Thursday, January 02, 2020

அடுப்புச் சாப்பாடு

சுட்டது :

படித்ததில் மனம் விட்டு சிரித்தது, copy  செய்து paste  பண்ணி உள்ளேன் from another group:

I have gone through this verbatim years ago! Sure,many of senior citizens too..

அடுப்புச் சாப்பாடு

நந்து சுந்து
___________________________________________________________________

“விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா.

அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசன்கள்.

விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை.

“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.

குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.

நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

தராசு என்பது பெரிதாக இருக்கும்.  சாதாரண துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும்.

“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க...போன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார்.

“எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.

‘காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வீரப்பன் வேறு அவரின் கம்பெனியை அப்போது incorporate செய்திருக்கவில்லை.

இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்.

 நம்முடைய இரண்டு கைகளையும்  நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர்.

நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம்.

கால் மணி நேரத்தில்  விறகை வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்‌ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner.

“இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார். 

அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்?

விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.

அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும்.  சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும்.

இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர். 

இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும். 

சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும்.

சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும். 

“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா.

அண்ணன் போய் ஊதுவான். 

“இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.

குழல் ஊதும்  அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.

குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.

விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.

அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும்.

விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள்.

பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக்காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா.

சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல்  வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான்.

சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.

அதுவும் ஒரு டெக்னிக் தான்.

விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.
 
‘தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான்.  

சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் அம் பார்.

கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.

ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன். 

மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.

கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்‌ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில்.

இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிருக்கிறது.

ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.

இதோ இப்போதும்  கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.

“நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”

ஒரே ஒரு வித்தியாசம். 

கேட்டது சமையல்காரம்மா.

அப்பாவின் அன்பு

அப்பாவின் அன்பான
பொய்கள்.

மருத்துவமனை
தொட்டிலில்
நான்
முதன்முறையாக
அழுதபோது..
கடன்வாங்கி
கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாக
பொய் சொல்லியும்..

நடந்து
பழகுகையில்..
கல்தட்டி
விழுந்து
அழும்போது..
கல்லை
குச்சியால் தட்டி,
அந்த
கல் ,
அழுவதாக
பொய் சொல்லியும்..

இரவுகளில்
பேய்க்கனவு
கண்டு..
பாதியில்
எழுந்து
அழும்போது,,
தோள்களில்
இறுக்கமாய்
அணைத்துக்கொண்டு
பேய்
ஓடிப்போனதாக
பொய்சொல்லியும்..

முதல்நாள்
பள்ளியில்
அமர்வதற்கு
அழுதபோது..
இரண்டு
தினங்களில்,
தானும்
பள்ளியில்
சேரப்போவதாக
பொய் சொல்லியும்..

குலதெய்வம்
கோவிலில்..
காது
குத்திக்கொண்டு
அழுதபோது,,
இன்றிலிருந்து
சாமியோடு
"டூ "
விட்டுவிட்டதாக
பொய் சொல்லியும்..

காய்ச்சலுறும்
தருணங்களில்,,
ஊசி
வேண்டாமென
அழும்போது..
மாத்திரை
மட்டும்
தரச்சொல்லி
மருத்துவரிடம்
சொல்லியிருப்பதாக
பொய் சொல்லியும்..

குறைந்த
மதிப்பெண்ணிற்காக,
அம்மாவிடம்
திட்டு
வாங்கிக்கொண்டு
அழுதபோது..
வாத்தியாருக்கு
படிக்க
தெரியவில்லை,,
என
பொய் சொல்லியும்..

திருமணம்
முடிந்து,,,
புகுந்தவீடு
செல்வதற்கு
அழுதபோது..
மகிழ்வோடு
வழியனுப்புவதாக
பொய் சொல்லியும்..

என்னை
ஏமாற்றிய
அப்பா...

தோள்மீது
பேத்தி ஏறியதும்,,
தொடர்ச்சியாக
பலமுறை
இருமிவிட்டு..
துளியளவு
தைலத்தில்
எல்லாமே
சரியாகிப்போனதாக,
எனது
மகளிடம்,
மீண்டும்
ஏமாற்ற துவங்குகிறார்...!!
ஐ லவ் யூ அப்பா...

நன்று தீது

டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்க கத்திப்பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேள தாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் நல்ல எண்ணத்தையே சீர்குலைத்து கெடுத்துவிடும்.

இதனால் நிகழ்ச்சியில் நல்ல இல்லாத காட்சிகள் TVக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள்  நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆய்வு ஆகும்.

அதை சமயம் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.

ஆம்...!!!

உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்...

இதனால் கண்பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம், மன அழுத்தம், மன நோய் வந்து... உடல் எடை அதிகரித்து.....

இதன் தொடர்ச்சியாக...

இதற்கு எல்லாம்  முக்கியமான காரணம்...

பிறரை எப்படிக்கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கள்ளக்காதல் தொடர்பு எப்படி என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது....

குடும்பத்தினருக்குள் மாமியார்-மருமகள் சண்டை, அண்ணன் தம்பி சண்டை சந்தேகப்படுவது,  சகுனிவேலை பார்ப்பது, எல்லாம் கற்றுக்கொள்ளலாம்.

எப்படி லஞ்சம் பெறுவது!!! கற்றுக்கொள்ளலாம்

அதோடு...!!

நேர்மையான அரசு அதிகாரிகளை எப்படி லஞ்சம் வாங்கியது போல் திட்டமிட்டு மாட்டி விடுவது என்றும் கற்றுக்கொடுக்க படுகிறது

பிறர் தொழிலை எப்படி கெடுப்பது? எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது  என்பது எல்லாம்  காண்பிக்கப்பட்டு  மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட பெரிய பேரிழப்பு

உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...

இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட சுய லாபத்துக்காக இப்படி பட்ட மக்களைச் சீரழிக்கும் டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..

இது போன்ற கேவலமான நாடகங்களை புறக்கணியுங்கள்.. நாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்தால்  தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்

நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் தான்

எனவே உங்கள் விலைமத்ப்பில்லா  ஓய்வு நேரத்தை  அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்

குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் மற்ற நேரங்களில் நல்ல புத்தகங்களை படியுங்கள்... கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள்

இல்லையேல் வரும் பலன்களை நல்லதோ கெட்டதோ நீங்கள் தான் அவற்றை TV பார்த்து  உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அனுபவிக்க தயாராகுங்கள்...

அல்லதை விடுத்து நண்பர்களே...!!

நல்லதை 
பாருங்கள்; 
கேளுங்கள்; 
பேசுங்கள்;
சிந்தியுங்கள்;
வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும் ...

தீதும் நன்றும் பிறர் தர வாரா நம்மைச்சுற்றி நடப்பனவற்றுக்கு  நாமே பொறுப்பு......

அவரின் பார்வை

கடவுளின் பார்வை யார் மீது படும்...

1)யார் கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் படைத்தவரோ அவர் மீது 

2)சத்தியத்தின்படி நடப்பவர் மீது

3)உள்ளொன்று புறமொன்று இல்லாதவர் மீது

4)சுயநலமற்ற அன்புள்ளவர் மீது

5)யார் மனதையும் புண்படுத்தாதவர்  மீது 

6)நேர்மையானவர் மீது நிலை தவறாதவர் மீது

7)விருப்பு வெறுப்பின்றி பிறருக்கு உதவுபவர் மீது

8) எந்த சூழ்நிலையிலும் யாரையும் ஏமாற்றதவர் மீது 

9) அனைவரும் நம்மைப் போன்ற உயிர்கள் என்று உணர்பவர் மீது

10) எதற்கும் கவலைப்படாமல் நன்னெறியில் மகிழ்ச்சியாக நடப்பவர் மீது

11) கோபம் வெறுப்பு ஆவேசம் பொறாமை இல்லாதவர் மீது

12) தீய உள்நோக்கம் கொண்ட பார்வை இல்லாதவர் மீது

13) பிறரை மதிப்பவர் மீது

14) பணிவுடன் நடந்து கொள்பவர் மீது

15) இனிமையான வார்த்தைகளை நெஞ்சில் நஞ்சில்லாமல் பேசுபவர் மீது 

16) மரியாதையின் படி நடப்பவர்கள் மீது மரியாதை கொடுப்பவர்கள் மீது

17) உழைப்பின் உண்மையை உணர்ந்து உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மீது

18) பிறரை மனம் சொல் செயலால் துக்கப்படுத்தாதவர்கள் மீது 

19) ஏழ்மையிலும் தர்மத்தை மீறாதவர்கள் மீது 

20) பொய்யுரைக்காதவர்கள் மீது

21) பிறர் மீது பழி சுமத்தாதவர்கள் மீது 

21) பிறரை மன்னிப்பவர்கள்மீது 

22) நேரத்தை வீணடிக்காதவர்கள் மீது 

23) சுறுசுறுப்பாக தன் கடமையை தர்மத்தின்படி செய்பவர்கள் மீது 

24) எந்த நிலையிலும் பிறரை ஏளனம் செய்யாதவர்கள் மீது 

25) கருணை மனம் கொண்டவர் மீது

26) சத்தியத்திற்காக அச்சப்படாமல் வாழ்பவர் மீது

27) நன்மை செய்வதற்காக சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்பவர் மீது

28) நடந்த முடிந்த தவறுக்கு வினாடியில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஏன் எதற்கு என்ற குழப்பத்தில் வராமல் மீண்டும் நாணயமாக முன்னேறி செல்லக்கூடிய முயற்சி செய்பவர் மீது

29) எப்படிப்பட்டவரையும் உயர்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பவர் மீது 

30) எந்த சூழ்நிலையிலும் கடும் வார்த்தை பேசாதவர் மீது

31) மூடநம்பிக்கைகளை புறந்தள்ளி எப்பொழுதும் எனக்கு இறைவன் உதவுவார் என்று பரிபூரணமாக நம்புபவர் மீது 

32) பாவம் செய்யாதவர் மீது பிறரை பாவம் செய்ய தூண்டாதவர் மீது 

33) எல்லாம் இறைவன் கொடுத்தது என்று வாழ்பவர் மீது

34) நான் எனது என்று சொல்லாதவர் மீது யாவும் நன்மைக்கே நடக்கின்றது என நினைப்பவர் மீது

35) விரோதிகளையும் மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர் மீது

36) வித்தியாசம் வேறுபாடு இல்லாத சமநோக்கு பார்வை உடையவர் மீது

37) சுயம், தொழில், குடும்பம்,சம்பந்தம் இவற்றில் தர்மத்தை மீறாதவர் மீது 

38) நல்ல சகவாசத்துடன் இருப்பவர் மீது 

39) பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் மீது

40)நல்லதை பேசி பிறரது மனதை அமைதிப்படுத்துபவர் மீது

41) நன்றி மறவாதவர்கள் மீது

42) மலர்முகம் மாறாதவர்கள் மீது

43) பசியாற்றுபவர் மீது 

44) நம்பிக்கை துரோகம் செய்யாதவர் மீது 

45) சந்தேக புத்தி இல்லாமல் இறைவனான தன்னை பரிபூரணமாக நம்புபவர்கள் மீது

46) மங்களமான எண்ணம் சுபமான வார்த்தைகள் உற்சாகம் கொடுக்கக் கூடிய செயல்கள் இம்மூன்றும் உள்ளவர் மீது

47) இறைவனான தன்னையே நினைத்து தன் நினைவை பிறருக்கும் ஏற்படுத்துபவர் மீது

48) பிறரது தவறுகளை தனது தவறுகளாக எண்ணி மறப்பவர் மன்னிப்பவர் மீது 

49) சலிப்பின்றி உற்சாகத்துடன் பிறருக்கு உதவி செய்பவர் மீது 

50) நிலையற்ற இந்த வாழ்க்கையில் நிலையானது அன்புதான் என்றெண்ணி வாழ்பவர் மீது

51) தினசரி இறைவனுக்கு செய்யும் கடமைகளில் தவறாதவர் மீது

52) மகிழ்ச்சியுடன் உணவு உபசரிப்பவர் மீது 

53) உணவை பிரசாதம் என்றும் நீரை தீர்த்தம் என்றும் அருந்தி மகிழ்ந்து தனது வாழ்வு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று வாழ்பவர் மீது 

54) இறை நெறியிலும் இறைவனிடத்திலும் மாறாத அன்புள்ளவர் மீது

55) இறைவனின் புகழையே சதாகாலமும் பாடிக்கொண்டே இருப்பவர் மீது 

56) இறை போதனைகளின் வழிப்படி நடந்து பிறருக்கு அதை போதிப்பவர் மீது

57)இது இறைவனின் விருப்பம் என்றெண்ணி  அமைதியாக அவரது நினைவில் இருப்பவர் மீது

58) மௌனத்தில் தியானமும் சப்தத்தில் ஞானமும் மட்டுமே வெளிப்படுபவர் மீது 

59) தெய்வீக தேஜஸால் தனது தோற்றத்தின் மூலம் இறைவனை வெளிப்படுத்துபவர் மீது

60) இறைவன் கொடுத்த செல்வத்தை தவறான வழிகளில் செலவு செய்யாதவர் மீது

61) தகுதியறிந்து தானம் கொடுப்பவர் மீது

62) தனது அன்றாட கணக்கு வழக்குகளை இறைவனிடம் ஒப்படைப்பவர்மீது 

63) ஒவ்வொரு விசயத்திற்கும் இறைவனுக்கு மனதார நன்றி செலுத்துபவர் மீது

64) அனைவரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒருவர் மீது

65) சமாதானம் செய்து மனதை ஆற்றுப்படுத்துபவர் மீது 

66) எளிமையாகவும் உதாரணமாகவும் வாழ்பவர் மீது

67) அனைவரையும் உளமார வாழ்த்துபவர்கள் மீது 

68) உணவு,உடல், உடை,இருப்பிடம்,செயல் யாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்பவர் மீது 

69)நிதானமாக இருப்பவர் மீது பிறருக்கு நிம்மதியை தருபவர் மீது

70)குணங்கள் நிறைந்த குணவான் மீது

71) அறியாமையில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் மீது

72) சர்வ சம்பந்தங்களையும் இறைவன் மீது வைத்துள்ளவர் மீது 

73) இந்த உடலில் இருந்து ஆன்மா தான் அனைத்தும் செய்கின்றது என்று கவனம் வைத்திருப்பவர் மீது

74)அனைவரும் அழிவற்ற ஆத்மாக்கள் என்று உணர்ந்து நடப்பவர் மீது

75)சகித்துக்கொண்டு பொறுமை காப்பவர் மீது

76)மனதாலும் செயலாலும் யாருக்கும் ஹிம்சை கொடுக்காத அஹிம்சாவாதி மீது 

77) எப்பொழுதும் திருப்தியாக இருப்பவர் மீது

78) மனிதாபிமானத்துடன் நடப்பவர் மீது

79) செயலின் விளைவை அறிந்து காரியம் செய்பவர் மீது

80) பாவம் செய்வதற்கு அஞ்சி நடப்பவர் மீது

81)ஆசிகள் கொடுப்பவர் ஆசிகள் அடையப் பெற்றவர் மீது

82) சொல்லும் செயலும் சமநிலையில் இருப்பவர் மீது

83)உலக நன்மைக்கான காரியத்தில் காரணம் சொல்லாதவர் மீது 

84) வாயால் சொல்லாமல் அனுபவப்பூர்வமாக இறைவனை வெளிப்படுத்துபவர் மீது

85) ஒவ்வொரு நிமிடமும் இறைவன் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்று வாழ்பவர் மீது

86) சம்பந்தம் தொடர்பில் வருபவருக்கு ஏதாவது ஒரு நற்குணம் என்ற பரிசை அளிப்பவர் மீது 

87) இறை நியமத்தின் பூர்வமாக பிறருக்கு மகிழ்ச்சி அளிப்பவர் மீது

88)தான் வாழ்க்கையில் அடைந்த அனுபவங்களை பிறருக்கு கூறி நல்வழிப்படுத்துபவர் மீது 

89)எப்பொழுதும் இறைவனின் தொடர்பில் இருந்து தன்னை இவ்வுலகில்  பாதுகாத்துக் கொள்பவர் மீது 

90) தீயதை பார்க்காமல் கேட்காமல் சொல்லாமல் நினைக்காமல் இருப்பவர் மீது

91) சோதனைகளில் எடுத்துக்காட்டாக வாழ்பவர் மீது

92) புண்ணிய காரியங்களை மட்டுமே செய்பவர் மீது

93) ஆன்மாவின் ஆனந்த நிலையில் நிலைத்து இருந்து பரமாத்மாவின் பேரானந்த நிலையில் மூழ்கி இருப்பவர் மீது

94) உடல் ஒரு ஆலயம் எனப் புரிந்து அதை ஆரோக்கியமாக வைத்திருப்பவர் மீது

95) தினசரி சுயமுன்னேற்ற பயிற்சியில் காலம் தவறாமல் ஈடுபடுபவர் மீது

96)தன்னை தாயாய் கவனிக்கும் பஞ்ச தத்துவங்களுக்கு இறைவனிடமிருந்து சக்தியை வாங்கி வழங்குபவர் மீது 

97)அன்பாகவும் விலகியும் தாமரை மலர் போல் பற்றற்று  வாழ்பவர் மீது 

98)தவசீலராகவும் குணசீலராகவும் இருந்து பிறருக்கு நன்மை செய்பவர் மீது

99) மனமுடைந்து போனவருக்கும் நம்பிக்கையை வழங்கி அவரை வலிமை உடையவராக மாற்றுபவர் மீது

100)செய்பவரும் செய்விப்பவரும்  அவரே 
என்றுணர்ந்து அவரே உலகம் என்று சிவனே என்றிருப்பவர் மீது

ஆத்திச்சூடி

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார் / Avvaiyaar...

சைக்கிள் சவாரி

" சைக்கிள் சவாரி.." 

அப்போதெல்லாம் 
வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது. 

அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், 
அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் அப்போது 
சைக்கிள் ஓட்டத் தெரியாமல், 
அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள். 
’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது..?

அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. 

இப்போதும் 
உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன. 
ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம்  50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும். 
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள், 
கேரியர்இல்லாத சைக்கிள், 
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள். 

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே, 
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள். 

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும் 
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள். 
அந்த ஒரு பத்து நிமிஷம், 
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள். 

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள். 

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு. 
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது. 

அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன, 
உப்புத்தாள் கொண்டு, 
வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன... 
என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன். 
ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி. 

நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன. 

‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.

பத்துமுறை பெடல் செய்தால், ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்று 
அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள். 

ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம்...
என சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.

டைனமோ இல்லையெனில் 
போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும். 
அதேபோல், 
சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது, 
அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும். 

‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது..’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.

‘ஓவராயிலிங்..’ சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.

அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு, 
அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி, 
ஹேண்டில் பார் கைப்பிடி, 
சீட்டுக்கு முன்னே இருக்கும் 
பார் பகுதிக்கு ஒரு கவர், 
சீட்டுக்கு குஷன் கவர், 

இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது 
ஒரு கலை. 

இன்னும் சிலர், 
சின்னச்சின்ன மணிகளை, 
வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.

 டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது 
மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம். 
கறிவேப்பிலை வாங்கவே, 
டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம். 

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு, 
கெத்துக் காட்டுவோம். 

சைக்கிளின் ரெண்டுபக்கமும் 
பெல் வைத்து, 
வித்தியாச ஒலி எழுப்புவார்கள்.

மாற்றங்கள்...
வேகங்கள்..

சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

 ‘என்னடா மாப்ளே... 
இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே. 
இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா. 
இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.

அப்பா ஓட்டிய சைக்கிள், 
முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம் 
மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன. 
அப்பாவுக்கு பைக், 
மனைவிக்கு ஆக்டீவா,  
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

குழந்தைகளுக்கும் பசங்களுக்கும் குட்டியூண்டு சைக்கிள் கூட பரிதாபமாகக் காட்சி தருகின்றன. 

வாகனத்துக்கும் நமக்குமான பந்தமோ செண்டிமெண்டோ இப்போதெல்லாம் இல்லை. 

’ரெண்டு வருஷத்துக்கு ஒருதடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்குக் கையைக் கடிக்காது..’ என்று தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

காலச் சுழற்சியில்... 
தொப்பையைக் குறைக்கவும் 
சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். 

ஸ்டாண்ட் போட்டு, 
சைக்கிளிங் பண்ணுவதற்கு, 
காத்தாட வண்டி ஓட்டலாம் என்று சைக்கிள் வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது. 
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும், 
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?

உங்கள் நினைவுகளை 
கொஞ்சம் தட்டி விடுங்கள்....

old days or times

அந்த காலம் தான் 
நன்றாக இருந்தது...

ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே 
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு, 

பேருந்துக்குள் கொண்டுவந்து 
மாலைமுரசு விற்பார்கள்,

மிதி வண்டி வைத்திருந்தோம்.,

எம் ஜி ஆர் உயிரோடு 
இருந்தார்.

ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

KB படங்கள் என்றால் 
ஒரு மாதம்அலசுவோம்

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.

கல்யாண வீடுகளில் 
பாய் போட்டு சாப்பாடு

கபில் தேவின் 
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH

குமுதம், விகடன் 
நேர்மையாக இருந்தது.

எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், 
கேசட்டிலும் பாடல் கேட்பது 
சுகமானது, 

வீடுகளின் முன் பெண்கள் 
காலையில் கோலமிட்டார்கள், 
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் 
அரட்டை அடிப்பார்கள், 

சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு 
முன்பே திட்டமிடுவோம், 

தீபாவளி பண்டிகையை கொண்டாட 
ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம், 

புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS

டான்ஸில் ஆபரேஷன்தான் 
பெரிய ஆபரேஷன் 
நிறைய பேர் 
பண்ணி கொண்டார்கள், 

வானொலி நாடகங்களை 
ரசித்து கேட்டோம்.,

எல்லோரும் அரசு பள்ளிகளில் 
படித்தோம்.,

சாலையில் எப்போதாவது 
வண்டி வரும்.,

மழை நின்று 
நிதானமாக பொழியும, 
 
தமிழ் ஆசிரியர்கள் 
தன்நிகரற்று விளங்கினர்.,

வேலைக்கு போகாதவன் 
எந்த குடும்பத்திற்க்கும் 
பாரமாயில்லை, 

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

வெஸ்ட் இன்டீசை
 வெல்லவே முடியாது.,

சந்தைக்கு போக 
பத்து ரூபாய் போதும்.,

அம்மா பக்கத்தில் உறங்கினோம், 

கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம், 

முடி வெட்ட 
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைஸா, 

பருவ பெண்கள் பாவாடை 
தாவணி உடுத்தினர் ..
சிலின்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,

சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும் 
விலைக்கு வாங்க வில்லை.,

தெருவில் சிறுமிகள் 
பல்லாங்குழி ஆடுவார்கள். 
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

டாக்டர் வீட்டுக்கே வருவார், 

காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது, 

சினிமா பாட்டு புஸ்தகம் கிடைக்கும்,

எழுத்தளர் சுஜாதா கதைகள் 
சிக்கு்னு இருக்கும்,

மயில் இறகுகள் 
குட்டி போட்டன புத்தகத்தில்.,

ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு 
அப்பாவிடம் அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து 
மட்டுமே,ஆங்கிலம்.,

ஐந்தாம் வகுப்பு வரை 
அரைக்கால் டவுசர்.,

மொத்தத்தில் மரியாதை இருந்தது.

தொலைந்து போனவை 
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்.!!

நினைவை விட்டு அகலவில்லை..

New year wishes

Considering the furore on everything, soon our greeting may become like this.
------------------------
Hello,
I wanted to send some sort of holiday greeting to you, my friends, but it is so difficult in today's world to know exactly what to say without offending someone.So I met with my lawyer(s) yesterday, and on their advice. I wish to say the following to you my dear friends:

"Please accept with no obligation, implied or implicit, my best wishes for an environmentally conscious, socially responsible, low stress, non-addictive, gender neutral celebration of the winter solstice holiday, practiced with the most enjoyable traditions of religious persuasion or secular practices of your choice with respect for the religious/ secular persuasions and/or traditions of others, or their choice not to practice religious or secular traditions at all.

l also wish you a fiscally successful, personally fulfilling and medically uncomplicated recognition of the onset of the generally accepted calendar year 2020, but not without due respect for the calendars of choice of other cultures whose contributions to society have helped make our country great (not to imply that India is necessarily greater than any other country) and without regard to the race, creed, colour, age, physical ability, religious faith or sexual preference of the wishes.

By accepting this greeting, you are accepting these terms. 
This greeting is subject to clarification or withdrawal.
It is freely transferable with no alteration to the original greeting.

It implies no promise by the wisher to actually implement any of the wishes for her/himself or others and is void where prohibited by law, and is revocable at the sole discretion of the wisher.

This wish is warranted to perform as expected within the usual application of good tidings for a period of one year or until the issuance of a subsequent holiday greeting, whichever comes first, and warranty is limited to replacement of this wish or issuance of a new wish at the sole discretion of the wisher."

Disclaimer: No trees were harmed in the sending of this message; however, a significant number of electrons were slightly inconvenienced.

மனைவி!!!?!

கவிஞர்களில் எத்தனை வித்தியாசமான மனைவிகள் இவர்களுடன் சண்டை போடுகிறார்கள்: - 

பைலட்டின் மனைவி: - அதிகமாக பறக்காதீர்கள்

ஆசிரியரின் மனைவி: - எனக்கு கற்பிக்காதே

ஓவியர் மனைவி: - மிகவும் வண்ணமயமான நிறம்

டோபியின் மனைவி: - வாஷ்
 
நடிகரின் மனைவி: - அதிகமாக விளையாடாதே
 
பல்மருத்துவர்: - பாட்டி உடைந்து விடும்
 
மார்வாடியின் மனைவி: - கணக்கு வைத்திருங்கள்
 
பொறியாளரின் மனைவி: - அனைத்து பகுதிகளிலும் தளர்த்தப்படும்

கட்டிடக்கலை மனைவியிடம்: - கவனமாக இருங்கள் அல்லது தாபாத்தின் வடிவமைப்பு மாற்றவும்
 
சுனரின் மனைவி: - ரூட் செய்வேன்
 
பண்டிதனின் மனைவி: - மல்லுக்கு ஒலிக்கும்
 
இசைஞானி மனைவி: - டோல் பாஜ் தேஜேஜ்
 
டிரைவர் மனைவி: - அதை உடைத்து 
கட்டிடம் மனைவி: - செங்கல் கொண்டு செங்கல்
 
டாக்டர்ஸ் மனைவி: - சரியான சிகிச்சை செய்வார்
 
வழக்கறிஞர் கி மனைவி: - உங்கள் வழக்கறிஞரை நீதிமன்றத்திற்கு வரம்பிடவும் ....

மற்றும் சிறந்த ஒரு .....

நிர்வாகி மனைவி: - குழுவை நீக்கு ....

Sunday, October 20, 2019

நான் கூட எனக்குதான் ஏதோ பிரச்சனைனு நினைச்சுகிட்டு இருந்தன்.. நாகரீகமா வளர்த்துருக்காங்க போல..

நான் கூட எனக்குதான் ஏதோ பிரச்சனைனு நினைச்சுகிட்டு இருந்தன்.. நாகரீகமா வளர்த்துருக்காங்க போல..

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்)

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....
குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - (none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

10. நீங்கள் ஓட்டுனராகவோ , 
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி ஆவந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

14.  நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. 
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15.  வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers) நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive. (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, கோலம் போடும் போதோ, வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும் 
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24.  ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25.  டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28.  குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

நாகரிகங்கள் 

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ...
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ...

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?

பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. 

தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்…

பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை எத்தனை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.
அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.

இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..??

பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.
ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.

கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.

ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. 

வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும்.

இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.

ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.
இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதிகளே... 

தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள்...

Decoy effect

Why does Apple always come up with three versions of iPhone?

Let's understand this by an example.

Let's say you are an ice-cream lover. You find great value in eating ice-cream.

One fine day, you are out to treat yourself. Shopkeeper provides you below options:

One Scoop Ice Cream: 13 bucks

Two Scoop Ice Cream: 19 bucks

Three Scoop Ice Cream: 19.5 bucks

The negligible difference between the prices of 2nd and 3rd options gets your attention.

This is called Decoy Effect.

A 2nd option is just a Decoy option. Companies provide decoy option so that customer can compare Decoy option with an expensive option (and select the expensive one).

In the absence of a decoy option, the customer will compare: 13 bucks vs 19.5 bucks - and may probably go with a cheaper option.

But with decoy option, the customer now compares 19 bucks vs 19.5 bucks - and most likely selects the expensive option.

Can you see a similar pattern in the pricing of iphone11 by Apple?

iPhone: $ 699

iPhone Pro: $ 999

iPhone Pro max: $ 1099

Yes, Apple does use Decoy effect to drive consumer to buy the expensive version of their product. Not only they are making quality products, but also they are not leaving any stone unturned when it comes to marketing and selling their products.

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ....நோ பீஸ் ஆப் மைண்ட் ...

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன் ...

இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது ...
நம்ப மாட்டீர்கள் ...
வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ...

அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து, 
வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை ...

அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு,
 வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி ..!

சோஃபாவும் அப்படித்தான்!

பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் !

4 GB RAM, quardcore processor, 
128 GB in built memory என்று அனைத்துமே பார்த்து,
 அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsApp ல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன் ...

ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ...
ஒரு தொலைக்காட்சி பெட்டி ..
ஆனால் ...
இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை இல்லை ..
வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..!

கால மாற்றம் ....
இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது ..
 அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தா கூட செலுத்தியாகி விட்டது ...
எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை ... 
பயன்படுத்துவதும் இல்லை ...
வெத்து பந்தான்னு கூட சொல்லுவேன் ...
அப்படித்தான் ஆகிப்போச்சி பொழப்பு ...

அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்த முடிகிறது ...

எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது ...

இது ஒரு Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ...

வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடுகிறது ...

இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன ...
உணர்த்தவும் செய்தது ..

இப்போது பண வரவு, சகல வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த 
நெருக்கமான வாழ்வைத்தான் ...!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ....
நோ பீஸ் ஆப் மைண்ட் ...

இதை படிச்சவங்களுக்கு புரியுதோ, புரியலையோ ..
ஆனா ..
அனுபவிச்சங்க இதை கண்டிப்பா உணருவாங்க ...

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் …!!

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று,  மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.

அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிக அன்பு  கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன்  மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.

தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. 
எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.

 மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.

வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு  உணவளித்து வந்தான்.

சாம்பல் கயிறு.

ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.

சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை  கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.

போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு  உருவாக்க முடியவில்லை.

அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம்  தெரிவித்தான்.

போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால்  சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.

மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம்  காண்பித்து பரிசினைப் பெற்றான்.

அடி எது? நுனி எது?

ஒரு மாதம் கழித்து அரசன்  இரண்டாவது போட்டியை அறிவித்தான்.

அரசன் ஒரு மரக்கொம்பைக்  கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.

கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.

மரக்கொம்பை  வீட்டுக்கு எடுத்து வந்த மகன்  தந்தையிடம் காண்பித்து அரசனின்  கேள்வியைக் கேட்டான்.

தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.

அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.

அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்  ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.

வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.

அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து  தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.🗣
தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச்  சென்று  தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை   தயார் செய்” என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம்  தந்தான்.

அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை  அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள்  அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.

அனுபவம் தந்த பதில்கள்.

“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை  என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.

இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.

சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின்  அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.

உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு  கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.

அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.

ஆம்,

வயதான பெரியவர்கள் 
வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன்  கொடுத்த அருள் என்று உணர்வோம்.

நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் 
நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும்  gநமக்கான கடமை  மட்டுமல்ல நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம்.

தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும் மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும்
நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை 
என்றாலும் எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் 
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

பிள்ளைகளுக்கு சமர்ப்பணம்.

அப்பா எனக்கு நோட்புக்குகளுக்கு பிரவுன் கலர் அட்டை போட்டுத் தருவதை!!!

எங்கள் அப்பா அதிகம் படித்தவர். எங்களை நன்கு படிக்க வைத்தார்..! தன்னால் பாடங்கள் சொல்லித்தர no time  எங்கள் ஸ்கூல் காலம் வரையிலும் அவர் எங்கள் நோட்புக்குகளுக்கு பிரவுன் கலர் அட்டை போட்டுத் தருவதை ஒரு தவம் போல் செய்வார்..! ஸ்கூல் திறந்து, புது புத்தகங்கள், நோட்புக்குகள் வந்ததுமே குதூகலமாகி,  மைலாப்பூர்  சீத்தாராமன் அண்டு கோவிலிருந்து  அட்டை பேப்பர் வாங்கி வருவார்..! இரவு 9 மணிக்கு  நாங்கள் புத்தகங்கள், நோட்டுகளை கொண்டு வந்து வைத்து விட வேண்டும்..!  ஏதோ கிழங்கு + மைதாமாவில் வீட்டிலேயே செய்யும் கோந்து அம்மா ரெடி பண்ண வேண்டும்..! ஒரு நூல் கண்டு, கத்திரிக்கோல், பிளேடு, கோந்து எல்லாவற்றையும் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு தரையில் அமர்வார். அவசரம் இல்லாமல், கால்குலேட் செய்து, பேப்பர் வேஸ்ட் ஆகாத வண்ணம், சரியான அளவுகளில்,  அட்டைப் பேப்பரை மடித்து, அந்த மடிப்புக்குள் நூலை  வைத்து, ஒரு பக்கத்திலிருந்து சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று இழுத்தால் கச்சிதமாய்க் கிழியும் பேப்பர்...! பின்னர் புக்/நோட்டை அதற்குள் வைத்து, ஸ்கேல் வைத்து,  மிகச் சரியான 'செண்டர்' பார்ப்பார்..! அதை பென்சிலில் மார்க் செய்து கொண்டு, அந்த இடத்தில், கத்திரிக்கோலால்  ஒரு  quadrangular cut..! அதே போல, கவரின்  கார்னர்களில்  சுகுரான triangular cuts..! இதெல்லாம் ஒரு நிதானம் இருந்தால் மட்டுமே முடியும்..! பின்னர்  புக்கை உள்ளே வைத்து அட்டையை மடித்தால்,  அது பெர்ஃபெக்ட்டாக இருக்கும்..! கார்னரிலோ,  நடுவிலோ அட்டை துருத்தாது..! Fringes இருக்காது..! பின்னர், கோந்தைத் தடவி ஒட்டுவதிலும் பெர்ஃபெக்க்ஷன்..! அதிகமாக  கோந்தை வைத்தால் பேப்பர் சுருங்கும்..! ஒட்டி விட்டு, ஒரு துணியால் அழுத்தித்  துடைத்து விட்டுப் பார்த்தால், அட்டை புக்கோடு ஒட்டியே செய்யப்பட்டதோ என்று தோன்றும்..! அவ்வளவு  பக்காவாக,  டைட்ட்டாக, அதே சமயம் திறந்து  மூட லகுவாக இருக்கும்..! அத்தனை புக்குகள், நோட்டுகளுக்கும் நிதானத்துடன்,  சிரத்தையுடன், விடிய விடியச்  செய்வார்..! அட்டை போட்டு விட்டு,  மேல் வலது  கார்னரில், Bril Inks லேபில்களையும் ஒட்டி  அவர் கொடுத்தால், கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும்..!

பல ஆண்டுகளுக்குப் பின், என்  பெண் ஸ்கூல்  படிக்கும் போது, அவள் புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர  எனக்கு  நேரம் இருக்கவில்லை..!  அதற்கு என்று சில கடைகள்  இருக்க,  அங்கே கொடுத்து போட்டுக் கொள்வதுதான்..!  ஒரே ஒரு தடவை அவசரம் என்று  என் பெண் ஒரு நோட்டை என்னிடம் கொடுத்து அட்டை போட்டுத் தரச் சொன்னாள். நானும் முடிந்த அளவு செய்து கொடுத்தேன். அட்டை  தொளதொளவென்று  இருந்தது..! செண்டரில் சரியாய் கட் செய்யாமல் உள்ளிருக்கும் நோட்புக் துருத்தியது. முன்னும்  பின்னும் லீவரேஜ் அளவில் வித்யாசம்..! ஆனால் அதைச் செய்வதற்குள்ளேயே  எனக்கு முதுகுவலியும், அதனால்  எரிச்சலும் வந்தது..! எப்படியோ முடித்து விட்டு,   'அப்பாடா..' என்று, பெருமூச்சு விட்டு, அதை என் மகளிடம் கொடுத்து.. "என்னம்மா நல்லா இருக்கா..?"  அவள்: "தேங்கஸ்பா..! பரவாயில்லையே..!  எப்டி இவ்ளோ  நல்லா அட்டை போடுற..?"என் மனதிற்குள்  என் அப்பா வந்தார்..!  என் கண்களின் ஓரம் நீர் வந்தது..!

எனக்கு காது கேட்கவில்லையா?

தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ" என சந்தேகம் ஒருவருக்கு!!!

ஆனால் அதை  மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் !!!

தயக்கம் என்ன, பயம்தான் !!!

இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார்.

"இருபதடி தூரத்தில் இருந்து உங்கள் மனைவியிடம் ஏதாவது கேட்டுப்பாருங்கள்.

அவரிடமிருந்து பதிலில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்து சொல்லிப் பாருங்கள், பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள் !!!

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் அவர்களுக்கு காது கேட்கவில்லை என தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என டாக்டர் சொன்னார். கணவனுக்கு ஒரே குஷி.

உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்த படியே உள்ளிருந்த மனைவியிடம், "இன்று என்ன சமையல்?" எனக்கேட்டார்.

பதிலில்லை !!!
அடுத்து வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியை கேட்டார். 

அதற்கும் பதிலில்லை !!!

ஹாலில் இருந்து கேட்டார் !!! சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டார் !!! மனைவியிடமிருந்து பதிலே இல்லை !!!

போச்சு ரெண்டு ரிசீவரும் அவுட்தானென மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

கடைசி வாய்ப்பாக மனைவியின் காதருகே சென்று சத்தமாக “இன்றைக்கு என்ன சமையல் ?“ என கேட்டார்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரை கோபமாக திரும்பிப்பார்த்து", ஏன் 
இப்படி கத்துறீங்க ? நீங்களும் வாசல் கேட்டிலிருந்து, ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் 'சாம்பார், உருளைக்கிழங்கு மசியல்' ன்னு சொல்லிக்கிடேயிருந்தேனே, காதில விழலயா? காதுல என்ன ஈயத்தயா காச்சி  ஊத்திருக்கு" என பொரிந்து தள்ளிவிட்டார் !!!!!!

இப்போது தெரிகிறதா !!!! பிரச்சினை யார் காதில் என்பது?

இப்படித்தான் பிரச்சினையை நம்மிடம் வைத்துக்கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சுய சோதித்தறிதல்கள் நம்மை சீராக்கும்.

Tuesday, August 20, 2019

Business struggling or Economy struggling

Economy is not struggling...the business models are changing.

Below is a very interesting insight :

Often heard nowadays that
"indian Economy is struggling".

Sit back & dispassionately think "is the economy really struggling *or*  are business models struggling ?"

Some food for thought:

1) Car sales are going down... but Ola / Uber are rising.

2)  Restaurants are going empty... but home delivery is rising

3) Tuition classes are not getting students but online studying is rising

4) Traders are struggling but online market sites and reference based direct selling are breaking all records in sales.

5) Old commission based businesses are snivelling... but online services, at low cost, are finding takers.

6) Cell phone bills have reduced & internet penetration is increasing.

7) Stable (read "Govt Jobs") are dwindling but "Start up jobs" offering equity & Flexi work time are expanding.

8) Jobs seekers are reducing but job creaters are on the rise. Working 40 hrs a week for 40 years is trend of past. Working for few years and spending quality time in contributing to society is the trend.

If truth be told what we are experiencing is a transition phase.

& Any transition is painful for the "well set"...... "the masters of the past".

It's challenging for those who's business models are based on ancient data....

It's a mystery for those who have never looked beyond traditional methods or have assiduously resisted change of any kind.

Economy is not struggling...the business models are changing.

Friday, August 16, 2019

தேவி

The 9 avataars of a Devi in our everyday lives....

PART I

1. Morning rush hour, office work... Ashtabhujangni.

2. Teaching her children.... Saraswati.

3. Saves money from her household expenses... Mahalakshmi.

4. Puts food on a plate for her family.... Annapurani.

5. Stands firmly with her family in the hour of need.... Parvathi.

PART II

6. Hubby puts a used wet towel on the bed... Durga Devi.

7. Hubby doesn't want to discuss about the Holiday Plans... Kali Devi.

8. Hubby Doesn't appreciate her Saree... Mahishasurasam mardhini.

9. Hubby praises qualities in another woman... Bhavani.

புராண கதை

முழு அர்த்தம் தெரிந்து படித்து, உணர்ந்து,  பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே:

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*

'அப்படியென்றால்..??'

* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண,  நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்.
புன்னகைத்தார் கடவுள்!

🙏 ஒரு அற்புதமான பதிவு. முழு அர்த்தம் தெரிந்து படித்து, உணர்ந்து,  பகிர்ந்து மகிழ்வோம் நண்பர்களே:🙏