக்கிற அறை :~
சாமி அறை.

உக்குராண அறை :~
சேமிப்பு அறை - சமையல் சாமான்கள் அறை

முகப்பு (மோப்பு ) :~
வீட்டின் முன்பகுதி.

வளவு - வளைவு :~
செவ்வகமான மத்தியப் பகுதி.

 திறந்த வெளியாகவும் இரு பக்கங்களிலும் அறைகள் கொண்டதாக அமைத்திருக்கும்.

வாரம் :~
தாழ்வாரம்.

பேழை :~
 ஓலையால் செய்த பெட்டி.

தடுக்கு :~
ஓலையில் செய்த சிறு பாய்.

அவுக :~
அவர்கள்.

இவுக :~
 இவர்கள்.

வந்தாக :~
வந்தார்கள்.

போனாக :~
போனார்கள்.

வருவாக :~
வருவார்கள்.

மேலைக்கு
பிற்பாடு
அதாவது யாராவது உதவி கேட்டு வந்தால் தரமாட்டேன் என்று சொல்லாமல் மேலைக்கு பார்போம் என்பர்

No comments: