Showing posts with label appreciation. Show all posts
Showing posts with label appreciation. Show all posts

Wednesday, April 27, 2022

congratulating

பாராட்டு

அதில் பொதுவாகவே 
நான் கொஞ்சம் Weak தான்.

நிறைய பேருக்கு அது தெரியாது.

நம் வேலை முடிந்தால் அடுத்த வேலைக்குப் பறப்போம். System அப்படி.

பாராட்டுவதற்கு முதலில் பெரிய மனசு வேண்டும். அது இல்லை மனசு இருந்தால் போதும்.

பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும். ஏன் உங்களுக்கே யாராவது பாராட்டினால் பிடிக்கும்.

குழந்தைகள் சிறப்பாக செய்தால் *சூப்பர்டா குட்டி* என்று பாராட்டி பாருங்கள். குழந்தைகளின் முகம் மலரும். 

அகம் மலரும். ஆனந்தம் மலரும்.

குடும்பத்தாரோடு உணவருந்தும் போது, உணவு சுவையாக இருந்தால் மனம் விட்டு பாராட்டுங்கள். நிறைய பேர் இதை செய்வதில்லை. *இயந்திரத்தனமாக தட்டில் என்ன இருக்கிறது* என்று கூட தெரியாமல் விழுங்குவார்கள். சுபாவத்தை மாற்றிப் பாருங்கள்.

சுற்றி இருப்பவர்களையும் சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சங்கோஜமின்றி பாராட்டுங்கள்.

அவர்கள் மனம் மகிழ்வதோடு மட்டுமல்ல, உங்களுக்குள் இருக்கும் மன இறுக்கமும் விலகும்.

உங்களுக்கும் உடல் ரீதியில் மனரீதியில் 
பல நன்மைகள் விளையும்.

*செலவில்லாத ஒரு Best gift.*

பொதுவாக உணவகத்திற்கு சென்றால், புறப்படும் போது உணவை பரிமாறிய
Bearerக்கு நன்றி சொல்வது என் பழக்கம். 

ஆர்டர் எடுக்கும் போதே அவர் பெயரை கேட்டுத் தெரிந்து கொள்வேன். *நல்லா serve பண்ணீங்க முருகேசு* என்று சொல்லும் போது அவர் முகமும் அகமும் மலரும்.

*The sweetest thing in the world is a person's own name.*

உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கனிவாக பேசுங்கள். சூழ்நிலையே மாறும்.

ஒரு முறை Star Hotel ஒன்றில் நண்பருடன் உணவருந்தும் சந்தர்ப்பம். ஒரு dish மிக அருமையாக இருந்தது. ரசித்து சாப்பிட்டோம். Bearer வசம் உணவு சிறப்பாக இருந்தது என்று எங்கள் Compliment ஐ Chief Chef வசம் சொல்லுங்கள் என்று கூறினோம். 

நாங்கள் Bill pay பண்ணுவதற்குள் Chief Chef எங்கள் டேபிளுக்கே மகிழ்ச்சியோடு வந்து எங்களுக்கு நன்றி சொன்னார்.

மிகவும் எளிமை பாராட்டுவது. வாழ்வில் பல மகிழ்ச்சியான தருணங்களைத் தரும்...!!!
👍🤝👍🤝👍