Showing posts with label சொர்க்கம். Show all posts
Showing posts with label சொர்க்கம். Show all posts

Thursday, November 11, 2021

சொர்க்கம்

கவிதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.

 சொர்க்கம்
 
மெரினா பீச் போனால் 
மிளகாய் பஜ்ஜி சொர்க்கம்...

Rayars Cafe போனால் 
ரவா தோசை சொர்க்கம்...

ஏப்ரல் உச்சி வெயிலுக்கு
 இளநீரே சொர்க்கம்...

December மாத குளிருக்கு
 Degree coffee சொர்க்கம் ...

திருமணமான புதிதில்
 தினந்தோறும் சொர்க்கம்...

விளக்கு வைத்த பின்னால்
 வெள்ளி நிலா சொர்க்கம்...

குலவும் காதல் ஜோடிக்கு
 கும்மிருட்டே சொர்க்கம்...

உலவும் தென்றல் காற்று
 உடலை வருட சொர்க்கம்...

படுத்தவுடன் தூக்கம்
 பட்டென்று வந்தால் சொர்க்கம்...

மீந்து போன அடைமாவில்
 மிருதுவான குனுக்கு சொர்க்கம்...

ஒருவாரமான தோசை மாவில் 
ஊத்தப்பமே சொர்க்கம்..

 மார்கழி மாத குளிரில்
 மணக்கும் வெண் பொங்கல் சொர்க்கம்...

கார மிளகு தாளித்த பொங்கலுடன்
கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்..

பரங்கிக்காய் சாம்பாருக்கு
  பீன்ஸ் பருப்புசிலி சொர்க்கம்...

கதம்ப சாம்பாருக்கு -
 பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்...

குடைமிளகாய் சாம்பாருக்கு
 கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்...

உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும் 
உருளை காரகறியே சொர்க்கம்...

வெந்திய குழம்பிற்கு
 வெண்டைக்காய் கறி சொர்க்கம்...

சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு 
சுட்ட அப்பளமே சொர்க்கம்....

பத்திய மிளகு குழம்பிற்கு
 பருப்பு தொகையலே சொர்க்கம்...

மத்தியான தயிர் சாதத்திற்கு 
மாவடு இருந்தால் சொர்க்கம்....

Fast ஆய் வளரும் குழந்தைக்கு  
Fast Foodஏ சொர்க்கம்..

Waste ஆய் போன food கூட
 வீதியில் நிற்போருக்கு சொர்க்கம்....

பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு 
பருப்பு சாதமே சொர்க்கம்....

அடைக்கு வெல்லத்தோடு
 அவியல் இருந்தா சொர்க்கம்...

பசுமாடு உண்பதற்கு
 பச்சைப் புல்லே சொர்க்கம்....

நாயாய் பிறந்து விட்டால்
 நட்டநடு வீதியே சொர்க்கம்...

சாராயம் குடிப்பவனுக்கு
 தோதாய் Side Dish இருந்தா சொர்க்கம்...

பரீட்சை எழுதும் மாணவர்க்கு 
பாஸ் மார்க்கே சொர்க்கம்....

ஆப்பம் பிட்டு தின்பவனுக்கு
 ஆட்டுக்கால் பாயா சொர்க்கம்....

ஏப்பம் வந்தவுடன் 
சரிய ஏசி ரூம் இருந்தா சொர்க்கம்...

பாய்ப் போட்டு படுத்தவுடன்
 வாய் பிளந்து தூங்கினா சொர்க்கம்...

முதுமை வரும் போது 
முன் வழுக்கை சொர்க்கம்....

ஞானம் வரும் வேளை
 நரகம் கூட சொர்க்கம்....

பசியில் துடிப்பவனுக்கு
 பழைய சோறே சொர்க்கம்..

நோயில் வீழ்ந்தவனுக்கு
 நொய்க் கஞ்சியே சொர்க்கம்....

கோடை வெயிலுக்கு
 குளிர்ந்த மோர் சொர்க்கம்...

வாடை காற்றுக்கு
 வஞ்சியின் வெப்பம் சொர்க்கம்....

நேசிக்க நெஞ்சமிருந்தால்
 நினைவெல்லாம் சொர்க்கம்....

வாசிக்க புத்தகமிருந்தால்
 வரிக்கு வரி சொர்க்கம்..

தள்ளாத வயதில் 
தாரத்தின் தாய்மடி சொர்க்கம்....

மரணம் வரும் நேரத்தில்
 மரிப்பதே சொர்க்கம்...

இரவு படுக்க போகும் முன் 
இரண்டு முத்தம் சொர்க்கம்...

தூங்கி 
எழவில்லையென்றால் தூக்கத்திலேயே 
சொர்க்கம்! சொர்க்கம்!!